Showing posts with label அறிவோம். Show all posts
Showing posts with label அறிவோம். Show all posts

Monday, 29 April 2019

மனித நேயம் | Sugi Sivam'...

மனித நேயம்
மங்கி மறைகிறதா
பொங்கிப் பெருகுகிறதா


Friday, 22 February 2019

தமிழில் பிழை திருத்தி Correct mistakes in Tamil

பாராட்டுகளுடன்
பயன்  கருதி
இதனைத்
தமிழ் உலகுக்குப் படைத்து மகிழ்வதில்
பெருமை அடைகிறேன் 

சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21 அன்று  எனது வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தியின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. 


ஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் பிழைதிருத்தி வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வாணி திருத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை அம்சங்களுடன் வெளிவந்தது.  இச்செயலி 2015 ஆம் ஆண்டிற்கான கனடா இலக்கியத் தோட்டத்தின் கணிமை விருதையும் பெற்றது. தொடர்ச்சியான ஆய்வு மற்றும் மேம்பாடுகளுடன் புதுப் பொலிவுடன் அதிகத் தரவுகளுடன், அதிக ஆற்றலுடன் வாணியின் மேம்பட்ட பதிப்பு சர்வதேச தாய்மொழி தினமான இன்று(பிப் 21) பாடலாசிரியர் மதன் கார்க்கியால் சமூகத்தளத்தில் வெளியிடப்பட்டது 

என்ன மேம்பாடுகள்?
  • இதுவரை தவறான சொல்லுக்குப் பரிந்துரையைக் காட்டுபோது, மொத்தமாகத் தேர்வுசெய்த பிறகே அதை மாற்றமுடிந்தது. இனி அதற்கு மாறாக நேரடியாகவே ஆவணத்தில் திருத்திக் கொள்ளமுடியும். அதாவது WYSIWYG இடைமுகமாக மேம்பட்டுள்ளது.
  • கையடக்கக் கருவிகளுக்கு ஏற்ப ஒத்திசைவும் கொண்டுள்ளது. எனவே இனி எளிதில் கைப்பேசி வழியாகப் பயன்படுத்த முடியும். விண்டோஸ், லினைக்ஸ் போன்ற இயங்குதளங்களில் நவீன உலாவிகளில் சிறப்பாகச் செயல்படும்.(ஆப்பிள் கருவிகளின் ஒத்திசைவு விரைவில் சேர்க்கப்படும்)
  • முன்னதைவிடக் கூடுதலாக ஐயாயிரம் புதிய அடிச்சொல்லுடன் மொத்தம் 45000 அடிச் சொற்களுடன் சுமார் ஒன்பது கோடி தமிழ்ச்சொற்களைப் பகுத்துணரும்.
  • புழக்கத்தில் உள்ள ஆயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் பரிந்துரையாக வழங்கும். அதாவது "போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றேன்" என்றால் அதற்குக் "காவல்நிலையத்திற்குச் சென்றேன்" என்று காட்டும். பிசினஸுக்கு சவாலாய் என்றால் "தொழிலுக்குச் சவாலாய்" எனப் பரிந்துரைக்கும். இதனால் ஆங்கிலக் களப்பின்றி, தமிழை எழுத முடியும்.
  • புள்ளியியல் அடிப்படையில் இயங்கும் நாவியின்[http://dev.neechalkaran.com/naavi] பல அம்சங்களை வாணியில் இலக்கண விதி அடிப்படையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் 70% சந்திப்பிழைகளையும் கண்டுணர்ந்து திருத்தும். "ஒரேப் பொருளா" என்று கொடுத்தால் தேவையற்ற சந்தியை நீக்கி "ஒரே பொருளா" எனப் பரிந்துரைக்கும்.
  • புழக்கத்திலுள்ள தனிப் பெயர்ச்சொல்(ஊர்ப் பெயர், ஆண், பெண் மக்கள் பெயர்கள்) பலவற்றைக்கூட இது புரிந்துகொள்ளும். தமிழர் பரவலாக உள்ள பகுதிகளின் பெயர்கள் பெரும்பாலும் சேர்க்கப்பட்டுள்ளன. 
  • வழமை போல ஒரு எழுத்துப் பிழையைத் திருத்தத் தேவைப்படும் (தட்டுப்பிழை(typo), சந்திப்பிழை, ஒருங்குறிப் பிழை, பேச்சுவழக்கு) அனைத்துச் சோதனைகளையும் செய்து பரிந்துரைக்கும். தற்காலத் தமிழ் நடையை மட்டுமே புரிந்து கொள்ளும். பள்கழைகலக என்று தவறாக இருந்தாலும் "பல்கலைக்கழக" எனப் பரிந்துரைக்கும்.
  • வேற்றுமை உருபுடன் இயங்கும் ஒரு தொகுப்பு அகராதியையும் கொண்டுள்ளது. இதில் ஒரு சொல்லின் பல வடிவங்களையும் (inflect form) இது உணர்ந்து கொண்டு அதன் பொருளை முக்கிய சில அகராதிகளிலிருந்து எடுத்துக் காட்டும்.
  • தற்காலத் தமிழகத்தில் புழக்கமில்லாத அதிகம் புழங்கும் இலங்கைத் தமிழ்ச்சொற்களும் இதில் கணிசமாக உள்ளன. அமெரிக்க, பிரிட்டிஷ் ஆங்கிலம் போல இந்திய இலங்கைத் தமிழ் வழக்குகளுக்கு எதிர்காலத்தில் தனிப்பிரிவுகள் உருவாகக்கூடும்
  • ஏபிஐ வசதியுடன் இருப்பதால் விரும்பும் தளங்களில் இதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். இணையத்தில் உள்ள அனைத்துக் கருவிகளுக்கும் அனைத்து சொல்லாளர்களுக்கும் இதன் மூலம் பிழை திருத்த இயலும்.
ஆலோசனைகளும், குறைகளையும்  சுட்டிக்காட்டலாம்

உருவாக்கியவர்
நீச்சல்காரன்

வெளிட்டு மகிழ்ந்த மதன் கார்த்தி

Tuesday, 22 January 2019

திருக்குறள் தொகைக்கணக்கு Tirukkural Tens

கணக்குப் போட்டுப் படைத்த நூல்
திருக்குறள்

வாழ்க்கையை வள்ளுவர் அளந்த கணக்கு


Friday, 28 December 2018

மழை எதனால் எங்கே எப்படி Rain-fall

மழை 
எங்கே, எதனால், எப்படி
பெய்யும்

precipitation = ஏறும் ஈரம் போலும்
humidity = இறங்கும் ஈரம் போலும்



Wednesday, 15 February 2017

முப்பத்தாறு வகை தத்துவம் 36, a philosophy

சைவக் கோட்பாடு 36
36 வகை தத்துவம்
முப்பத்தாறு வகை தத்துவம் 
1. ஆன்மதத்துவம் ( பிரகிருதி மாயை ) 24. அவையாவன
1.ஐம்பூதங்கள்       5 ( 1.நிலம் , 2.நீர், 3.தீ, 4.காற்று, 5.ஆகாயம்.)
2.கன்மேந்திரியங்கள் 5 (1.வாய்-பேச்சு, 2.கை, 3.கால், 4.எருவாய், 5.கருவாய்.)
3.ஞானேந்திரியங்கள் 5 (1.மெய், 2.வாய்-நாக்கு, 3.கண், 4.மூக்கு, 5.செவி.)
4.தன்மாத்திரைகள்   5 (1.சுவை, 2.ஒளி, 3.ஊறு, 4.ஓசை, 5.நாற்றம்.)
5.அந்தக்கரணங்கள்  4 (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.)
2. வித்தியாதத்துவம் ( அசுத்த மாயா தத்துவங்கள் ) 7. அவையாவன
1.காலம், 2.நியதி, 3.கலை, 4.வித்தை, 5.அராகம், 6.புருடன், 7.மாயை-ஒருபகுதி
3. சிவதத்துவம் ( சுத்த மாயா தத்துவங்கள் ) 5. அவையாவன
1.நாதம்-சிவம், 2.விந்து-சக்தி, 3.சதாக்கியம்-சதாசிவம், 4.ஈஸ்வரம், 5.சுத்தவித்தை.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..வயிரமே
கொண்டதொரு காமனுக்கும் கோடனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும்திண்திறல்சேர்
இந்திரியம் பத்துக்கும் ஈரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்கள் ஐந்திற்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்றம் மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
என்றுநின்று செய்யும் இருவினைக்கும்தோன்றாத
வாயுஒரு பத்திற்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கும் அருநிதிக்கும்நேயமாம்
இச்சை கிரியை இவைதரித்தங்கு எண்ணிலா
அச்சம் கொடுமை அவைபூண்டுகச்சரவன்
சீரில்நிலை நில்லாது திண்டாடும் பல்கருவி
வாரில்அகப் பட்டு மயங்கினேன். – நெஞ்சுவிடு தூது 17-22

வயிரம்போல் முதிர்ந்திருக்கின்ற காமத்திற்கும், கோபத்திற்கும் நிறைந்து கிடக்கின்ற மதத்திற்கும், பொறாமைக்கும் ஆட்பட்டேன். ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து, தன்மாத்திரை ஐந்து ஆகியவற்றிற்கு ஆட்பட்டேன். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்கள், சாத்துவிதம், ராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்கள், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்கள், கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்று நிலைகள், இருவினைகள், பிராணன் முதலாகச் சொல்லப்படுகின்ற காற்றுக்கள் பத்து ஆகியவற்றிற்கு ஆட்பட்டேன். என்னுடைய வினைகளுக்குக் காரணமாக விளங்குகின்ற உறவுகளுக்கும், பொருளாசைக்கும் ஆட்பட்டேன். இத்தகைய ஆட்பட்டவைகளால் ஆசைக்கும், செயல்களுக்கும் உரியவனாகி, அச்சத்திற்கும், கொடுமைக்கும் இடம் கொடுத்து, பாம்பினைக் கச்சாக அணிந்த இறைவனின் பெருமையை எண்ணாது கடல்போன்ற துன்பத்திற்கு ஆட்பட்டு மயங்கினேன்.

தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும்
மூல உடம்பாம் முதல்நான்கும்மேலைச்
சிவமாம் பரிசினையும் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த
பவமாம் பரிசறுப்பார் பார்.” - திருக்களிற்றுப் படியார் பாடல் எண் 37

உயிர் வினையின் பயனை அனுபவிப்பதற்கு எடுத்த உடம்பு முதலாகக் கொண்ட ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும், உடம்பு நுகர்வதற்குரிய வித்தியா தத்துவம் ஏழும் சேர்ந்து முப்பத்தொரு தத்துவங்களாகும். இவற்றிற்கு மூலமாக விளங்குகின்ற காரண உடலாக விளங்கும் விந்து முதலிய நால்வகைத் தத்துவமும், அதற்கு மேலாகிய சிவ தத்துவமும் ஆக முப்பத்தாறு தத்துவங்களையும் தெளிவாக அறிந்து கொண்டவர்கள் தம்மோடு பொருந்தி வந்த பிறவியை அறுப்பார்கள் இதனை அறிந்து கொள்வாயாக.

மண் முதலாக சிவம் ஈறாக முப்பத்தாறு தத்துவத்தின் வடிவைக் காண்பது தத்துவ ரூபம்.
இத்தத்துவம் முப்பத்தாறினையும் உயிர் கூடி அறியும் அல்லாது தத்துவங்கள் தாமே அறியாது.
எனவே அத்தத்துவங்களை அறிவற்ற பொருளாகிய சடம் என்று காண்பதுவே தத்துவக் காட்சியாகிய தத்துவ தரிசனம்.
மண் முதல் சிவம் ஈறாகிய தத்துவங்களை சடம் என்று கண்ட உயிர் இறைவனின் திருவருளால் அத்தத்துவங்களின் இயல்பையும், விளைவையும் நன்கு அறிந்து, தத்துவங்களோடு பொருந்தி நில்லாது விலகி நிற்றல் தத்துவசுத்தியாகும். - உண்மைநெறி விளக்கம் பாடல் எண் 1


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி