Showing posts with label உலா-குலோத்துங்கன். Show all posts
Showing posts with label உலா-குலோத்துங்கன். Show all posts

Monday, 20 January 2020

குலோத்துங்க சோழன் உலா king's visit mounting on elephant 12

குலோத்துங்கள் உலா வருவதைக் காணவந்த

பேரிளம் பெண்

பருவத்தாள்
(அகவை 29-56)

-    கிளிக்கிளவி
மற்றொருத்தி செந்தா மரைமலர் என்னுடனே
செற்றொருத்தி வாழும்எனச் செறுவாள் சுற்றவும் 341
என்னுடன் இன்னொருத்தி வாழ்கிறாள் 
என்று ஊடல் கொண்டாள்
தெட்டுத் தசும்பு அசும்பு தெங்கின் இளம்பாளை
மட்டுத் தமனிய வள்ளத்துவிட்டு 142
தென்னங் கள்ளை 
வள்ளக் கிண்ணத்தில் ஏந்தினாள்
மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்
தெறித்து ஞமிறொப்பிச் செவ்விகுறித்துக்கொண்டு 343
அதனைப் பனங்குடையில் ஊற்றினாள்
ஏந்தி முகமன் இயம்பி இருந்தொரு
காந்தி மதிவதனி கைக்கொடுப்பமாந்தி 344
ஒருத்தி அதனை 
இவளுக்குக் கொடுத்தாள்
குதலை குழறிக் குயிற்கும் கிளிக்கும்
விதலை உலகில் விளைத்துநுதலை 345
பருகிப் பிதற்றினாள்
வியரா அலங்கரியா வேந்தன் கொடுமை
அயரா வெளிவிடா அஞ்சாப்பெயரா 346
வேந்தன் அளி செய்யாத 
கொடுமை பற்றிப் பேசினாள்
அருகிருந்த பாணனை நோக்க அவனும்
குருசில் வருதமரம் கூறப்பரிபுரக் 347
அருகிலிருந்த பாணனைப் பார்த்தாள். 
அவன் வேந்தன் உலா வருகிறான் 
என்றான் 
காலும் நிதம்பமும் கையும் திருக்கழுத்தும்
கோலும் மதாணிக் குலமெல்லாம்மேலோன் 348
கால், கை, கழுத்து, முலை 
அணி செய்து கொண்டாள் 
குரகநம் ஏழும் முழுகிக் குளிப்ப
மரகதச் சோதி வயங்கப்புருவ 349
மரகத மணிமாலை 
அணிந்துகொண்டாள்
இடைபோய்க் குமிழின் மலர்வந்திறங்கப்
புடைபோய்க் கருவிளை பூப்பவிடையாக 350
குமிழம்பூ மூக்கு 
கருவிளம்பூ கண் 
ஏக முருக்கு மலர இளம்பாளைப்
பூக மிடறு வரப்போதியபோகப் 351
முருக்கம்பூ வாய் 
பெரும்பெரும் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்
பழம்பெருங் காம்பு பணைப்பவிரும்பிய 352
இளநீர் முலை 
மூங்கில் தோள் 
நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நலியக்
குறுந்தொடிக் காத்தள் குலைப்பச் செறிந்து 353
மாந்தளிர் மேனி 
காந்தள் விரல் 
சலித்துத் தளியிள வஞ்சி தளரக்
கலித்துக் கதலி கவினஒலித்தே 354

அளிக்கும் சகோரமும் அன்னமும் மானும்
களிக்கும் மயீர கணமும்விளிக்கும் 355
சக்கரவாளப்-புள் அன்னம் மான் மயில் 
புறவும் தொடர்ந்துடனே போத வலையே
பிறவும் இனமென்று பெட்பச்சுறவுயர்ந்தோன் 356
புறா 
தொடர்ந்து வந்தன 
காலை புகுந்து கரப்ப தொருபசும்பொன்
சோலை எனவந்து தோன்றினான்ஞாலத்தோர் 357
எனவே 
அவள் ஒரு சோலை போல் 
தோன்றினாள்
தெய்வப் பெருமாளும் சேவடி முன்குவித்துக்
கைவைத்து நின்றிவளைக் கண்ணுற்றான்தையல் 358
சோழனும் சற்று நின்று 
இவளைப் பார்த்தான் 
வெருவமுன் சூர்தடிந்த வேளே நயக்கும்
பருவமும் மார்பில் பணைப்பும்புருவமும் 359
சூரபன்மனைக் கொன்ற முருகவேளே 
பருத்த மார்பைக் கொண்டவனே 
செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய
பந்தாகக் கொள்ளும் பணைந்தோளும்உந்தியும் 360
தாமரைக் கண் கொடவனே
உய்ய இருகாதும் மூக்கும் உடுபதியை
நைய எறிக்கும் நகைநிலவும்செய்ய 361
நிலவொளி தந்து 
புன்னகை பூப்பவனே 
பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்
கவளக் களிற்றெளிதில் கண்டுகுவளைக் 362
என் பவள வாயும் 
கருநெடுங் கண்களிப்ப உள்ளம் களிப்ப
பருநெடுந் தோளும் பணைப்பஒருநின் 363
கண்ணும் தோளும் 
சிலம்புகளோர் ஏழும் சென்றடைந்து நோலேன்
அலம்பு கடலேழும் ஆடேன்வலம்புவனம் 364
சிலம்பும் 
நோன்பு செய்யவில்லை 
நான் நீராடவில்லை 
ஏழும் செலவயரேன் எங்கோவே நின்குடைக்கீழ்
வாழும் திருவெனக்கு வாய்க்குமேதாழி 365
உன் குடைநிழலில் வாழும் பேறு 
எனக்குக் கிட்டுமா 
முடைதழுவும் தோளும் முலையும் தழுவ
விடைதழுவு தாமரைக்கை வீராகடகரியைக் 366
உன் தோள் 
என் முலையைத் தழுவுமா 
கைகழுவி கோரத்தைக் கால்தழுவி நின்புலியை
மெய்தழுவிக் கொள்ள விடுவாயோமொய்திரைசூழ் 367
உன் புலிச் சின்னம் 
என்னைத் தழுவ விடுவாயா 
ஞாலம் மறிக்கவும் நாயக நின்புகல்வில்
கால் உந்தி கலக்கவும் சால 368
உலகம் தடுக்கிறது 
வருந்தா வகைவருந்த வாழி பெயரும்
பெருந்தேவி யார்க்குப் பெறலாம்திருந்திய 369
பெருந்தேவி ஆக முடியுமா 
குந்தம் ஒசித்ததுவும் கொற்றத் திருத்தோளால்
வந்த விடையேழு மாய்த்ததுவும்முந்துறக் 370
குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்த மாலே 
ஏழு காளைகளை அடக்கிய கண்ணா 
கோவிய மாதர்க்கே உள்ளம் குறைகிடந்த
ஆவியே மாதாக அஞ்சுகமேஓவிய 371
அன்று 
ஆய்ச்சியர் ஏங்கியது போல் 
ஏங்குகிறேன் 
சேரன் சிலையினும் சீரிதே சென்றொசிய
மாரன் சிலையை வணக்காயால்சேரன்தன் 372
சேரன் வில்லை வென்ற உனக்கு 
மாரன் வில் ஒரு பொருட்டா 
முன்றில் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்
அன்றில் பனைதடிதல் ஆகாதோகன்றி 373
சேரன் பனைமரத்தைச் சாய்த்த உனக்கு 
அன்றில் இருந்துகொண்டு பாடி ஆசை மூட்டும் பனைமரத்தை 
அழிப்பது உன்னால் முடியாத ஒன்றா 
மலைக்கும் செழியர் படைக்கடலை மாய்த்தாய்
அலைக்கும் கடல்மாய்த்து அருளாய்மலைத்தவம் 374
பாண்டியன் கடலை வென்றாயே 
என் துன்பக் கடலை மாய்த்து அருளாய் 
தங்கள் புகழ்நிலவை மாய்த்தாய் அரிமரபில்
திங்களின் தண்ணிலவு தீராயால்பொங்கொலிநீர்த் 375
போருட்டவரின் புகழ் நிலாவை மாய்த்தாய். 
என்னைச் சுடும் நிலாவை தீர்த்துக் கட்டக் கூடாதா  
தெம்முனை யாழ்தடிந்தாய் எங்கள் செவிகவரும்
எம்முனை யாழ்தடிந்தால் என்செய்யும்செம்மணியின் 376
அலைகடல் ஓசையை அடக்கினாய். 
என்னை வாட்டும் என் யாழிசையை அடக்கக் கூடாதா 
செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்
வெஞ்சோதி கண்டால் விலக்காயால்வெஞ்சமத்துக் 377
சிங்களத்து காலைச் சுடரை மங்கச் செய்தாய். 
என்னை வாட்டும் 
மாலைச் செக்கர் வானச் சுடரை 
விலக்க மாட்டாயா 
காதி விடைபண்டு காடவன் முன்தடிந்தாய்
வீதி விடைதடிய வேண்டாவோயாது கொல் 378
முன்பு பல்லவன் காடவர் கோன் 
காளைச் சின்னத்தை வென்றாய். 
இப்போது தெருவில் செல்லும் \
ஆண்யானையாகிய உன் விடையை 
விரைந்து செல்லாமல் அடக்க வேண்டாமா 
வன்பல்லவத் துகைத்த வாட்டானை யின்றிந்த
மென்பல் லவந்துகையாய் மேம்பாடுதன்பூங் 379
பல்லவ நாட்டை வென்ற 
வாட்படை வேண்டாம். 
என் பல்லவ (தளிர்) மேனியைத் 
தாக்குக  
கருப்புச் சிலைகொண்டு மோதும் கழுத்தில்
சுருப்பு நாண்புக்கழுத்தத் தூக்கும்நெரும்புமிழ் 380
(காமன்) கரும்பு வில் தாக்குகிறது. 
என் நாணம் தடுக்கிறது 
அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப
வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும்தப்பா 381
நான் ஆசைக் கழுவில் ஏறுகிறேன். 
நீயோ என்னைச் சூடேற்றுகிறாய் 
உடல்பிள வோட வொருதேரிட் டூரும்
அடல்மகர போசன மாக்கும்விடுதூதால் 382
என் உடலைப் பிளந்து, 
காமனின் தென்றல் தேர் 
என்மேல் ஏறுகிறது. 
அவன் மகரக் சின்னத்தை 
எனக்கு உணவாக்கு. 
அக்கால தண்டம் அகற்றி உலகளித்தாய்
இக்காம தண்டம் எளிதன்றேமைக்கோல 383
அக்காலத்தில் 
எமன் தண்டாயுதத்தை அகற்றி 
உலகினைக் காத்தாய். 
என் காமத் தண்டாயுதத்தை 
வெல்லல் உனக்கு எளிதல்லவா 
வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த
கண்ணா அநங்கன்போர் காவாயேல்மண்ணுலகில் 384
காமனை என்னிடம் வராமல் நீ 
காப்பாற்றாவிட்டால் எப்படி 
எப்படி யாவர் இளம்பிடியார் என்று என்று
மைப்படியும் கண்ணாள் வருந்தினாள்இப்படியே 385
இப்படிச் சொல்லிக்கொண்டு 
இவள் வருந்தினாள் 
தையலார் பொன்தோகைச் சாயலார் கையகலா
மையலார் போராய் மன்றுஏறவையம் 386
மையல் போர் மன்றுக்கு வந்தது 
பெருங்குடையா நீரேழும் பாரேழும் பேணும்
ஒருகுடையான் போந்தான் உலா 387
ஏழுலகும் ஒரு குடை நிழலில் காக்கும் சோழன் 
இப்படி உலா வந்தான் 

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் அருளிய
இரண்டாம் குலோத்துங்க சோழன் (1135-1150) வரலாறு
யாப்பு - வெண்டளை பிழையாத கண்ணிகள்
தள்ளாடும் தமிழ்நடை

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி