Showing posts with label காசு. Show all posts
Showing posts with label காசு. Show all posts

Saturday, 28 March 2015

Roman coin உரோமானிய நாணயம்

கோவை மாவட்டம் வெள்ளலூரில் கண்டெடுக்கப்பட்ட நாணயம்.
2100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
முசிறிஅலெக்ஸாண்ட்ரியா வணிக ஒப்பந்தத்தை மெய்ப்பிக்கும் 2100 ஆண்டுகள் பழைமையான ரோமன் காசுகள் 

விளக்கம் 1
விளக்கம் 2

Sunday, 14 December 2014

பழைய காசுகள்

இங்கே பழைய காசுகளின் படப்பதிவுகள் உள்ளன
அறிஞர் ஒருவர் இந்தக் காசுகள் பற்றிய விளக்கம் தந்துகொண்டிருக்கிறார்
கல்வெட்டியல் வல்லுநர் சுப்பையா இந்தப் படங்களை எனக்கு e-mail செய்திருந்தார்.
உலக அரங்குக்குக் கொண்டுவரவேண்டும் என்பது அவர் விருப்பம்
படங்களுக்கு எண் குறியீடு செய்து அவற்றை இங்குப் பதிவேற்றியுள்ளேன்

யாருடைய காசு
என்ன படம் உள்ளது
என்ன எழுதப்பட்டுள்ளது
காலம்

முதலான விவரங்களை அறிஞர் பெருமக்கள் தந்து உதவ வேண்டுகிறேன்
உதவிய அறிஞர் பெயரில் அவற்றைப் பதிவேற்ற விரும்புகிறேன்

எதையும் தெரிந்த செய்திகளுடன் ஆவணப்படுத்தி உலகுக்கு அளிப்போமாக

1

2

3

4

5

6

7

8

9

10

11

12 

Saturday, 29 March 2014

பண்டைய தமிழர் காசு - முதலாம் குலோத்துங்கச் சோழன்

முதலாம் குலோத்துங்கச் சோழன் கி.பி. 1070-1120 ஆண்டுக்காலத்தில் நாடாண்டவன். இது தங்கக் காசு. இது இவனது 36-வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்தக் காசின் நடுவில் இரட்டை-மீன், அமர்ந்திருக்கும் புலி, வில் ஆகியவை இரண்டு விளக்குக் கம்பங்களுக்கு இடையில் உள்ளன. சுற்றிலும்
மலைநாடு கொண்ட சோலா
என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வடமொழி எழுத்துக்கள்
குலோத்துங்கள் மலைநாடு எனப்பட்ட சேரநாட்டை வென்றான்.

படமும் செய்தியும் நன்றி

பண்டைய தமிழர் காசு - இராசேந்திர சோழன்

இராசேந்திர சோழன் கி.பி. 1014-1044 ஆண்டுக்காலத்தில் அரசாண்டுவந்தான்
அவனது செப்புக்காசு

இடப்புறம் வில். சேரனை வென்றதன் அடையாளம். அடுத்து புலி. இது சோழர் சின்னம். வலப்புறம் இரட்டை மீன். இது பாண்டியனை வென்றதன் அடையாளம் இருமருங்கிலும் விக்குக் கம்பங்கள். எல்லாவற்றுக்கும் கீழே வடமொழி எழுத்துக்கள்.
கங்கை தா சோலா 
என்னும் எழுத்துக்கள்
நன்றி

பண்டைய தமிழர் காசு - உத்தம சோழன்

உத்தம சோழன் காலம் கி.பி. 973-985
செம்பு

வெண்கொற்றக் குடை நிழலில் இரண்டு புலி 
இந்தக் காசின் அடுத்த பக்கம்

நன்றி 

Friday, 28 March 2014

பண்டைய தமிழர் காசு - பாணர்

மதுரையை ஆண்ட பாணர் காசுகள் இவை

நன்றி - மேலும் படங்கள்

பாணர் காசு 
பாணர் காசு பிற்காலத் தமிழ் எழுத்துக்களுடன்.

பண்டைய தமிழர் காசு - இராசராசன்

இராசராசன் காசு 2
இராசராசன் காசு 1
இராசராசன் காலம் கி. பி. 980-1014
செம்பு
நன்றி - மேலும் காசுகள்

பண்டைய தமிழர் காசு - கொங்குச் சேரர்

இது கொங்குச் சேரர் காசு.
ஒரு பக்கம்
இது கொங்குச் சேரர் காசு.
மறு பக்கம்


மற்றொரு காசின் ஒரு பக்கம்
மற்றொரு காசின் ஒரு பக்கம் சேரன் புலிக்கொடி சோழனையும் மீன்கொடிப் பாண்டியனையும் வென்றான்
நன்றி

பண்டைய தமிழர் காசு - மலையமான்


மலையமான் காசு.

இதில் பொறிக்கப்பட்டுள்ள குதிரையின் பெயர் காரி

மலையமான் சங்ககால அரசன் (புறநானூறு 46)
மலையமான் திருமுடிக்காரி மலையமானின் மகன் (புறநானூறு 121, 122, 123, 126)
முள்ளூர் இவர்களின் தலைநகர்.

மலையன் என்னும் மலையமான் 'காரி' என்னும் குதிரை மீதிருந்து போரிட்டு வென்றவன் (காரி ஊர்ந்து பேரமர் கடந்த மாரி ஈகை மறப்போர் மலையன் - புறம் 158)

''காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரி" (சிறுபாணாற்றுப்படை 110)

இது இந்தக் காசின் மறுபக்கம்.

நன்றி


பண்டைய தமிழர் காசு - பல்லவர்

பல்லவர் காசு
பல்லவர் சின்னம் காளை
இதன் உருவம் நந்தி.
படுத்திருக்கும் காளை.
சிவன் கோயில்களில் இருக்கும் நந்தி.

காசு முத்திரைநில் உள்ள காளை ஆயர் போரிடும் காளை.

ஏறு தழுவல் என்னும் சல்லிக்கட்டு அல்லது காளைப்போர் சங்ககால வீர-விளையாட்டு.
நன்றி

பண்டைய தமிழர் காசு - பாண்டியர்

பாண்டியர் செப்புக்காசு
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு
சங்ககாலம்

யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.

நன்றி

பண்டைய தமிழர் காசு - சேரர்

சேர அரசரின் தங்கக் காசு
கி.பி. 13 ஆம் நூற்றாண்டு

சங்ககாலச் சேரரின் வழிவந்த கொங்குச்சேரர் கோவைப் பகுதியில் ஆண்ட காலம்.

அணிகலன் பூட்டப்பட்ட யானை

சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சாசின் இரண்டு பக்கங்கள்

நன்றி

பண்டைய தமிழர் காசு - சேரர்

இது சங்ககாலச் சேரர் செப்புக்காசு
யானைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
நாற்புறமும் அச்சு முத்திரைப் பதிவுகள் உள்ளன.

ஒப்புநோக்கத் தக்கவை

பல்யானைச் செல்கெழு குட்டுவன்
யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
வேழம் உடைத்து மலைநாடு - தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்களைப் பாடிய ஔவையார்.

சேர மன்னர்களின் பொறை அரசர் தலைநகரம் கருவூர். இங்கு பாயும் அமராவதி ஆற்றுப்படுகை, கேரள மாநிலம் பெரியாற்றின் தென்கரையிலுள்ள பரூர் (சங்ககாலப் பெயர் பந்தர்) முதலான இடங்களில் சேரர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளன. இலங்கையின் வடபகுதியில் உள்ள கந்தரோடையில் ஒரு காசு கிடைத்துள்ளது.
நன்றி 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி