Showing posts with label கலித்தொகை. Show all posts
Showing posts with label கலித்தொகை. Show all posts

Thursday, 6 July 2017

கலித்தொகை 150 Kalitogai 150

ஆதிரையான்
கொன்றையான்
நீர் சடையான்
ஏற்று ஊர்தியான்
பிறை சூடி
சண்பக மாலையான்
சிவன்
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்
1
தேன் ஊற்று திகழும் கொன்றை மாலை அணிந்த சிவபெருமான் வானத்தில் இயங்கிய முப்புரக் கோட்டைகளை எய்தபோது எழுந்த தீயைப் போல கதிரவன் தாக்கிய வெயிலால் மூங்கிலில் தீ பற்றி வெடிக்கும் முழக்கத்துடன் வழி நெடுக வானளாவத் தீ பற்றி எரியும் கொடுமையான காடு அது.
2
இப்படிப்பட்ட  காட்டு வழியைக் கடந்து சென்று பொருளை ஈட்டிவர வேண்டும் என்னும் ஆசையால் உன்னிடம் நடந்துகொள்ளும் அறநெறியைக் கைவிட்டுவிட்டுச் சென்றுள்ளார். கங்கை நீரைத் தன் சடையில் மறைத்து வைத்திருக்கும் சிவபெருமானைப் போன்று பொன் நிறம் கொண்டிருந்த உன் மேனியில் பசலை பாயும்படி விட்டிருக்கிறார்.  உன்னை முற்றிலும்மாக விட்டுவிடுவாரா? விடமாட்டார்.
3
யானை பசியால் காய்ந்து திரியும் வழியில், கல்லில் வெயில் சூடு பறக்கும் காட்டில், அச்சம் தரும் வழி என்று எண்ணாமல், விழுமிய பொருள் ஈட்டிவரச் சென்றுள்ளார். அச்சம் தரும்  காளை மேல் ஏறி வரும் சிவபெருமான் சிரிப்புப் போன்ற சிவந்த உன் உருவழகை இழந்து இவ்வாறு இருக்கும்போது அவர் உன்னையே எப்படி நினைத்துக்கொண்டிருக்க முடியும்? 
4
வெயில் கொதிக்கும் குன்றில் ஏறிப் படரும் கொடி கொண்ட குன்று வழியில் அவர் செல்கிறார். ஒதுங்குவதற்க்குக் கூட இடமில்லாத வழி அது. விழுமிய பொருளை ஈட்டிக்கொண்டு வரவேண்டும் என்னும் ஆசையால் அந்த வழியில் அவர் சென்றுள்ளார். புது நிலாவாகிய பிறையைச் சிவபெருமான் தன் தலையில் கண்ணியாகச் சூடிக்கொண்டதும் அது வளர்ந்தது போல நீ உன் கூந்தல் அழகுடன் திகழப்போகிறாய். நீ வருந்தும் இந்த  நிலையில் அவர் உன்னைக் காண்பாரா?
5
இப்படி எண்ணித் தெளிவு பெறு. பெறற்கரிய திருவாதிரை நாளுக்கு உரியவனாகிய சிவபெருமான் அணிகலனாக அணிந்துகொண்டிருக்கும் குளுமையான சண்பகப் பூ போல அவர் வாக்கு பொய் படாமல் வந்துவிடுவார் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். இருண்ட ஈரமான கூந்தலும், மடப்பத் தன்மையும் கொண்டவளே! அவர் வந்துவிடுவார் என்னும் உண்மையைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

தோழி கூற்று
1
அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,    5
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்
2
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?   10
3
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
4
கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,  15
'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,
புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?
5
ஆங்கு

அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த  20
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே!

பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - நெய்தல்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 149 Kalitogai 149

செயல் விளைவு
தோழி கூற்று

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் திமில் படகுகளை யானைப் படையாகவும், கடலலை ஓசையை முரசுப் பறையாகவும், கடலிலிருந்து கரைக்குச் செல்லும் பறவைகள்  ஆள்படையாகவும் கொண்டு அரசன்  போருக்குச் செல்வது போலத் தோன்றும்  சேர்ப்பு நிலத் தலைவனே! கேள். 

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,   5
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்

கல்வி கற்பித்தவன் நெஞ்சம் வருந்துமாறு உணவுப் பொருள்களை ஆசிரியனுக்கு வழங்காதவன் தானே தேய்ந்துபோவான். கற்ற வித்தையைச் சொல்லித்தரும் ஒருவன் தப்புத் தப்பாகக் கற்பித்துவிட்டு மாணவனிடம் பெற்ற செல்வம் தானே தேய்ந்துபோகும். வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப  உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும். 

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன்  10
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்

உறவினர்களின் நெஞ்சம் பதைபதைக்கச் சேர்த்த செல்வம் தானே தேயும். முயற்சி இல்லாதவன் குடி போலத் தானே தேயும். சூள் உரைத்தவன் செயல் பொய்யானால் அவன் வாள் நல்லதாக இருந்தாலும் அது அவனையே திருப்பித் தாக்காது விடாது.

ஆங்கு

அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல,  15
துணை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

எல்லாமே இப்படித்தான் நடக்கும். அதனால், பெருமானே! சினம் கொண்ட பகைவேந்தன் கோட்டையைத் தாக்க வளைத்துக்கொண்டிருக்கும்போது உள்ளே இருக்கும் குடிமக்களின்  வேதனை போல என் தலைவி நீ இல்லாமல் வருந்துகிறாள். இந்த வருத்தத்தின் விளைவு உன்னைத் தாக்காமல் விடாது. - தோழி தலைவனைக் கண்டு இவ்வாறு கூறுகிறாள்.

வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது.

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 148 Kalitogai 148

மாலைக்காலம் வர, அவள் புலம்புகிறாள். 
1
கதிரவன் தொன்றுதொட்டுத் தன் தொழிலைச் செய்துவருகிறது. வல்லவன் ஒருவன் தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கடமையைச் செய்வது போல் கதிரவன் செயல்படுகிறது. பின் தன்  கதிர்களை மலையில் ஊன்றி நம் கண்ணின் பயன் கெடுமாறு மறைகிறது. அல்லது செய்பவன் அருளைப் போலியாகக் காட்டும் முகம் போல வளமான கடலலை நீரில் ஏறி இருளைப் போக்கிக்கொண்டு மதி வருகிறது. இல்லாதவர்கள் ஒடுங்குவது போல கழியில் உருக்கும் பூக்கள் கூம்புகின்றன. இப்படிச் செய்துகொண்டு என் உயிரை மருட்டியவண்ணம் மாலைப்பொழுது வருகிறது.
2
மாலைக்காலமே, இன்பம் துய்ப்பவர்களுக்கு நீ கருவாக இருக்கிறாய். அன்பு கொண்டவரை அல்லலில் ஆழ்த்தித் துன்பப்படச் செய்தல் உனக்குத் தகுமா?
3
மாலைக் காலமே, கூடியிருப்பவர் காமத்தை எரியும்படிச் செய்கிறாய். என் நலத்தைக் கொண்டுசென்றவர் எனக்கு அளி செய்யாதபோது துன்புறும் எனக்கு வருத்தும் பேய் போல் வருகிறாயே, இது தகுமா?
4
மாலைக் காலமே, என் கணவனை நீ கொண்டுவந்து தரவில்லை. எனக்கு நீ துணையாக இல்லை. பிரிந்திருப்பவர்களுக்கு நோயை உண்டாக்குகிறாய். சேர்ந்திருப்பவர்களுக்கு அவர்கள் ஏறி உலாவப் படகாக உதவுகிறாய். இப்படித் திருந்தாத செயல்களைச் செய்வதைத் தவிர வேறு பிழைப்பு உனக்கு இல்லையா?
பார்த்தவர்கள் சொல்கின்றனர்.
5
என்றெல்லாம் அவள் புலம்பிக்கொண்டிருந்தபோது அவளது காதலன் திரும்பி வந்து சேர்ந்தான். பகைவர் நாட்டைக் கைப்பற்றும் செயலை நிறைவேற்றிக்கொண்டு திரும்பி வந்தான். அவன் வந்ததும் இருள் பரப்பினை பகல் நீக்குவது போல அவன் வரவு அவள் துன்பத்தைப் போக்கியது. 

தலைவியின் வருத்த மிகுதி கண்டோர் கூற்று
1
தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு,
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல்,
கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர;
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல,
மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப;   5
இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப;
செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை!

2
மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்;
அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய   10
துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?

3
மாலை நீ
கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்;
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு?   15

4
மாலை நீ
எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை;
பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி,
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?

5
என ஆங்கு   20

ஆய் இழை மடவரல் அவலம் அகல,
பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல,
போய் அவர் மண் வௌவி வந்தனர்
சேய் உறை காதலர் செய் வினை முடித்தே

'வெளிப்படை தானே கற்பினொடு ஒப்பினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக,வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை' என்பதனான், அரசன் மண் கோடற்கு ஏவுதலின்,வாளாண் எதிரும் பிரிவின் கண், தலைவன் வரைவிடை வைத்து வேந்தற்கு உற்றுழிப் பிரிந்துழி,அவள் வருத்த மிகுதி கண்டார் கூறியது (31)

தரவு - தாழிசை 3 - தனிச்சொல் - சுரிதகம்
நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 147 Kalitogai 147

கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய,
தேறுகள் நறவு உண்டார் மயக்கம்போல், காமம்
வேறு ஒரு பாற்று ஆனது கொல்லோ? சீறடிச்

தேற விளைந்த நறவுக் கள்ளினை உண்டவர் முறையற்ற குழறு மொழி பேசிக்கொண்டு அறமல்லாத செயல்களைச் செய்யும் மயக்கம் போலக் காமமானது வேறொரு பகுதியினைக் கொண்டதோ?

சிலம்பு ஆர்ப்ப, இயலியாள் இவள் மன்னோ, இனி மன்னும்
புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக,   5
வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன்
தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு,
ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்: தோழி! ஓர்   10
ஒண்ணுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ?

அன்று இவள் சிலம்பொலி கேட்க நடந்தவள் ஆயிற்றே. இன்று  ஊரே அற்பமாக எண்ணும் தோற்றம் பெற்றிருக்கிறாளே. அவள் காலில் அணிந்திருக்கும் சிலம்பு கால்-விலங்கு போல் ஆகிவிட்டதே. வேலின் கூர்மை போன்ற பார்வையைச் செலுத்தி வெயில் போல் மின்னி, இவற்றைப் பார்த்து உருகி இவளது தோள் நலத்ததை உண்டவனை இவள் அல்லவா கெடுத்திருக்கிறாள். இப்போது தெருவில் உணவு ஏதும் உண்ணாதவளாக உயிரினும் சிறந்த நாணம் ஏதும் இல்லாதவளாக தானே சிரித்துக்கொள்கிறாளே. அத்துடன் பெண்மையும் இல்லாதவளாகி அழவும் செய்கிறாளே. தோழி! இப்படி ஒரு அழகிக்கு நேர்ந்துள்ளதை அவளிடம் சென்று  கேட்போம். - தலைவியின் நிலையைக் கண்டவர்கள் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர். 

இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ? ஓஒ!
அமையும் தவறிலீர் மற்கொலோ நகையின்
மிக்கதன் காமமும் ஒன்று என்ப; அம் மா
புது நலம் பூ வாடியற்று, தாம் வீழ்வார்   15
மதி மருள நீத்தக்கடை

அவர்கள் கேட்க, தலைவி சொல்கிறாள் - இவர்கள் யார்? என் மேல் இரக்கம் காட்டுக்கின்றனர். ஓ ஓ சரிதான். இவர்கள் தவறு ஏதும் இல்லாதவர்கள். பயித்தியம் போலச் சிரிப்பதும்  காமமும் ஒன்று என்று  சொல்வார்கள். என் மேனி புதுநலப் பூ வாடியது போல் உள்ளது. நான் விரும்புபவர் என் புத்தி கெடும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டார், அதனால்தான் இந்த நிலை. 

என்னையே மூசி, கதுமென நோக்கன்மின் வந்து
கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர்
சில மழைபோல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை
விலை வளம் மாற அறியாது, ஒருவன்   20
வலை அகப்பட்டது என் நெஞ்சு

என்னிடம் வந்து என்னையே சூழ்ந்துகொண்டு அடிக்கடி பார்க்காத்தீர்கள். கலைத்திறம் பெற்றிருந்த என்  கண், புருவம், தோள், இடுப்பு, எடுப்பான அழகு, மழை போல் தாழும் கூந்தல் ஆகியவற்றை நல்ல விலைக்கு விற்கத் தெரியாமல் ஒருவன் வலையில் என் நெஞ்சம் மாட்டிக்கொண்டது.  

வாழிய, கேளிர்!
பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை
முலையிடை வாங்கி முயங்கினன், நீத்த
கொலைவனைக் காணேன்கொல், யான்?   25

என் உறவுக்காரர்களே! வாழ்க. பலவாறாகச் சூளுரை கூறி என்னைத் தெளிவித்தவன் என் முலையிடத்தை வாங்கி அணைத்துக்கொண்டான். பின்னர் அவன் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டான். அந்தக் கொலைகாரனை என்னால் இப்போது காண முடியவில்லை. 

காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி,
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே! எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல்,
வானத்து எவன் செய்தி, நீ?

கதிரவனிடம் பேசுகிறாள் - கண்டால்தான் என்ன? ஞாயிறே! என்னை நீ அறிவாய். உன்  ஒளியைக் க்கொண்டு அவனைப் பார்ப்பேன்.  என் உறவுக்காரன் எங்கே ஒளிந்திருக்கிறான்? காட்டமாட்டாயா? காட்டாவிட்டால் வானத்தில் இருந்துகொண்டு  என்னதான் செய்கிறாய்?

தண்ணீருக்குள் தவளை
தேரை

ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல,   30
நீருள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ் வழித்
தேரை தினப்படல் ஓம்பு

இருட்டைப் போக்கும் ஞாயிறே! நீ வானத்தில் தோன்றும் நிலாவைப் போலத் தண்ணீருக்குள் தோன்றுகிறாய். அங்கே தண்ணீருக்குள் இருக்கும் தவளை உன்னைத் தின்றுவிடாமல் பார்த்துக்கொள். 

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை,
பல் கதிர் சாம்பிப் பகல் ஒழிய, பட்டீமோ
செல் கதிர் ஞாயிறே! நீ   35

எனக்குத் தன்னைத் தராத ஒருவனாகிய அவனை நான் தேடிப் பிடித்துக்கொள்கிறேன். ஞாயிறே, அதற்குள் உன் ஒளிக்கதிர்களைக் குறைத்துக்கொண்டே சென்று மறைந்துவிடாதே.

கறா எருமை
எருமைக் கடா

அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும்
பறாஅப் பருந்தின்கண் பற்றிப் புணர்ந்தான்
கறாஅ எருமைய காடு இறந்தான்கொல்லோ?
உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான்கொல்லோ?

அவன் பறக்காத பருந்து. பொசுங்கு மயிரினை (அரி) உடைய என் கையைப் பற்றி விடாமல் புணர்ந்த பறக்காத பருந்து அவன். கறக்காத எருமை எருமைக்கடா. அவன் ஒரு எருமைக்கடா. எருமைக்கடாக்கள் மேயும் காட்டுக்கு அவன் ஓடிவிட்டானோ? பொருந்தாத செயல்களைச் செய்துகொண்டு இந்த ஊரிலேயே இருக்கின்றானோ?

காமாண்டி ஆட்டம்
காமன் ரதி
செறாஅது உளனாயின், கொள்வேன்; அவனைப்   40
பெறாஅது யான் நோவேன்; அவனை எற் காட்டிச்
சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும்,
உறாஅ அரைச! நின் ஓலைக்கண் கொண்டீ,
மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று;
அறாஅ தணிக, இந் நோய்   45

அரசனிடம் முறையிடுகிறாள் - என் மேல் பகைமை கொள்ளாமல் இருப்பானாயின் நானே பிடித்துக்கொள்வேன். அவனைப் பெறாமல் நான் நொந்துகொண்டிருக்கிறேன். அரசே! சுறா மீனைக் கொடியாகக் கொண்டிருக்கும் மனமதனின் கொடுமையை உணராத அரசனே! அவனை எனக்குக் காட்டு. உன் ஆணை ஓலையை அனுப்பிப் பிடித்துவந்து கொடு. நீ இதனை மறுக்கமாட்டாய் என நம்புகிறேன். நீ இன்பம் துய்க்கும் மாலைக் காலமும் வந்துவிட்டது. காம நோய் என்னை அறுக்காமல் தணியவேண்டும். உதவுக.

தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல், யாவர்க்கும்
அன்னவோ காம! நின் அம்பு?

காமனை வினவுகிறாள் - ஒருவன் நெஞ்சே அவனுக்குத் துன்பம் தந்தால் எப்படி? காமனே! உன் அம்பு அப்படிப்பட்டதா?

கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்;
ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல்   50
ஒய்யெனப் பூசல் இடுவேன்மன், யான் அவனை

எனக்குத் துன்பம் செய்தவனைக் கண்டால் அழும் என் கண்களை அவனுக்குக் காட்டுவேன். தொங்கும் என் முந்தானையால் கட்டிப் பிடித்துக்கொள்வேன். என் மேல் ஐயம் கொண்டு அறியாதவன் போலக் கைவிடுவானானால் ‘ஒய்’ எனக் கூச்சல் போடுவேன். 

மெய்யாகக் கள்வனோ என்று
வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும்
மடாஅ நறவு உண்டார் போல, மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்    55
படாஅமை செய்தான் தொடர்பு

ஊரார் கூடினால், ஊர் மக்களே! உண்மையா இவன் கள்வனா என்று கேட்காதீர்கள் - என்பேன். அண்டா நிறைய இருந்த கள்ளையெல்லாம் உண்டவன் போல என்னை மருளக்கூட விடாமல் விடாமல் பற்றி என் உயிரையும் அணைத்துக்கொண்டான். அதன்  பின் என் கண்ணைத் தூங்க விடாமல் செய்தான்.  இதுதான் அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. - எனபேன். 

கனவினான் காணிய, கண் படாஆயின்,
நனவினான், ஞாயிறே! காட்டாய் நீ ஆயின்,
பனை ஈன்ற மா ஊர்ந்து, அவன் வர, காமன்
கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு   60

கனவினாலாவது காணலாமே என்று என் கண் உறங்காவிட்டால், ஞாயிறே! நனவிலாவது நீ அவனை எனக்குக் காட்டவேண்டும். நீ காட்டாவிட்டால் உன்னை விட்டுவிட்டுக் காமன் காலைப் பிடித்துக்கொள்வேன். காமன் அவன் மேல் அம்பு எய்ய வேண்டும். அவன் மடல் குதிரை மேல் ஏறி என்னை அடைய வரும் அளவுக்கு அவனை நீ எய்ய வேண்டும் - என்று காமனைக் கேட்டுக்கொள்வேன். 

என ஆங்கு,

கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்;
தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்;

என்றெல்லாம் சொல்லிக்கொண்டு கண் துன்பத்தைக் காட்டி அழுதாள். ஏங்கி விம்மினாள். வளையல் நழுவும்படி தோள் நெகிழ்ந்தாள்.

அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல்
மெல் நடைப் பேடை துனைதர, தற் சேர்ந்த   65
அன்ன வான் சேவல் புணர்ச்சிபோல், ஒண்ணுதல்
காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை
நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி,
தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக,   70
நல் எழில் மார்பனகத்து

பார்த்தவர்கள் சொல்கின்றனர் - அம்டமாடியோ, எல்லாரும் பாருங்கள். அவளது காதலன் வந்தான். மென்னடை போட்டுக் காதலை வெளிப்படுத்தும் பெண் அன்னத்தின் துடிப்புக்கு ஏற்ப ஆண் அன்னம் அதனை அணைப்பது போல அவன் வந்தான். அவள் தன் துன்பத்தையெல்லாம் மறந்தாள். பேதைப் பெண் அவள். சிரிப்பதை மறந்துவிட்டு நாணத்துடன் வணங்கி நிற்கிறாள். தன் தகைமை அழகெல்லாம் தோன்ற நிற்கிறாள். புன்னகை பூக்கும் அவனது அழகிய மார்பில் நுழைந்துகொண்டாள். 

'பொழுது தலை வைத்த கையறு காலை, 
இறந்த போலக் கிளக்கும் கிளவி, 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, 
அவை நாற் பொருட்கண் திரும்நிபவும்க பெற்ழுறாள்ம் என்ப.' 

இச்சூத்திரம்,
' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' 
என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, 
பெருந்திணைக் குறிப்பாகக் 
கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 
'ஏறிய மடல் திறம்' 
முதலிய நான்கனுள் ஒன்றாய்,
முன்னர் நிகழ்ந்த கந்தருவம் 
பின்னர் வழுவி வந்த 
'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' 
ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. 

ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், 
முடியுடை வேந்தர்க்கும் 
அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,
அப் பிரிவில் பிரிகின்றான், 
'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், 
கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' 
என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், 
வாளா பிரியும் அன்றே? 
அங்ஙனம் பிரிந்துழி, 
அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் 
ஆற்றுவித்தல் அரிதுஆகலின், 
அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, 
ஆற்றாமை மிக்கு 
ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. 

(இதன் பொருள்): 
பொழுது அந்திக் காலத்தே: 
கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' 
என்னும் சூத்திரத்தில், 
'அதனின் ஊங்கு இன்று' 
எனக் கூறிய கையறவு உரைத்தல் 
என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; 
தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக 
முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; 
மிகுதியொடு 
மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் 
தன் வனப்பு மிகுதியுடனே 
மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் 
ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; 
அவை இறந்த போலக் கிளக்கும் கிளவி என்ப 

அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் 
கூற்று நிகழுங்கால், 
தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் 
என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 
'ஆறாம் அறுதியினும் 
ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் 
மன்றத்து இருந்த சான்றோர் அறிய, 
தன் துணைவன் பெயரும், 
பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், 
அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், 
ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், 
பிறவும் ஆம்' 
என்னும் விதி பற்றி 
வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, 
தலைவி பிரிவு ஆற்றகில்லாது 
நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து 
அறிவு அழிந்துழி, 
அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று 
என்று கூறியது. 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Wednesday, 5 July 2017

கலித்தொகை 146 Kalitogai 146

கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே
வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர,

காமம் அன்பே இல்லாதது. தன் செல்வாக்கு ஓங்கியிருக்கும் அரசன் தன்னைச் சேர்ந்தவர்களை ஒரு வகையாக எல்லை இல்லலாத துன்பத்துக்கு உள்ளாக்கி நடுங்கும்படிச் செய்வது போலக் காமம் அன்பு இல்லாதது.

அன்னத் தூவி
திணிக்கப்பட்ட
மெத்தை

அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன்
துன்னி அகல, துறந்த அணியளாய்,   5
நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,
பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன்,
கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர,
தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை
கூறுப கேளாமோ, சென்று?   10

அன்னத்தின் தூவி அடைக்கப்பட்ட மெத்தையில் நிறைவு காணாத வகையில் அவளுக்கு  அளித்து இன்பம் தந்தவன் அவளைத் துறந்து அகன்றுவிட்டான். அவன் அருகில் இருந்தபோது அவள் தன் நாணத்தையும் நிறையையும் உணரவில்லை. இப்போது அவன் இல்லாதபோது தோள் வாடி, பெரிதும் விரும்பும் கண்களில் நீர் மல்க நிற்கிறாள். அந்தக்  கண்ணீர் அவளது கூரிய பற்களில் விழுந்து தெறித்து குவிந்திருக்கும் முலை மேல் வழிகிறது. ஏதோ ஆராய்ந்தவளாகச் சுழன்று சுழன்று வருகிறாள். அவளிடம் சென்று அவள் கூறுவனவற்றைக் கேட்கலாம் வாருங்கள். - அவளைக் கண்டவர் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்.

'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று,
உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது
கேட்டீமின், எல்லீரும் வந்து

ஒளி மிக்க அணிகலன் பூண்டவளே! ஏன் நாணத்தையும் மறந்து மணந்துகொண்டவனைத் தூக்கி எறிந்து பேசுகிறாய் - என்று கேட்கிறீர்கள். அவ்வளவுதானே, கேட்டுக்கொள்ளுங்கள், சொல்கிறேன். - என்று தலைவி தொடர்கிறாள்.

வறம் தெற மாற்றிய வானமும் போலும்;
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்   15
சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,
என்மேல் நிலைஇய நோய்

வறண்டு போன வானம் போலவும், வெள்ளத்தில் நான் மூழ்கிச் சாவது போலவும், அவன் என்னை  முற்றிலுமாகப் பிரிந்திருப்பதால்  தோன்றிய பிரிவு நோய் என்மேல் நிலைகொண்டிருக்கிறது. 

'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும்
தக்கவிர் போலும்! இழந்திலேன் மன்னோ
மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும்,   20
அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன!

பித்துச் சிரிப்பு சிரித்துக்கொண்டு நலம்  இழந்து கிடக்கிறாள் இவள் என்று தகுதி உடைய நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் நலம் இழந்து கிடக்கவில்லை. மிகுந்த நாணமும், நலமும்,  நல்லுள்ளமும் அக்காலத்தில் கொண்டிருந்த நான் அவனிடத்தில் அத்தனையும் இழந்துவிட்டேன். 
அலவன்
நண்டு
செக்கர் (சிவப்பு)
செக்கர் அலவன்
புள்ளி அலவன்

உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக,
செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்
நக்கது, பல் மாண் நினைந்து

சிவந்த அழகிய புள்ளிகளுடன் சக்கரம் போல் சுழலும் நண்டை அங்கே பாருங்கள். இங்கே பாருங்கள் என் உயிருக்கு ஊற்றாக என் உடம்பு இருக்கிறது. அந்த நண்டுடன் அவனும் நானும் சிரித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது.

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப்   25
புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்!

கரை காணா நோயில் அழுந்தாதவனாக அவன் இருக்கிறான். அவனிடம் குற்றம் கண்டு பிடித்து கொடுமைகளைச் சுமத்தாதீர்கள். 

வரைபவன் என்னின் அகலான் அவனை,
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,
நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்
உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான்   30
யாண்டு ஒளிப்பான் கொல்லோ மற்று?

எல்லைக் கட்டுக்குள் நிற்பவனாக இருந்தால் அவன் என்னை விட்டு அகலமாட்டான். ஞாயிறே! அவனைக் அலை மோதும் கடல் பகுதி எல்லாம் நீ தேடித் தா. நானும் அவனைப் பற்றிக் கேள்விப்படும் இடமெல்லாம் சென்று  தேடுவேன். அவன் குற்றமற்றவன். எங்கே ஒளிந்திருப்பானோ தெரியவில்லை. 

மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும்
மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி
யாமம் தலை வந்தன்று ஆயின், அதற்கு என் நோய்
பாடுவேன், பல்லாருள் சென்று   35

மானைப் போல் என்னை மருளச் செய்து கொடுமையான வேட்கை நோயை எனக்கு உண்டாக்கும் மாலைக்காலம் வந்துவிட்டது. மயங்குகிறேன். எரியும் தீயின் நுனியாகிய யாமம் வரப்போகிறது. அதனால் ஏற்படும் நோயைக் குறித்துப் பலர் முன்னிலையில் சென்று சொல்லுவேன். 

யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும்
யாமம்! நீ துஞ்சலை மன்

பலரையும் தூங்கச் செய்யும் யாமத்தில் நான் படும் துன்பத்தைக் கூறினால் நீயும் தூங்கம்மாட்டாய்.

எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின்,
கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல்   40
ஓடிச் சுழல்வது மன்

தூங்க விடாமல் முதிர்ந்து என் மேல் தாக்கும் என் நோயை எடுத்துரைத்தால், யாமத்தில் அமைதி உறக்கத்தை எதிர்நோக்கும் ஞாலம் அதிரும். கதிர் மழுங்கி நிலாவும் அதிரும். அதிர்வதோடு ஓடிச் சுழலும். 

பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே!
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது
போலாது, என் மெய்க் கனலும் நோய்   45
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,
வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி,
பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச்
செல்வேன், விழுமம் உழந்து   50

பேரூர்த் தெருவில் பெருந்துயில் கொள்ளும் சான்றோர்களே! என் மேல் நீரைக் கொட்டிக் காப்பாற்றுங்கள். எனக்குள் கனன்று எரியும் நோய் மேகத்தைக் கொண்டுவந்து நீரைக் கொட்டச் செய்தாலும் தணியாது. இந்த நோய் எஎன் உடம்பையெல்லாம் வறுத்தெடுக்கிறது. அதனால் உண்டாகும் வருத்தத்தை என்னால் தாங்கக்கூட முடியவில்லை. அது என்னை அரித்தெடுக்கிறது. துன்பம் என்னும் பொறியால் இயக்கப்படும் பொன்னால் செய்த பெண்பொம்மை போல வெறுமனே தள்ளாடி நடந்துகொண்டிருக்கிறேன். 

என ஆங்குப் பாட, அருள் உற்று,
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்
நல் எழில் மார்பன் முயங்கலின்,
அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே   55

வானம்பாடி

என்றெல்லாம் சொல்லி அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அப்போது அவளது நல்லெழில் மார்பன் வந்தான். வறண்டு கிடந்த வானத்தில் மழைத்துளிக்காக ஏங்கிப் பறந்துகொண்டிருந்த வானம்பாடிப் பறவைக்கு மழை பொழிந்தது போல அவள் அல்லல் (துன்பம்) தீர்ந்தது. 

'பொழுது தலை வைத்த கையறு காலை, 
இறந்த போலக் கிளக்கும் கிளவி, 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, 
அவை நாற் பொருட்கண் திரும்நிபவும்க பெற்ழுறாள்ம் என்ப.' 

இச்சூத்திரம்,
' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' 
என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, 
பெருந்திணைக் குறிப்பாகக் 
கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 
'ஏறிய மடல் திறம்' 
முதலிய நான்கனுள் ஒன்றாய்,
முன்னர் நிகழ்ந்த கந்தருவம் 
பின்னர் வழுவி வந்த 
'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' 
ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. 

ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், 
முடியுடை வேந்தர்க்கும் 
அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,
அப் பிரிவில் பிரிகின்றான், 
'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், 
கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' 
என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், 
வாளா பிரியும் அன்றே? 
அங்ஙனம் பிரிந்துழி, 
அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் 
ஆற்றுவித்தல் அரிதுஆகலின், 
அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, 
ஆற்றாமை மிக்கு 
ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. 

(இதன் பொருள்): 
பொழுது அந்திக் காலத்தே: 
கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' 
என்னும் சூத்திரத்தில், 
'அதனின் ஊங்கு இன்று' 
எனக் கூறிய கையறவு உரைத்தல் 
என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; 
தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக 
முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; 
மிகுதியொடு 
மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் 
தன் வனப்பு மிகுதியுடனே 
மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் 
ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; 
அவை இறந்த போலக் கிளக்கும் கிளவி என்ப 

அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் 
கூற்று நிகழுங்கால், 
தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் 
என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 
'ஆறாம் அறுதியினும் 
ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் 
மன்றத்து இருந்த சான்றோர் அறிய, 
தன் துணைவன் பெயரும், 
பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், 
அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், 
ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், 
பிறவும் ஆம்' 
என்னும் விதி பற்றி 
வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, 
தலைவி பிரிவு ஆற்றகில்லாது 
நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து 
அறிவு அழிந்துழி, 
அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று 
என்று கூறியது. 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 145 Kalitogai 145

கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

'துனையுநர் விழை தக்க சிறப்புப்போல், கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறாகும்
கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி

அவசரப் படுபவருக்கு உடனே சிறப்பு கிட்டிவிடாது. (பொறுமையுடன் செயல்பட வேண்டும்) அதுபோல நனவில் தோன்றுவது கனவில் வேறாகும். காமம் கனவு போல் நிலையில்லாதது. கனவு போல் ஒருத்தி படும் துன்பம் இது. 

உயிர்க்கும்; உசாஅம்; உலம்வரும்; ஓவாள்,
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார,  5
பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற,
பல ஒலி கூந்தலாள், பண்பு எல்லாம் துய்த்துத்
துறந்தானை உள்ளி, அழூஉம்; அவனை
மறந்தாள்போல் ஆலி நகூஉம்; மருளும்;

பெருமூச்சு விடுகிறாள். மற்றவர்களிடம் பொருத்தமில்லாமல் ஏதேதோ வினவுகிறாள். மனம் உளைகிறாள். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்  ஏதோ செய்துகொண்டிருக்கிறாள். கயல்மீன் போன்ற அவள் கண்களை அரித்துக்கொண்டு கண்ணீர் வெள்ளம் ஓடுகிறது. மழை பொழியும்போது தோன்றும் மதியம்உ போல அவள் முகம் காணப்படுக்கிறது. பலவாகத் தழைத்திருக்கும் கூந்தலை உடையவள் அவள். தன் பண்பு எல்லாவற்றையும் துய்த்த பின்னர் துறந்தவனை நினைத்துக்கொண்டு அழுகிறாள். அவனை மறந்துவிட்டவள் போல ஆடிக்கொண்டு  சுழல்கிறாள். சிரித்துக்கொள்கிறாள். மருண்டு பார்க்கிறாள். 

சிறந்த தன் நாணும் நலனும் நினையாது,   10
காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண,
நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது,
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்,
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்,
ஊழ் செய்து, இரவும் பகலும்போல், வேறாகி,   15
வீழ்வார்கண் தோன்றும்; தடுமாற்றம் ஞாலத்துள்
வாழ்வார்கட்கு எல்லாம் வரும்

பார்க்க வந்த மக்களிடம் பேசுகிறாள் - தனக்கு இருக்கும் சிறந்த நாணத்தையும், அழகு நலத்தையும் எண்ணிப் பார்க்காமல் காமம் துய்த்தவள் துன்புறுகிறாள் என்று என்னைக் கண்டு சிரிக்காதீர்கள், மக்களே. அளவுக்குக் குறைவாக மகளிர் தோளைத் தழுவிய மாந்தர் மகளிர் துன்பத்தில் வருந்தும்படி விட்டுவிட்டுப் பிரிதலும், நீண்ட காட்டு வழியில் பிரிந்து சென்றவர் விரைவில் திரும்பி வந்து அவளுக்கு அளி செய்தலும் ஊழ்வினையால், இரவும்  பகலும்  மாறி மாறி வருவது போல வேறு வேறாகி காதலர்களிடத்தில் நிகழும். இந்தத் தடுமாற்றம் உலகில் வாழ்பவர் அனைவருக்கும் வரும்.

தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி
வறந்து என்னை செய்தியோ,வானம்? சிறந்த என்   20
கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ,
கொண்மூக் குழீஇ முகந்து?

மழையிடம் பேசுகிறாள் - அவன் என்னிடம் தாழ்ந்து நடந்துகொண்டான். பின் விட்டுவிட்டுப் போய்விட்டான். என் வளையல்கள் கழல்கின்றன. அவன் சென்ற காட்டில் வெயிலின் சூடு தாக்காமல் மழை பொழியாமல் மழை மேகமே, என்ன செய்துகொண்டிருக்கிறாய். உன்னிடம் தண்ணீர் இல்லாவிட்டால் என் கண்ணீர் வெள்ளத்தை முகந்துகொண்டு சென்று பொழிவாயாக.

நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம்
கண்பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது   25

ஊர் மக்களை வினவுகிறாள் - நான் தூங்காமல் இருப்பது உங்களை என்ன செய்கிறது? என்னிடம் கண்ணுறக்கம் கொண்ட காதலன் நினைத்துப் பார்க்காமல் பிரிந்து போய்விட்டான். அந்தக் கொடிய பண்புக்கு வேது கொடுக்க  வந்திருக்கிறீர்களா?

கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே!
எல்லாக் கதிரும் பரப்பி, பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின்,
புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக்
கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான்   30
செல்லாது நிற்றல் இலேன்

கதிரவனை வினவுகிறாள் - ஞாயிறே! உன் எல்லாக் கதிர்களையும் பரப்பிக்கொண்டு கடும் பகலாக நீ எப்போதும் என்னை விட்டு நீங்காமல் என்னிடமே நிலைத்திருக்க வேண்டும். நீ சென்றுவிட்டால் அற்உப மாலைப்பொழுது வந்துவிடும். அந்த  மாலைப்பொழுது என்னைக் கொல்லாமல் போதல் இல்லை. அதனை எதிர்த்துப் போராடிக்கொண்டு நான் நின்றது இல்லை. 

ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலைநாள்,
போதரின் காண்குவேன் மன்னோ பனியொடு
மாலைப் பகை தாங்கி, யான்?

ஞாயிறே! நீ மாலையில் மறைந்தால், கடலில் ஊர்ந்து காலையில் வரும்போது என் காதலனைக் கண்டு அழைத்துக்கொண்டு வருவாயா? அப்படி வந்தால் மாலைக்குப் பகையாகித் தாங்கிக்கொண்டு நான் உயிர் வாழ்வேன். 
நெய்தல் மலர்

இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி   35
ஒள் வளை ஓடத் துறந்து, துயர் செய்த
கள்வன்பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி
பெருங் கடல் புல்லென, கானல் புலம்ப,
இருங் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற,
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான்,   40
யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்;
தான் வேண்டுபவரோடு துஞ்சும்கொல், துஞ்சாது?
வானும், நிலனும், திசையும், துழாவும் என்
ஆனாப் படர் மிக்க நெஞ்சு

ஞாயிறே! அவனை நான் இனியன் என்று எண்ணிப் பேணினேன். அவனோ என் வளையலைக் கழற்றிக்கொண்டு ஓடும் கள்வன் ஆகி ஓடி ஒளிந்துகொண்டான். என்னை நினைத்துக்கொண்டு வெண்ணிலா வீசுகிறது. பெருங்கடல் ஒளி ஒளி மாற, கடற்கரை வெறிச்சோடிக் கிடக்க, கழியில் நெய்தல் பூக்கள் பறிப்பார் இல்லாமல் பூத்துக் கிடக்க வெண்ணிலா வீசுகிறது. இந்த நேரத்தில் நான் விரும்பும் ஒருவன் என்னைத் துன்பத்துக்கு உள்ளாக்கிவிட்டு தான் விரும்பும் மற்றொருத்தியுடன் உறங்குவானோ? என் நெஞ்சம் அவனையே நினைத்துக்கொண்டு, வானம், நிலம், திசை எங்கும் துழாவுகிறது. 

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என்   45
ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ
நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப,
அளி புறம் மாறி, அருளான் துறந்த அக்
காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர், மருந்து   50

திங்களிடம் பேசுகிறாள் - ஊரே சிரிக்கும்படி என் உயிர் மிஞ்சிக் கிடக்கிறது. வெள்ளை நிலாவே! அங்கே நீ சென்றுவிடு. என் வளையல் கழலும்படி, அளி செய்யாமல், புறத்தே சென்ற என் காதலன் செய்த நோய்க்கு மற்றவர்கள் மருந்து கொடுக்க முடியுமா?

வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்!
எனைத்தானும் எள்ளினும், எள்ளலன், கேள்வன்;
நினைப்பினும், கண்ணுள்ளே தோன்றும்; அனைத்தற்கே
ஏமராது, ஏமரா ஆறு

ஊர் மக்களை வினவுகிறாள் - வினவிக்கொண்டு என் காம நோயைத் தணித்துக்கொண்டிருக்கும் ஊர் மக்களே! நீங்கள் என்னை எள்ளி நகைத்தாலும் என் காதலன் என்னை எள்ளி நகையாடமாட்டான். நான் நினைத்தவுடன் என்ஃ கண்ணுக்குள் வந்துவிடுகிறான். அதனால்தான் ஏமாந்து போகாமல் இருக்கிறேன். 

கனை இருள் வானம்! கடல் முகந்து, என்மேல்   55
உறையொடு நின்றீயல் வேண்டும், ஒருங்கே
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்றுத் தீ

மழையை வேண்டுகிறாள் - இடி முழக்கத்துடன் இருண்டு வரும் வானமே! நீ கடலிலே நீரை முகந்துகொண்டு வந்து என்மீது பொழிய வேண்டும். என் வளையல்களைக் கழலச் செய்த அவன் செய்த துன்பத்தால் அவ்வப்போது காமத் தீ என்மீது பற்றி எரிகிறது. அது தணியவேண்டும். 

எனப் பாடி,

நோயுடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி,   60
'யாவிரும் எம் கேள்வற் காணீரோ?' என்பவட்கு,
ஆர்வுற்ற பூசற்கு அறம்போல, ஏய்தந்தார்;
பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு,
மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர,
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என்   65
ஆயிழை உற்ற துயர்

என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, துன்புறும் நெஞ்சத்தைப் பந்தாக எறிந்துகொண்டு "யாராவது என் கணவனைக் கண்டீர்களா" என்று கேட்டுக்கொண்டிருந்த என் முன் என் கணவன் வந்தான். ஆர்வம் கொண்ட நெஞ்சுக்கு அறம் உதவுவது போல வந்தான். அவனை நான் ஓடோடி அணைத்துக்கொண்டேன். மாயவன் மார்பில் இருக்கும் மாலை போல் அணைத்துக்கொண்டேன். ஞாயிற்றுக்கு முன்னர் இருள் ஓடுவது போல என் துன்பம் எல்லாமே மாய்ந்து போய்விட்டது. 

'பொழுது தலை வைத்த கையறு காலை, 
இறந்த போலக் கிளக்கும் கிளவி, 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, 
அவை நாற் பொருட்கண் திரும்நிபவும்க பெற்ழுறாள்ம் என்ப.' 

இச்சூத்திரம்,
' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' 
என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, 
பெருந்திணைக் குறிப்பாகக் 
கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 
'ஏறிய மடல் திறம்' 
முதலிய நான்கனுள் ஒன்றாய்,
முன்னர் நிகழ்ந்த கந்தருவம் 
பின்னர் வழுவி வந்த 
'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' 
ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. 

ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், 
முடியுடை வேந்தர்க்கும் 
அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,
அப் பிரிவில் பிரிகின்றான், 
'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், 
கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' 
என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், 
வாளா பிரியும் அன்றே? 
அங்ஙனம் பிரிந்துழி, 
அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் 
ஆற்றுவித்தல் அரிதுஆகலின், 
அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, 
ஆற்றாமை மிக்கு 
ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. 

(இதன் பொருள்): 
பொழுது அந்திக் காலத்தே: 
கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' 
என்னும் சூத்திரத்தில், 
'அதனின் ஊங்கு இன்று' 
எனக் கூறிய கையறவு உரைத்தல் 
என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; 
தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக 
முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; 
மிகுதியொடு 
மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் 
தன் வனப்பு மிகுதியுடனே 
மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் 
ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; 
அவை இறந்த போலக் கிளக்கும் கிளவி என்ப 

அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் 
கூற்று நிகழுங்கால், 
தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் 
என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 
'ஆறாம் அறுதியினும் 
ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் 
மன்றத்து இருந்த சான்றோர் அறிய, 
தன் துணைவன் பெயரும், 
பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், 
அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், 
ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், 
பிறவும் ஆம்' 
என்னும் விதி பற்றி 
வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, 
தலைவி பிரிவு ஆற்றகில்லாது 
நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து 
அறிவு அழிந்துழி, 
அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று 
என்று கூறியது. 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Tuesday, 4 July 2017

கலித்தொகை 144 Kalitogai 144

கண்டோர் கூற்றும் தலைவி கூற்றும்

நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா,
என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்
கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி,
அன்ன இடும்பை பல செய்து, தன்னை  5
வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல்:
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ, சென்று?

தலைவியைக் கண்டவர்களில் ஒருத்தி மற்றொருத்தியிடம் சொல்கிறாள். - நல்லவளே! பார். இவள் ஒருத்தி ஏதோ நினைக்கிறாள். நீண்ட பெருமூச்சு விடுகிறாள். இவளுக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. பலமுறை அவளாகவே சிரிக்கிறாள். பெண்ணுக்கு இருக்கவேண்டிய நாணம் எனபதே இவளிடம் இல்லை. தேம்புகிறாள். கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள். முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு நிலத்தையே பார்க்கிறாள். இப்படிப்பட்ட துன்பம் தரும் செயல்கள் பலவற்றைச் செய்துகொண்டிருக்கிறாள். தன்னைப் பற்றிக் கேட்பவர்களுக்குப் பொருத்தம் இல்லாமல் ஏதேதோ சொல்கிறாள். கனவில் ஏதோ கண்டது போலத் தெளிவு பெறுகிறாள். பின் மயங்குகிறாள். இவளிடம் சென்று இவள் கூறுவதைக் கேட்கலாம். வருக.

'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?
நின் உற்ற அல்லல் உரை' என, என்னை   10
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன்,
'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று,
மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு
மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு   15

தலைவி சொல்கிறாள் - ஒளி மிக்கவளே! நீ என்ன பேய் பிடித்தவள் போல இருக்கிறாய். உனக்கு யார் என்ன  செய்தார்? உனக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல். - என்று கேட்கிறீர்கள். தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். நெளி நெளியான கூந்தலை உடையவளே! என் துன்பத்தை உனக்குச் சொல்லும் அளவுக்கு என் உயிர் என்னிடம்  இருக்கிறது. "என் உயிரே" என்று ஒருவன் என்னைப் பாராட்டினான். பின் மனம் மாறிவிட்டான். அது முதல் என் நெஞ்சம் மயக்கத்தில் விழுந்து கிடக்கிறது. 

நிலாவில் நிழல்
முயல் போல் தோன்றுவதாகக்
கண்டனர்
எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்!
எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?

தலைவி பிதற்றுகிறாள் - நிலாவுக்குள் இருக்கும் முயலே (நிழல் உருவம்) நீ எங்கும் திரிகிறாய். பொங்கும் கடல் நீர் இருக்கும் இடமெல்லாம் கூட நீ பார்க்கிறாய். உன் கணவன் இங்கே இருக்கிறான் -  என்று எனக்குக் காட்டமாட்டாயா? நானே அவனைப் பிடித்துக்கொள்கிறேன்.

காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்;   20
வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய்எனின்

முயலே! நீ காட்டாவிட்டால் வேட்டை நாயை விட்டு உன்னைப் பிடிக்கும்படி வேடன் இருக்குமிடத்துக்குச் சென்று சொல்லுவேன். ஆடும்  பாம்பை அனுப்பி உன்னை விழுங்கச் செய்வேன். (சந்திர கிரகணம்) மதி திரிந்த என் துன்பத்தை நீ போக்காவிட்டால் இத்தனையும் செய்வேன். 

என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு
வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக்   25
கண்ணோடினாய் போறி, நீ

என்று அவள் சொன்னபோது முயல் இருக்கும் நிலா வெண்மேகத்துக்குள் சற்றே ஓடி மறைந்தது. அதனைப் பார்த்ததும்  " சிறிது என் மேல் இரக்கம் காட்டுகிறாய் போலத் தெரிகிறது" என்று தலைவி சொல்கிறாள். 

நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள்
ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும்
நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்?

நீண்ட இலை கொண்ட தாழை தழைத்திருக்கும் துவர்க்கும் மணல் கொண்ட கானல் பரப்பெல்லாம் ஓடுவேன். ஓடி ஒளிந்துகொண்டு தேடுவேன். அவள் கள்வன். எங்காவது மறைந்திருப்பான் அல்லவா?

ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம்   30
கோதை புனைந்த வழி

இதோ, பார். இங்குதான் அவன் என் தலையில் தான் பறித்துக்கொண்டு வந்த அடும்பு மலர்களைச் சூட்டினான். 

உதுக் காண் சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி

இதோ பார். இங்குதான் தன் சாயல் மலரைக் காட்டி தன் சால்புப் பண்பினால் நாம் அப்போது விளையாடிய பாவைப் பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடினான். 

உதுக் காண் தொய்யில் பொறித்த வழி

இதோ பார்,  இதுதான் அவன் என் முலையில் தொய்யில் எழுதிவிட்ட இடம்.

உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான்   35
பைய முயங்கியுழி

இதோ பார், "என்னை நம்பு" என்று சொல்லிக்கொண்டு அவன் என்னைத் தழுவிய இடம். 

அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,
விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத்
தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும்
வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று   40
ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;

ஏமாந்த  என் உள்ளம் ஏக்க நோயில் போக்க முடியாமல் வருந்தும்படிச் செய்துவிட்டு அன்பே இல்லாதவனாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். காற்றே! வானத்திலும் மண்ணிலும் எங்கும் ஓடும் காற்றே! உன்  எதிரில் சூரிய வெளிச்சம் வரும் இடமெல்லாம் தேடிப் பார். என் நலத்தையெல்லாம் உண்டுவிட்டு என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டுச் சென்றவனைக் காட்டுக. 

காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்
கண்ணீர் அழலால் தெளித்து

நீ காட்டாவிட்டால் இந்த மண்ணுலகம் அனைத்தையும் என் கண்ணீரைத் தெளித்துச் சுடுவேன். 

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின்   45
பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப்
புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்,
அறம் புணையாகலும் உண்டு

என்னைப் பேணாமல் துறந்தவனைக் காண நான் செல்லவேண்டும். கடலே! நீ இடம் விடாய் ஆயின் என்  பின்னங்காலால் கடற்கரையில் உள்ள மணலையெல்லாம் உதைத்து வாரி இறைத்து உன்னைத் தூர்ப்பேன். 

துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று
பாடுவேன், என் நோய் உரைத்து    50

என்னைத் துறந்தவனைத் தேடிப் பார்த்துத் தந்தால் உன்னைப் பாராட்டி ஒரு பாட்டுப் பாடுவேன். 

புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்
எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவேன்;
எல்லிய காலை இரா, முனிவேன்; யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்

என்னைத் தழுவிய அவன் திரும்பவும் தழுவும் காலம்  எனக்குத் தெரியவில்லை. பகலெல்லாம் தேடுகிறேன். அவன் கிடைக்கவில்லை என்று பகல் மீது சினம் கொள்கிறேன். இரவு வருகிறது. இரவெல்லாம் தேடுகிறேன். கிடைக்கவில்லை என்று இரவின் மீது சினம் கொள்கிறேன். என்  துன்பத்தைப் போக்குவார் யாரும் இல்லை. 

ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து,   55
'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறனில்லவன்

ஓ கடலே! ஒன்று சொல்கிறேன் கேள். திடீரென  அவன் என் கனவில் கண்ணுக்குள் தோன்றினான். பற்றிக் கொள்ளலாம் என்று இமை எடுத்து  விழித்துப் பார்த்தேன். என் நெஞ்சத்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டான். இப்படி என்னைத் தூங்கவும் விடாமல் செய்யும் அறமில்லாதவன் அவன். 


துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி நினைக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து - திருக்குறள்

ஓஒ! கடலே! ஊர்தலைக் கொண்டு கனலும் கடுந் தீயுள்
நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ   60
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீருள் புகினும், சுடும்

ஓ கடலே! விறகில் பற்றி ஊர்ந்து எரியும் தீயில் நீர் ஊற்றினால் தணிந்துவிடும். நெஞ்சில் அன்பு இல்லாத என் கணவன் மூட்டிய காமத் தீ தண்ணீருக்குள்ளே புகுந்தாலும் சுடுகிறது.

ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய்
உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே
இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை   65
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு

ஓ கடலே! நெஞ்சில் உரம் இல்லாதவள் ஏன் புலம்புகிறாள் என்று இந்த நோயில் பட்டு வருந்தாதவர் எள்ளி என்னை நகைத்தால் சிரித்துவிட்டுப் போகட்டும். இந்த நோயின் தன்மை இப்படிப்பட்டது. அதனால் நான் படுத்திருந்தாலும் உறங்காமல் இருக்கிறேன். நான் துன்புற்று வாடும்போது என்னை விட்டுச் சென்றவன் மார்பு அப்படிப்பட்டது. 

ஆங்கு

கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர,
கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி,
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்   70
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு,
இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே

என்றெல்லாம் சொல்லித் துன்பம் தீர அவள் புலம்பிக்கொண்டிருந்தாள். அப்போது அவளது காதலன் விரைந்து வந்தான். அப்போது அவள் முகத்தில் இருந்த பசப்பு நோயெல்லாம் இல்லாமல் போய்விட்டது. அறநெறி  அறிந்து நடந்துகொள்ளும் ‘அங்கணாளரை’ திறம் இல்லாதவர் பேசிய தீய சொற்கள் எல்லாமே நல்லோர் அவையில் இல்லாமல் மறைந்து நல்லுரையாக  மாறுவது  போன்று அவள் சினந்து கூறியவை அனைத்தும் இல்லாமல் போயின.

'பொழுது தலை வைத்த கையறு காலை, 
இறந்த போலக் கிளக்கும் கிளவி, 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, 
அவை நாற் பொருட்கண் திரும்நிபவும்க பெற்ழுறாள்ம் என்ப.' 

இச்சூத்திரம்,
' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' 
என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, 
பெருந்திணைக் குறிப்பாகக் 
கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 
'ஏறிய மடல் திறம்' 
முதலிய நான்கனுள் ஒன்றாய்,
முன்னர் நிகழ்ந்த கந்தருவம் 
பின்னர் வழுவி வந்த 
'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' 
ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. 

ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், 
முடியுடை வேந்தர்க்கும் 
அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,
அப் பிரிவில் பிரிகின்றான், 
'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், 
கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' 
என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், 
வாளா பிரியும் அன்றே? 
அங்ஙனம் பிரிந்துழி, 
அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் 
ஆற்றுவித்தல் அரிதுஆகலின், 
அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, 
ஆற்றாமை மிக்கு 
ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. 

(இதன் பொருள்): 
பொழுது அந்திக் காலத்தே: 
கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' 
என்னும் சூத்திரத்தில், 
'அதனின் ஊங்கு இன்று' 
எனக் கூறிய கையறவு உரைத்தல் 
என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; 
தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக 
முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; 
மிகுதியொடு 
மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் 
தன் வனப்பு மிகுதியுடனே 
மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் 
ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; 
அவை இறந்த போலக் கிளக்கும் கிளவி என்ப 

அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் 
கூற்று நிகழுங்கால், 
தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் 
என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 
'ஆறாம் அறுதியினும் 
ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் 
மன்றத்து இருந்த சான்றோர் அறிய, 
தன் துணைவன் பெயரும், 
பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், 
அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், 
ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், 
பிறவும் ஆம்' 
என்னும் விதி பற்றி 
வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, 
தலைவி பிரிவு ஆற்றகில்லாது 
நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து 
அறிவு அழிந்துழி, 
அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று 
என்று கூறியது. 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

கலித்தொகை 143 Kalitogai 143

கண்டார் கூற்றும் தலைவி கூற்றும்

'அகல் ஆங்கண், இருள் நீங்கி, அணி நிலாத் திகழ்ந்த பின்,
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று
நல் நுதல் நீத்த திலகத்தள், "மின்னி

இரவில் அகன்ற வெளியெல்லாம் இருளை நீக்கி அகன்ற நிலா திகழ்ந்தது. பின் பகல் வந்ததும் அது ஒளி மங்கிப்போயிற்று. அது போல சிரிப்பே இல்லாமல் இருக்கிறாள். நெற்றியில் பொட்டுக்கூட இல்லாமல் இருக்கிறாள். 

மாந்தளிர்
தமிழ் மகளிரின் மேனி
மாந்தளிர் போன்று
இருக்குமாம்
மணி பொரு பசும் பொன்கொல்? மா ஈன்ற தளிரின்மேல்
கணிகாரம் கொட்கும்கொல்?" என்றாங்கு அணி செல   5
மேனி மறைத்த பசலையள், ஆனாது

மணி பொருத்தப்பட்ட பசும்பொன் அணியோ என எண்ணும்படி அவள் அழகுடன் திகழ்ந்தாள். மாந்தளிர் போன்ற மேனியில் கணிகாரம்  என்னும் கொடி சுற்றுகிறதோ என்னும்படி விளங்கினாள். இப்போது அந்த மேனியில் பசலை பாய்ந்துள்ளது. 

நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா,
அஞ்சா, அழாஅ, அரற்றா, இஃது ஒத்தி
என் செய்தாள்கொல்?' என்பீர்! கேட்டீமின் பொன் செய்தேன்

நெஞ்சம் வெறி கொண்டது போல் ஏதோ நினைவுடன் காணப்படுகிறாள். நிலத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அஞ்சுகிறாள். அழுகிறாள். அரற்றுகிறாள். இப்படி ஒருத்தி என்ன செய்கிறாள் - என்று கேட்கிறீர்கள். பசலை நோயால் பொன் செய்தேன் (பொன் நிறம் பெற்றுக்கொண்டிருக்கிறேன்)

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது,   10
அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச,
பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும்
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண்   15
சென்று, சேட்பட்டது, என் நெஞ்சு
பஃறொடை வெண்பா
வேடன் ஒருவன் மறைந்திருந்து யாழ் மீட்டினான். அதனைக் கேட்டு மெய் மறந்திருந்தது அசுணமா என்னும் ஒரு மான். உடனே அந்த வேடன் திடீரெனப் பறையை முழக்கினான். அந்த ஒலியைக் கேட்டதும் அந்த  மான் இறந்துவிட்டது. இப்படி அசுணமா விலங்கைக் கொன்றவன் போல அவன் என் உயிரைக் கொல்கிறான். இப்படிப் பறையறையும் புதுமையான நாட்டில் நிறை உடையவளாக நான் எப்படி வாழ முடியும்? களவு ஒழுக்கக் காலத்தில் என் தோளைத் தழுவியவன் இப்போது என் தோளை நெகிழும்படிச் செய்துவிட்டு பிரிந்து போய்விட்டான். என் நெஞ்சும்மஃ அவனிடம் சென்றுவிட்டது.

'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே,
'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ
மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை   20
என் உயிர் காட்டாதோ மற்று?
பஃறொடை வெண்பா
என்னைத் தழுவி விளையாடி மகிழலாம் என்று என் பின்னே வருகிறீர்கள். ஏன் சோர்ந்து இருக்கிறாய் என்று  கேட்கிறீர்கள். ஏதோ மயங்கிக் கிடக்கிறாள்  என்று மருள்கின்றீர்கள். கலங்காதீர்கள். என் உயிர் போன்ற அவர்க்கு யாதொன்றும் தீமை இல்லை என்று நிலைமை காட்டுகிறது அல்லவா? 

'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார்கண்
கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம்
அழியத் துறந்தானைச் சீறுங்கால், என்னை   25
ஒழிய விடாதீமோ என்று
பஃறொடை வெண்பா
குற்றமற்ற கதிரவனே! உன் பெருமை அறியாதவர்களைச் சினத்துடன் சுடுவாய் எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் உன்னை நான் வழிபட்டு வேண்டிக்கொள்ள வந்திர்ருக்கிறேன். என் நெஞ்சம் அழியும்படி அவர் என்னைத்  துறந்தார் என்று அவரை  நீ  சுடுவாயானால் என்னை விட்டு வைக்காதே. சேர்த்ததுச் சுட்டுவிடு. 

அழிதக மாஅந் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார்
தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப;
ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின்,
யாஅம் தளிர்க்குவேம்மன்   30
அழிதக - என்னும் தனிச்சொல்லுடன்  
தொடங்கி வந்த வெண்பா 
வளைந்து அழிந்து தொங்கும் மாந்தளிர் மரத்தில் இருக்கும் காலத்தில் அதனைப்  பறித்துச் சூடிக்கொண்டு இந்த ஊர் மக்கள் தளிர்  போன்ற மேனியையும் பாடுவர். மாமரம் தளிர்க்கும் காலத்தில் அவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்தால் என் மேனியும் மாந்தளிர் போன்று தளிர்க்கும்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலைமேல்
தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில்
சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல
பல வல்லன் தோள் ஆள்பவன்   35
பஃறொடை வெண்பா
நெய்தல் பூவை எனக்குப் பறித்துத் தரவும் வல்லவன். என் தோள்மேல் கரும்பு எழுதவும் வல்லவன்.  இளமையான என் முலைமேல் தொய்யில் எழுதவும் வல்லவன். தன் கையில் உள்ள  வில்லை வளைத்து அம்பு எய்யவும் வல்லவன்.  அடக்கமுடன் செறிவாகக் காணப்படும் அவன் பல கலைகளில் வல்லவன். அவன் என் தோளை ஆள்பவன் எனத் தெரிந்துகொள்ளுங்கள். 

நினையும் என் உள்ளம்போல், நெடுங் கழி மலர் கூம்ப;
இனையும் என் நெஞ்சம்போல், இனம் காப்பார் குழல் தோன்ற;
சாய என் கிளவிபோல், செவ்வழி யாழ் இசை நிற்ப;
போய என் ஒளியேபோல், ஒரு நிலையே பகல் மாய;
காலன்போல் வந்த கலக்கத்தோடு என்தலை   40
மாலையும் வந்தன்று, இனி

என் உயிர் வாடுவது போல, கழியில் பூத்திருக்கும் மலர்கள் கூம்புகின்றன. என் நெஞ்சம் வருந்திப் பெருமூச்சு விடுவது போல ஆனிரை காப்போர் குழல் ஊதுகின்றனர். என் பேச்சு குழறுவது போல  யாழ் செவ்வழிப் பண்ணை ஒலிக்கிறது. என் மேனியில் ஒளி போய்விட்டது போல் பகலும் போய்விட்டது. கலக்கம் எமனைப் போல் மாலையில் வருகிறது. இனி என்ன செய்வேன்? 

இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய்;
அருள் இலை; வாழி! சுடர்!

இருளொடு போராடிக்கொண்டு நான் இங்கே துன்புறுகிறேன். என்னை இங்கே விட்டுவிட்டு நீ மட்டும் மறைந்துவிட்டாய். சூரியனே! நீ வாழ்க!

ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல்லாயின்,
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து   45
வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாயெனின்,
யாண்டும், உடையேன் இசை,


நீர் நிறைந்த இந்த  உலகத்தில் என்  கணவர் இல்லாவிட்டால், மாட்சிமை பெற்ற மனம் கொண்ட துறவிகள் வேண்டிய வேண்டியாங்கு எய்துவது உண்மையானால், மாசுபடாத துறக்கத்தில் அவருடன் நான் வாழ்வேன். 

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும் - திருக்குறள் 

ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப்
பீர் அலர் போலப் பெரிய பசந்தன
நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று,   50
பேர் அஞர் செய்த என் கண்

நீரில் தோன்றும் நீல மலர் போன்று அன்று அவருக்குக் காதலை மூட்டிய என் கண்கள் இன்று ஊரார் அலர் தூற்றும் வேளையில் பிழைக்க முடியாத துன்பத்தில் விழுந்து பீர்க்கம் பூ நிறத்தில் பெரிதும்  பசந்து கிடக்கின்றன. 

தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து
மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ
இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும்
என் உயிர் காவாதது?   55

தன் உயிரைப் போலத் தழுவிக்கொண்டு உலகைக் காப்பாற்றும் மன்னவன், என் இனிய உயிர் போன்றவனைக் காட்டித் தந்து என் உயிரைக் காக்காமல் இருப்பது எதனாலோ?

என ஆங்கு,

மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர,
தென்னவற் தெளித்த தேஎம் போல,
இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே   60

என்றல்லாம் சொல்லிக்கொண்டு அவள் காம நோயோடு துன்புற்றாள். அப்போது பல மலைகளைத் தாண்டிச் சென்ற அவளது காதலன் திரும்பி வந்து அவளது காலடியைத் தொழுதான். உடனே புன்னகை பூத்தவளாக இழந்த நலத்தையெல்லாம் திரும்பவும் பெற்றாள். தென்னவன் ஆட்சியில் தெளிந்திருக்கும் நாடு நலம் பெறுவது போல அவள் நலம் பெற்றாள். 

'பொழுது தலை வைத்த கையறு காலை, 
இறந்த போலக் கிளக்கும் கிளவி, 
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு, 
அவை நாற் பொருட்கண் திரும்நிபவும்க பெற்ழுறாள்ம் என்ப.' 

இச்சூத்திரம்,
' பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' 
என்ற சிறப்புடைப் பெருந்திணை அன்றி, 
பெருந்திணைக் குறிப்பாகக் 
கந்தருவத்துட்பட்டு வழுவி வரும் 
'ஏறிய மடல் திறம்' 
முதலிய நான்கனுள் ஒன்றாய்,
முன்னர் நிகழ்ந்த கந்தருவம் 
பின்னர் வழுவி வந்த 
'தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்' 
ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது. 

ஓதலும் தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாண் எதிரும் பிரிவும், 
முடியுடை வேந்தர்க்கும் 
அவர் ஏவலின் பிரியும் அரசர்க்கும் இன்றியமையாமையின்,
அப் பிரிவில் பிரிகின்றான், 
'வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும்' என்பதால், 
கற்புப் போல நீ இவ்வாறு ஒழுகி, யான் வருந்துணையும் ஆற்றி இரு' 
என ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கணம் அன்மையின், 
வாளா பிரியும் அன்றே? 
அங்ஙனம் பிரிந்துழி, 
அவன் கூறிய கூற்றினையே கொண்டு ஆற்றுவிக்கும் தோழிக்கும் 
ஆற்றுவித்தல் அரிதுஆகலின், 
அவட்கு அன்பு இன்றி நீங்கினான் என்று, 
ஆற்றாமை மிக்கு 
ஆண்டுப் பெருந்திணைப் பகுதி நிகழும் என்று உணர்க. 

(இதன் பொருள்): 
பொழுது அந்திக் காலத்தே: 
கையறு காலை ' புறம் செயச் சிதைத்தல்' 
என்னும் சூத்திரத்தில், 
'அதனின் ஊங்கு இன்று' 
எனக் கூறிய கையறவு உரைத்தல் 
என்னும் மெய்ப்பாடு எய்திய காலத்தே; 
தலை வைத்த அந்த ஆறாம் அறுதியின் இகந்தனவாக 
முடிவிலே வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; 
மிகுதியொடு 
மடனே வருத்தம் மருட்கை நாற் பொருட்கண் நிகழும் 
தன் வனப்பு மிகுதியுடனே 
மடப்பமும் ஆற்றாமையும் வியப்பும் 
ஆகிய நான்கு பொருட்கண்ணே நடக்கும்; 
அவை இறந்த போலக் கிளக்கும் கிளவி என்ப 

அங்ஙனம் அவை நடக்கின்ற நான்கு பொருளும் 
கூற்று நிகழுங்கால், 
தன்னைக் கைகடந்தன போலக் கூறும் கூற்றாய் நிகழும் 
என்று கூறுவர் புலவர் என்றவாறு. 

தலை வைத்த மெய்ப்பாடு ஆவன: 
'ஆறாம் அறுதியினும் 
ஒப்பத் தோன்றுதற்கு உரிய மெய்ப்பாடுகளாய் 
மன்றத்து இருந்த சான்றோர் அறிய, 
தன் துணைவன் பெயரும், 
பெற்றியும்,அவனொடு புணர்ந்தமையும், தோன்றக் கூறியும், 
அழுதும், அரற்றியும், பொழுதொடு புலம்பியும், 
ஞாயிறு முதலியவற்றோடு கூறத்தகாதன கூறுதலும், 
பிறவும் ஆம்' 
என்னும் விதி பற்றி 
வரைவிடைப் பிரிந்து நீட்டித்துழி, 
தலைவி பிரிவு ஆற்றகில்லாது 
நாணு வரை இறந்து கலங்கி மொழிந்து 
அறிவு அழிந்துழி, 
அவன் வந்து சாரத் தெளிந்தமை கண்டார் கூறிற்று 
என்று கூறியது. 

கலித்தொகை – நெய்தல் கலி
பாடியவர் – நல்லந்துவனார்
திணை - மருதம்
கி.மு. காலத்துப் பாடல்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி