Showing posts with label களவழி40. Show all posts
Showing posts with label களவழி40. Show all posts

Saturday, 4 February 2017

களவழி நாற்பது 41+ KalaVali Natrpatu 41+

மிகைப்பாடல்
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும் செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.  

படை படையாக மலர்களை அடுக்கிப் பொலிவுறும்படித் தொடுக்கப்பட்ட தார்மாலை அணிந்த மன்னரின் குடலைத் தின்றுகொண்டு அவர்களின் கொற்றக் குடையின் பக்கத்தில் உறங்கும் இகலன் (பருந்து) நிலாவில் தோன்றும் முயல் போல் காணப்பட்டது. அரசன் செம்பியனின் செங்கண் மேலும் சிவந்த போர்க்களத்தின் நிலைமை இது.
  • குடை – மதியம்
  • இகலன் – முயல் (நிலவில் தோன்றும் நிழல்)

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 41 KalaVali Natrpatu 41

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து.     41

நெஞ்சில் பாய்ந்திருக்கும் வேலோடு வயவர் என்னும் போர் வாரர்கள் போர்களத்தில் ஏறி நடந்தனர். அவர்களது கால்கள் நிலை கொள்ளாமல் தள்ளாடிக் கலங்கின. தானே நிலத்தில் வீழ்ந்தனர். நிலத்தில் கிடக்கும் அவர்களது காதானது நிலம் சொல்லிக்கொண்டிருக்கும் மறை (வேதம்) மொழிகளைக் கேட்பது போல் காணப்பட்டது. அரசன் பாய்புனல் நீர்நாடன் தன்னுடன் சேராதவர்களை அழித்த போர்க்களத்தின் நிலை இது. இந்த நீர்நாடன் இடி போல் பாடி முழங்கும் முரசினை உடையவன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 40 KalaVali Natrpatu 40

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உழுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து. 40

வெள்ளியால் செய்த கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுவது போல், தந்தங்கள் நிலத்தைக் குத்த எல்லா யானைகளும் போர்க்களத்தில் கிடந்தன. செங்கண் சினமால் அம்பு மழை பொழிந்த போர்க்களத்தில் இந்த நிலைமை. அரசன் செங்கண் சினமால் பல வேல்-படைகளை முரசு முழக்கும் தானையோடு கொண்டவன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 39 KalaVali Natrpatu 39

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து.  39

புனல்நாடன் வஞ்சிக்கோவைப் போர்க்களத்தில் அழித்தான். வலிமை என்னும் காலை ஊன்றிக்கொண்டு மறவர்கள் தாக்கிக்கொண்ட போர் இது. இப் போரில் கொற்றக்குடை கால் முரிந்து போய் பருத்தி பறிக்கும் கூடைபோல் போர்க்களத்தில் காணப்பட்டது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 38 KalaVali Natrpatu 38

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து.   38

யானையின் மேல் கட்டப்பட்ட அம்பாரியால் (பருமப் பணை) யானையின் முதுகு புண்ணாகிப் பகையரசர் யானை மண்ணில் விழுந்து புரண்டது. அது புரள்வது இடி தாக்கப்பட்டுப் பாம்பு புரள்வது போல இருந்தது. செம்பியன் போரிட்ட களம் இது. செம்பியன் போர்த்திற உடல்-கட்டு கொண்டவன். மார்பில் பொன்னாலான ஆரம் அணிந்தவன். காலில் கழல் அணிந்தவன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 37 KalaVali Natrpatu 37

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.   37

அரசன் புனல்நாடன் கொன்ற பகையரசர்களின் குருதி (நெய்த்தோர்) பகையரசரின் முரசுகளையும், தந்த முத்து கொண்ட யானைகளையும் இழுத்துச் சென்றது. இந்தக் காட்சி அலை மோதும் கடலில் அம்பி செல்வது போல் தோன்றிற்று. இது புனல்நாடனின் போர்க்களக் காட்சி.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 36 KalaVali Natrpatu 36

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.    36

ஓஒ! ஒரே வியப்பு. ஒத்திட்டு உவமை (உவமன்) கூற இயலவில்லை. என்றாலும் ஒத்திட்டுப் பார்க்கிறேன். காவிரிநாடன் கழுமலம் (சீர்காழி) ஊரைக் கைப்பற்றினான். காவிரி நாடன் குதிரையில் ஏறிக் குதிரையைக் காலால் உதைத்தான். விளைவு, மாற்றரசர் வெண்கொற்றக் குடைகள் எல்லாம் கீழது மேலாகத் திரும்பி நிலத்தில் கிடந்தன. பசு மேயும்போது மூக்கால் ஒதுக்கித் தள்ளிய காளான் போல் கிடந்தன. புனல்நாடன் தன்னை விரும்பாதவர்களை அழித்த போர்களத்தின் நிலை இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 35 KalaVali Natrpatu 35

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து.   35

செம்மையான மலையின் உச்சி. அங்கு, சிங்கம் வயிற்றை மெல்லிதாக்கிக்கொண்டு உருமிற்று. பிற விலங்குகள் அஞ்சி ஓடின. அதுபோல காவிரிநாடன் முழக்கம் கேட்டு போற்றத்தக்க பகையரசனும் அவனது யானையும் போர்களத்தில் மறைந்தனர். போரிட்ட களிற்றின் பெண்யானையாகிய பிடியும் ஆண்யானையின் பிரிவால் மடிந்தது. காவிரிநாடன் போர்க்கள அம்மாவாசை நாள் இது. பகையரசன் நிலா மறைந்த அம்மாவாசை. காவிரிநாடனின்  காவிரி கரையை உடைத்துக்கொண்டு ஓடும்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 34 KalaVali Natrpatu 34

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து. 34

ஆளை இடரும் போர். போரை ஏற்று மைந்தர் எழுந்தனர். அவர்கள் சுடர் வீசும் வேலை எறிந்தனர். அதனால் எதிரியின் குடர் சரிந்தது. சரிந்த குடரை நரி இழுத்துக்கொண்டு ஓடிற்று. இந்தக் காட்சியானது சங்கிலியில் கட்டப்பட்ட நாய் போலத் தோன்றியது. அரசன் பைம்பூண் சேய் பகைவரோடு போரிட்டு அவர்களை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 33 KalaVali Natrpatu 33

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்,
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து.   33

நீர் தேங்கி நிற்கும் ஏரி உடைந்து அதன் நீர் பாயும் இடங்களிலெல்லாம் சிவந்த நெய்தல் இலைகளுக்கு இடையே வாளை மீன்கள் பிறழும். அதுபோலத் தூய்மையாக ஒளிரும் வேல் இலைகளுக்கு இடை இடையே வாள்கள் வாளைமீன்களைப் போலப் பிறழ்ந்து தாவின. செம்பியன் பகைவரை அழித்த போர்க்களக் காட்சி இது. செம்பியன் கழுத்து மயிர் கத்தரிக்கப்பட்ட குதிரைப் படையும், கொடி பறக்கும் தேர்ப் படையும் கொண்டவன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 32 KalaVali Natrpatu 32

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து.  32

நிலம் என்னும் நல்லவள் மாசு இல்லாத பெரிய மேனியைக் கொண்டவள். அவள் செந்நிற ஆடை போர்த்திக்கொண்டது போல அரசன் தன்மேல் சினம் கொண்டவரை அழித்த போர்க்களம் குருதி மூடிக் காட்சி தந்தது. அரசன் நீர்நாடன். பூந்தார் அணிந்தவன். முரசு முழக்கும் படை கொண்டவன். காவிரி ஆற்றுப் புனல் மோதிப் பாயும் நாட்டை உடையவன்.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 31 KalaVali Natrpatu 31

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து.   31

புறங்கொடாத மறவர் யானையின் நெற்றியில் தம் வேலை வீசினர். அது யானையின் நெற்றியிலிருந்த ஓடையைப் பிளக்கும்போது வானம் மின்னுவது போலத் தோன்றிற்று. புனல்நாடன் பகைவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 30 KalaVali Natrpatu 30

மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து.  30

மலை மடங்கும்படி மழை பொழிந்து அதன் நீர் மலைப் பாறைகளை உருட்டுவது போல, பாயும் குருதி கொல்லப்பட்ட யானைகளை இழுத்துச் சென்றது. அரசன் ‘செங்கண் சினமால்’. பிறரால் கட்டுப்படுத்தி அடக்க முடியாத உடல்கட்டோடு போர்த்திறம் கொண்டவன். அவன் தனக்கு அடங்காதவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 29 KalaVali Natrpatu 29

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயில் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப செங் கண்
சின மால் பொருத களத்து.  29

மணம் கமழும் காட்டில் புயல் வீசும்போது மரங்களில் காற்று மோதும் வெடியோசை கேட்டு மயிலினம் நாலாத் திசைகளிலும் ஓடுவது போல, போர்க்களத்தில் தம் உறவினர்களை இழந்தவர்கள் கலங்கி ஓடினர். அரசன் ‘செங்கண் சினமால்’. அவன் போரிட்ட களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 28 KalaVali Natrpatu 28

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.   28

புறங்கொடாத மறவர் சினத்தோடு போரிட்டனர். உடலிலுள்ள மதத் திணவோடு போரிட்டனர். பெருமை மிக்கவரைத் தாக்கிப் போரிட்டனர். பகைவர் கையை வெட்டி அந்தக் கையை அது பிடித்திருக்கும் கேடயத்தோடு தூக்கிக்கொண்டு ஓடினர். பகைவனிடம் காட்டினர். அப்படிக் காட்டுவது அவர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பது போலத் தோன்றியது. அரசன் புனல்நாடன் தன்னிடம் அடைக்கலம் புகாதவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 27 KalaVali Natrpatu 27

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.         27

சிவந்த சேற்றைச் சீறி மிதித்துக்கொண்டு யானை குருதி நிலத்தில் நின்றது. அது திருவிழாவில் பூநீர் தெளிக்க நிறப்பி வைக்கப்பட்டிருந்த மிடா போலக் காணப்பட்டது. அரசன் புனல்நாடன் தன்னை விரும்பாதவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 26 KalaVali Natrpatu 26

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து.  26

போர் வீரர்கள் எல்லாப் பக்கங்களிலும் ஓடிப் பகைவரின் கைகளை வெட்டித் துண்டாக்கினர். சிவந்த காதுகளைக் கொண்ட பருந்துகள் அந்தக் கைகளைத் தூக்கிக்கொண்டு பறந்தன. ஐந்து விரல்களைக் கொண்ட அந்தக் கையானது ஐந்து தலை கொண்ட நாகம் போலவும், ஐந்தலை நாகத்தை கருடன் தூக்கிக்கொண்டு ஓடுவது போலவும் அது காணப்பட்டது. அரசன் புனல்நாடன் பகைவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 25 KalaVali Natrpatu 25

மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து.    25

மலை கலங்கும்படி மற்றொரு மலை அதன்மீது பாய்வது போல, யானையோடு யானை மோதிற்று. யானை மேல் கட்டப்பட்டிருந்த கொடிகள் முரிந்து வானத்தைத் துடைப்பன போல வானத்தில் பொங்கிப் பறந்தன. அரசன் புனல்நாடன் தன்னை விரும்பாதவரை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 24 KalaVali Natrpatu 24

திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து.   24

வலிமை மிக்க போர் வீரர்கள் வெட்டி வீழ்த்திய வீரர்களின் தலைகள் நாலாத் திசைகளிலும் புரண்டன. சூறாவளிப் பெருங்காற்று அடித்துப் பனந்தோப்பில் பனங்காய்கள் விழுந்து கிடப்பதுபோல அந்தத் தலைகள் காணப்பட்டன. கண்ணுக்கினிய ஆத்தி மாலை சூடியவன் காவிரிநீர் நாடன். அவன் தன்னை நாடாதவர்களை அழித்த போர்க்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

களவழி நாற்பது 23 KalaVali Natrpatu 23

எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து.   23

போர்-வீரர்கள் களிற்றின் மேல் தாவி அதன் நெற்றியைப் பிளந்தனர். யானை விழுந்தது. அதன் உடம்பு குருதி வெள்ளத்தில் மிதந்தது. அது சிவந்த வானத்தில் கருமேகங்கள் மேய்வதுபோலக் காணப்பட்டது. அரசன் செம்பியன் வெற்றிவேல் தாங்கும் படையை உடையவன். கொடி பறக்கும் வலிமையான தேரில் போருக்குச் செல்பவன். தன்மீது சினம் கொண்டவரை அவன் அழித்த போர்களத்தின் காட்சி இது.

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழன் செங்கணான் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. இதனைப் பாடியவர் பொய்கையார். இது சங்ககால நூல்

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி