Showing posts with label ஆத்திசூடி. Show all posts
Showing posts with label ஆத்திசூடி. Show all posts

Thursday, 21 January 2016

காப்பு | ஆத்திசூடி AttiSudi

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (காப்பு)
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
ஆத்தி மாலையைத் தையில் சூடிக்கொண்டு நம்மீது விருப்பம் கொண்டு வீற்றிருப்பவன் சிவபெருமான்.
அவன் விருப்பத்தை மேலும் மேலும் வாழ்த்திக்கொண்டு வணங்குவோமாக.
அமர்தல் = விரும்புதல் 
ஆத்திசூடி அண்ணல் 


Sunday, 17 January 2016

ஆத்திசூடி பாடல் மூலம்

12 ஆம் நூற்றாண்டில் ஔவையார் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்த புலவர் பாடிய நூல் ஆத்திசூடி
ஆத்திப் பூ மாலையைச் சூடியவன் சிவபெருமான்
அவன் பெயரால், அவனை வணங்கி இந்த நூல் பாடப்பட்டுள்ளது.
பாடல்கள் தமிழ் நெடுங்கணக்கு எழுத்து அடுக்கிவரும்
அகரமுதல் (அகராதி) முறைமையைப் பின்பற்றும் எழுத்துக்களை
முதலெழுத்தாகக் கொண்ட சொற்களைக் கொண்டு பாடப்பட்டுள்ளன
அந்த எழுத்துக்கள் இங்குச் சிவப்பு வண்ண எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளன. 
ஆத்திசூடி
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (காப்பு)

றஞ்செய விரும்பு 1
றுவது சினம். 2
யல்வது கரவேல் 3
வது விலக்கேல் 4
டையது விளம்பேல் 5
க்கமது கைவிடேல் 6
ண்ணெழுத் திகழேல் 7
ற்பது இகழ்ச்சி 8
யமிட்டுண் 9
ப்புர வொழுகு 10
துவ தொழியேல் 11
வியம் பேசேல் 12
()அஃகஞ் சுருக்கேல்13

ண்டொன்று சொல்லேல் 14
ப்போல் வளை 15
னி நீராடு 16
யம்பட வுரை 17
ம்பட வீடெடேல்18
க்கமறிந்திணங்கு 19
ந்தைதாய் பேண் 20
ன்றி மறவேல் 21
ருவத்தே பயிர்செய் 22
ண்பறித் துண்ணேல் 23
ங்கித்திரியேல் 24
மாட்டேல்25
வம்பஞ்சிற்றுயில் 26
ஞ்சகம் பேசேல் 27
கலாதனசெய்யேல் 28
மையிற்கல் 29
னை மறவேல்30
ந்த லாடேல்31

டிவது மற 32
காப்பது விரதம் 33
கிழமைபட வாழ் 34
கீழ்மை யகற்று 35
குணமது கைவிடேல் 36
கூடிப் பிரியேல் 37
கெடுப்ப தொழி 38
கேள்வி முயல் 39
கைவினை கரவேல் 40
கொள்ளை விரும்பேல் 41
கோதாட் டொழி 42

க்கர நெறிநில் 43
சான்றோரினத் திரு 44
சித்திரம் பேசேல் 45
சீர்மை மறவேல் 46
சுளிக்கச் சொல்லேல் 47
சூது விரும்பேல் 48
செய்வினை திருந்தச்செய் 49
சேர்விட மறிந்துசேர் 50
சையெனத் திரியேல் 51
சோம்பித் திரியேல் 53

க்கோனெனத் திரி 54
தானமது விரும்பு 55
திருமாலுக் கடிமைசெய் 56
தீவினை யகற்று 57
துன்பத்துக் கிடங்கொடேல் 58
தூக்கி வினைசெய் 59
தெய்வ மிகழேல் 60
தேசத்தோ டொத்துவாழ் 61
தையல்சொற் கேளேல் 62
தொன்மை மறவேல் 63
தோற்பன தொடங்கேல் 64

ன்மை கடைப்பிடி 65
நாடொப்பன செய் 66
நிலையிற் பிரியேல் 67
நீர்விளை யாடேல் 68
நுண்மை நுகரேல் 69
நூல்பல கல் 70
நெற்பயிர் விளை 71
நேர்கோ னெறிநில் 72
நைவினை நணுகேல் 73
நொய்ய வுரையேல் 74
நோய்க்கிடங் கொடேல் 75

ழிப்பன பகரேல் 76
பாம்பொடு பழகேல் 77
பிழைபடச் சொல்லேல் 78
பீடுபெற நில் 79
புகழ்பட வாழ் 80
பூமி விரும்பு 81
பெரியாரைத் துணைக்கொள் 82
பேதைமை யகற்று 83
பையலோ டிணங்கேல் 84
பொருடனைப் போற்றிவாழ் 85
போற்றடிப் பிரியேல் 86

னந்தடு மாறேல் 87
மாற்றானுக் கிடங்கொடேல் 88
மிகைபடச் சொல்லேல் 89
மீதூண் விரும்பேல் 90
முனைமுகத்து நில்லேல் 91
மூர்க்கரோ டிணங்கேல் 92
மெல்லியா டோள்சேர் 93
மேன்மக்கள் சொற்கேள் 94
மைவிழியார் மனையகல் 95
மொழிவதை மொழி 96

ல்லமை பேசேல் 97
வாதுமுற் கூறேல் 98
வித்தை விரும்பு 99
வீடு பெறநில் 100
(வு)உத்தமனா யிரு 101
(வூ)ஊருடன் கூடிவாழ் 102
வெட்டெனப் பேசேல் 103
வேண்டுவினை செய் 104
வைகறைத் துயிலெழு 105
(வொ)ஒன்னாரைத் தேறேல் 106
(வோ)ஓதுவது வேதம் 107
-முற்றும்-


(வோ)ஓதுவது வேதம் | ஆத்திசூடி AttiSudi

(வோ)ஓதுவது வேதம் 107
ஓதுவது வேதம்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
ஓதவேண்டியது வேதம்.
வேதம் என்பது மந்திரம். மந்திரப் பாட்டு.
மந்திரம் வாய்க்குள் முணுமுணுப்பர்.
Recite the Veda slogans.
வேதம் ஓதுதல்

(வொ)ஒன்னாரைத் தேறேல் | ஆத்திசூடி AttiSudi

(வொ)ஒன்னாரைத் தேறேல் 106
ஒன்னாரைத் தேறேல்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
ஒன்னார் என்போர் ஒன்றியவர் அல்லாதோர்.
ஒன்னார் என்போர் நண்பரும் அல்லர், பகைவரும் அல்லர். நண்பரா, பகைவரா என்று தெரியாதவர். புதியவரும் அல்லர், பழையவரும் அல்லர். ஏதோ அறிமுகமான புதிரானவர். தேவையற்றவர்.
ஒன்றியார் என்பதன் என்பதன் எதிர்ச்சொல் ஒன்னார்.
இவர்மீது நம்பிக்கை வைத்து, தெளிந்து இவர் சொல்லும் வழியைப் பின்பற்றக்கூடாது.
Not to fallow a non-friend (spam-friend).
தொடர்பு நிலை 

வைகறைத் துயிலெழு | ஆத்திசூடி AttiSudi

வைகறைத் துயிலெழு 105
வைகறைத் துயில் எழு
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வைகறை என்பது விடியற்காலம்.
பொழுது புலர்வதற்கு முன் உள்ள நான்கு மணி நேரம்.
இரவில் தூங்குவோர் இந்த வைகறை வேளையில் தூக்கத்தை விட்டு எழுந்துவிட வேண்டும். கடமைகளைச் செய்யவேண்டும்.
Early to bed and early to rise  
Rise early morning.
பல பல - என்று விடியும் காலம் | இதற்கு முந்தைய காலம் வைகறை

வேண்டுவினை செய் | ஆத்திசூடி AttiSudi

வேண்டுவினை செய் 104
வேண்டு<ம்> வினை செய்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வேண்டும் வேண்டும் என்று அனைவரும் விரும்பும்படிச் செயல்படு.
வகாரம் மிசையும் மகாரம் குறுகும். (தொல்காப்பியம் 331 – புள்ளி மழங்கியல்) என்னும் நூற்பாவுக்கு வேண்டு<ம்>வினை என்பது ஓர் எடுத்துக்காட்டு
Perform your duty on others need.
நல்ல செயல்

வெட்டெனப் பேசேல் | ஆத்திசூடி AttiSudi

வெட்டெனப் பேசேல் 103
வெட்டு எனப் பேசேல்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வெட்டிவிடுவது போலப் பேசாதே.
வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பது போலப் பேசாதே.
ஒட்டிக்கொள்ளும்படிப் பேசு.
Speak not to cut the friendship.
வெட்டும் பேச்சு
கூடாது

(வூ)ஊருடன் கூடிவாழ் | ஆத்திசூடி AttiSudi

(வூ)ஊருடன் கூடிவாழ் 102
ஊருடன் கூடி வாழ்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
ஊரைப் பகைத்துக்கொள்ளாதே.
ஊரை எதிர்த்து நிற்காதே.
ஊருடன் சேர்ந்து ஊர் மக்களோடு ஒன்றுபட்டு வாழ்.
ஊர் உனக்குத் துணைநிற்கும்.
Live amicable with your village people.
கூடி வாழ் |சேர்ந்து வாழ் 
உதவி வாழ்தல் உயர்வு தரும் 

(வு)உத்தமனா யிரு | ஆத்திசூடி AttiSudi

(வு)உத்தமனா யிரு 101
உத்தமனாய் இரு
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
உத்தி என்பது நல்லது கெட்டதை உய்த்துணரும், விளைவை உய்துணரும் பண்பு.
உத்தி மிக்கவன் உத்தமன்.
உத்தமன் வணங்கத் தக்கவன்.
உத்தி மிக்கவன் மேலோன்.
உத்தமன் என்று பிறர் மதிக்கும்படி வாழ்ந்துகொண்டிரு.
திருமாலை “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஆண்டாள் பாடுகிறாள்.
Live to praise by others.
Live to worship by others.
வணக்கம்
உத்தமன் இப்படி வணங்கத் தக்கவன் 

Saturday, 16 January 2016

வீடு பெறநில் | ஆத்திசூடி AttiSudi

வீடு பெறநில் 100
வீடு பெற நில்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வீடு பெறும் நெறியில் நில்.
வீடு பெறும் நெறியைக் கடைப்பிடி.
வீடு என்பது பிறவியிலிருந்து விடுதலை பெறுதல்.
சுவர்க்கம், நரகம் என்று எண்ணல் சில மதக் கோட்பாடுகள்.
Do to avoid reincarnation.
இறத்தல், பிறத்தல், இறந்து மீண்டும் பிறத்தல்
இவற்றிலிருந்து விடுதலை பெறுவதே வீடு 

வித்தை விரும்பு | ஆத்திசூடி AttiSudi

வித்தை விரும்பு 99
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வித்தை என்பது கலைத்தோழில்.
கலைகளைக் கற்றுக்கொள்ளவும், கலைத்தொழில் செய்யவும் விருப்பம் கொள்.
Like art.

இது ஓவியக் கலை
இது போலச் சிற்பம், விளையாட்டு முதலான பல கலைகளை விரும்பு 

வாதுமுற் கூறேல் | ஆத்திசூடி AttiSudi

வாதுமுற் கூறேல் 98
வாது முன் கூறேல்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
வாது என்பது வாய்மொழிப் போர். வாதாடல் என்று இதனைக் கூறுகிறோம்.
வாதாடுவோர் தன் வாதத்தை முதலில் தொடங்காமல் இருப்பது நல்லது.
ஒருவரோடு உரையாடும்போது வாதிடத் தொடங்கினால் எதிராளி ஆகிவிடுகிறோம். நண்பர்களாகவே உரையாலாமே. இதுதானே நல்லது.
Not to start speaking against.


வல்லமை பேசேல் | ஆத்திசூடி AttiSudi

ல்லமை பேசேல் 97
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
ஒருவன் தன்னிடம் இருக்கும் வல்லமையையோ, இல்லாத வல்லமையையோ மற்றவரிடம் சொல்லக்கூடாது.
வல்லமையைச் செயலில் வெளிப்படுத்தி உணர வைக்க வேண்டும்.
Beat not the dust.
Beat not the bush.
Not to excel oneself.
வல்லமை

மொழிவதை மொழி | ஆத்திசூடி AttiSudi

மொழிவதை மொழி 96
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல்
சொல்லவேண்டியதைச் சொல்லிவிடு.
மிச்சம் மீதி வைக்காமல் சொல்லிவிடு.
கேட்பவர் ஊகித்துக்கொள்ளும்படி மறைத்துச் சொல்லாதே.
காதலர்களுக்கும் இது பொருந்தும்.
Speak openly.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி