தமிழ் நூல் காட்டும் தளங்கள் Internet showing ancient Tamil


இலக்கியங்கள் கையாண்டுள்ள சொற்களையும், தொடர்களையும் எளிதில் தேடிப் பொருளுணர்ந்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆய்வுக்கு உதவும் களங்களை அறிஞர் சிலர் இணையத்தில் உருவாக்கித் தந்துள்ளனர்.

இவர்களின் அரிய முயற்சியைப் பாராட்டுவதோடு நில்லாமல் பயன்படுத்தி அவர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.


  • தொல்காப்பியம், இறையனார்-அகப்பொருள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்-கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம், நளவெண்பா, பெரியபுராணம் முதலான நூல்களிலும், தொகுப்பு-நூல்களிலும் அடங்கியுள்ள சொற்கள் அனைத்தும் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு, அச்சொல் பயின்றுவரும் தொடரையும் இணைத்துச் சொடுக்கிக் காணும் வகையில் இந்தத் தளத்தை முனைவர் பாண்டியராஜாஉருவாக்கியுள்ளார்.

  • அகராதி, * தமிழ்-எழுத்துக்கள், * இணையத்-தமிழில் காலவளர்ச்சியில் முன்பெல்லாம் பயன்படுத்தப்பட்ட பலரும் படிக்க முடியாமல் இருந்த எழுத்துக்களைப் பலரும் படிக்குமாறு இணையத்தில் தெரியும்படி மாற்றித்தரும் இணையப்பொறி (software), * பற்பல இலக்கிய மூலங்கள், * கிரந்தம், * தமிழர் பயன்படுத்திய அளவைகளுக்கான தமிழ்-எண் குறியீடுகள். * மாணவர்-பயன்படுத்தும் வினவல் பகுதி, * சொல்லாடல் பகுதி, * பதிவுப்பேழை, * திருக்குறள் – மூலம் – பொருள் – ஆங்கில மொழிபெயர்ப்பு, * அறிவியல் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் குறியீடுகள், * விலங்குகள் முதலானவற்றின் விளக்கங்கள் – முதலானவை அடங்கிய தமிழ்க்-களஞ்சியம்.   

  • குறிஞ்சிப்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள மலர்களைக் காட்டும் படங்கள் – முதலானவை

  • குறிஞ்சிப்பாட்டில் சொல்லப்பட்டுள்ள 99 மலர்கள் படத்துடன் விளக்கம்.
No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி