மதுரைக்காஞ்சி MaduraiKanji


மதுரைக்காஞ்சி சொல்லும் செய்திகள்
வரிசை-எண்கள் 
பகுதி-எண்களைக் 
குறிக்கும்
 1. பாண்டியன் நெடுஞ்செழியன் நாட்டில் இயற்கைவளங்கள் ஏந்தாக இருந்ததால் மக்கள் துன்பம் இல்லாமல் வாழ்ந்தனர் 1
 2. பொய் அறியா வாய்மொழி மாந்தர் புடை சூழ பலவெள்ள ஊழிக்காலம் நாடாண்ட உயர்ந்தவர்களின் வழி வந்தவன் இந்த நெடுஞ்செழியன் 2
 3. தென்னவன் என்னும் கடவுள் பெயர்கொண்ட மலையருவி (குற்றாலம்) பாயும் நாட்டைப் போரிட்டு வென்றவன். 3
 4. இரு பெரு வேந்தரும் வேளிரும் ஒருங்கிணைந்துதாக்கிய போரில் வெற்றி கண்டவன். 4
 5. ஆளும் நிலப்பரப்பை விரிவாக்கிய நெடியோன்.நெடியோன் வழிவந்த களிறு. 5
 6. பசுமரத்தை எரிக்கும் மின்னலிடி போல் பலர்கோட்டைகளைப் பாழாக்கியவன். 6
 7. தென்குமரி, வடபெருங்கல், கீழைக்கடல், மேலைக்கடல்ஆகிய எல்லைக்கு உன்பட்ட அரசர்களுக்கெல்லாம் தலை பூண்ட அரசன். 7
 8. நெல்லினூர் என்னும் துறைமுகத்தைக் கைப்பற்றியவன்.8
 9. குட்டுவர் எனப் பெயர் பூண்டு நாடாண்ட பலசேர அரசர்களை வென்றவன். (பல்யானைச் செல்கெழு குட்டுவனை வென்றவன் எனவும் கருதலாம்)9
 10. நானில வளம் மிக்க முதுவெள்ளிலை மக்கள் இவன்செல்வத்தைப் புகழவும், 10
 11. நானில அரசர்கள் இவன் ஆணைப்படி நடக்கவும்,11
 12. ஆலங்கானம் (தலையாலங்கானம்) என்னுமிடத்தில்பகைவரைத் தாக்கி வெற்றி கண்டவன். 12
 13. கொற்கை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றியவன்.13
 14. தென்பரதவர் மக்களின் போர்யானையாக விளங்கியவன்.14
 15. இமயம் வரையில் சென்று, இடைப்பட்ட நாடுகளின்கோட்டைகளை வென்று, வேண்டிய இடத்தில் தங்கி, போர் வெற்றிகள் கொண்டவன். 15
 16. பகைவர் நிலப்பகுதிகளைப் பாழாக்கியவன்.16
 17. பகைவர் அழிய முதுபொழில் மண்டிலத்தை ஆங்கேமுற்றுகை இட்டவன். 17
 18. மேற்கில் தோன்றும் பிறைநிலாவைப் போல நீ வளரவேண்டும்.கிழக்கில் தோன்றும் முழுநிலாவைப் போல உன் பகைவர் தேயவேண்டும். 18
 19. அமிழ்தத்தொடு தேவர் உலகத்தையே கொடுத்தாலும்பொய் சொல்லமாட்டான். உலகமே எதிர்த்து நின்றாலும் பணியமாட்டான். வாணன் மூங்கிலில் அடைத்துவைத்த செல்வத்தையே பெற்றாலும் தனக்கென வைத்துக்கொள்ளாமல் கொடையாக வழங்கிவிடுவான்.19
 20. தாய் போன்றவனே! வீணாக அடுக்கிக்கொண்டே இருக்கவிரும்பவில்லை. உன் புகழ் வாழ்க. 20
 21. விறலியர்க்கும் பாணர்க்கும் வழங்குவான்.21
 22. பணிந்தவர் நாடு மகிழ்வாகவும், பணியாதவர்நாடு திறை தந்தும் வாழ்கின்றன. 22
 23. இவன் நாட்டில் நல்லமழை பொழிந்தது. 23
 24. வயலும் பொய்கையும் வளமுடன் திகழ்ந்தன.24
 25. நாடெங்கும் இயற்கையின் இன்னிசை ஒலிகள் கேட்டுக்கொண்டேஇருந்தன. 25
 26. பூக்களும் புள்ளின ஒலிகளும் எங்கும் இன்பமூட்டின.26
 27. இயற்கையின் இசை இன்பமூட்டியது. 27
 28. பாலைநிலத்துச் சுரமும் இன்பம் தந்தது.28
 29. நெய்தல்-நில வளமும் இன்பம் தந்தது. 29
 30. ஐந்திணை வளமும் கொண்ட நல்ல நாட்டுக்கு நடுவில்,30
 31. வையை ஆற்றங்கரையில் பெரும்பாணர் வாழும் குடியிருப்புகள்இருந்தன. 31
 32. வையை நகரத் தெருவில் அழும்பில் அரசனைஏப்போல நாடிழந்த மன்னர்களும் வாழ்ந்தனர். 32
 33. கடல் முழக்கம் போல மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டுக்கொண்டேஇருந்தது. 33
 34. மதுரைத் தெருக்களில் பல்வேறு கொடிகள் பறந்தன.34
 35. கடலில் திரியும் நாவாய் போல மதுரைத் தெருக்களில்யானைகள் திரிந்தன. 35
 36. குதிரை பூட்டிய தேர்கள் திரிந்தன. 36
 37. ஊர்திக் குதிரைகள் உலாவின. 37
 38. மறவர்கள் யானை போல் பெருமிதத்துடன் நடமாடினர்.38
 39. பூ, சுண்ணம் என்னும் மணப்பொடி, பலகாரம் முதலானவைவிற்கப்பட்டன. 39
 40. மகளிர் ஒப்பனைக் கோலத்துடன் உரையாடித் திளைப்பர்.40
 41. நாளங்காடியில் பண்ணியமும் பூவும் விற்போர்கூவும் ஒலியானது ஏழுநாள் கொண்டாடப்படும் கழுநீர் விழாவில் நாடே ஆரவாரிப்பது போல இருக்கும்.41
 42. கச்சம் கட்டிய காலோர் என்னும் காவலர் குதிரைமேல்ஏறிக்கொண்டு கடைத்தெருக்களைக் காவல் புரிவர். 42
 43. பெருஞ்செல்வர் வீட்டு மாடியின் நிலாமுற்றங்களில்பொன்னணி, பொற்சிலம்பு அணிந்த மகளிர் உலாத்திக்கொண்டிருப்பர்.  43
 44. பூவும் புகையும் ஏந்திக் கொட்டு முழக்குடன்சென்று பேரிளம் பெண்டிர் சிவனை வழிபடுவர். 44
 45. அந்தணர்ப் பள்ளியில் வேத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும்.45
 46. சமணச் சாவக அறிஞர் நோன்பு இயற்றுவர். 46
 47. ஓங்கி உதர்ந்த பூச்சேக்கை மாளிகைகள் செம்பால்ஆனது போன்ற வண்ணத்துடன் விளங்கும். 47
 48. செங்கோல் செலுத்தும் அறங்கூறு அவையம் இருக்கும்.48
 49. நன்றும் தீதும் கண்டறிந்து சொல்லும் காவிதி-மாக்கள்வாழும் தெரு இருக்கும். 49
 50. வணிகரின் மாட மாளிகைகளும், நாற்பெருங்குழுப்பெருமக்களின் இருப்பிடங்களும் இருக்கும். 50
 51. சங்கறுப்போர், மணி குடைவோர், பொன்னுக்குமாற்றுக் காண்பவர், செம்பு வினைஞர், வம்பு முடியும் கலைஞர், பூவும் புகையும் ஆராய்துவிற்போர், கண்ணுள் வினைஞர் என்னும் நாடகக் கலைஞர்கள், கம்மியர் என்னும் உலோகத் தொழிலாளர்முதலானோர் நால்வேறு தெருக்களில் நிலைகொண்டிருப்பர். 51 
 52. பழக்கடைகளும் வெற்றிலைப்பாக்குக் கடைகளும்இருக்கும். 52
 53. அல்லங்காடி என்னும் இரவுக்கடைகளில் எழும்ஆரவாரமானது, துறைமுகப் பட்டினத்தில் கப்பல் கொண்டுவரும் பொருள்களை இறக்குமதி செய்யும்ஆரவாரம் போல இருக்கும். 53
 54. பகல் போய் இரவு வரும் காலத்தில் விரும்பிப் பயன் கொண்டனர்
 55. கணவனுடன் வாழும் இல்லத்தரசி தன்னை அழகுபடுத்திக்கொண்டுவிளக்கேற்றுவாள். 55
 56. கணிகையரின் யாழிசையில் மயங்கிச் செல்லும்செல்வப் பெருங்குடி மக்கள் அணங்கு வாழும் அந்த இல்லங்களில் அவர்களைப் புணர்ந்து இன்பத்தில்திளைப்பர். 56
 57. கொண்டி மகளிர் இசை முழக்கத்துடன் நடனப் பொய்தல்ஆடுவர். 57
 58. மாயோனின் திருவோணத் திருநாள் போல மறவர்கள்தேறல் உண்டு தெருவில் திரிவர். 58
 59. மக்களைப் பெற்ற மகளிர் குளத்தில் நீராடுவர்.59
 60. சூலுற்ற மகளிர் சாலினியுடன் கை கோத்துக்கொண்டுயாழ் உடுக்கிசை முழங்க ஆடுவர். 60
 61. வேலனுடன் சோர்ந்து குரவை ஆடுவர். 61
 62. சொற்பொழிவு, பாட்டு, ஆட்டம் என்று எங்கும்ஆரவார ஒலி எழும்பிக்கொண்டே இருக்கும். 62
 63. நன்னன் (திருமால்) பிறந்தநாள் ஆரவாரம் போன்றஆரவாரத்துடன் முதல் யாமம் கழியும். 63
 64. சங்கு ஊதப்படும். அதன் ஒலியைக் கேட்டவுடன்மகளிர் கதவைத் தாழிட்டுக்கொண்டு உறங்குவர். 64
 65. அடை, விசயம், மோதகம், விற்கும் கூவியர் ஆங்காங்கேஉறங்குவர். 65
 66. அலை அவிந்த கடல் போல நள்ளிரவில் எல்லாரும்உறங்குவர். பேயும், அணங்கும், கழுதும் நடமாடும். 66
 67. அப்போது ஊர்க்காவலர் திருடர்களைத் தேடிக்கொண்டுதிரிவதால் நான்காம் யாமமும் பாதுகாப்பாகக் கழியும். 67
 68. குளக்கரையில் அந்தணரின் வேத-ஒலி, யாழோரின்மருதப்பண் ஒலி, கதவு திறக்கும் ஒலி, சூதர் மாகதர் வேதாளிகர் ஆகியோரின் வாழ்த்தொலி,நாழிகைக் கணக்கை அறிவிக்கும் முரசொலி, சேவல் கூவும் ஒலி, மயில் அகவும் ஒலி, குருகுஅன்னம் ஆகியவற்றின் ஒலி, களிறு, கூட்டில் வளர்க்கும் புலி ஆகியவற்றின் ஒலி முதலானவற்றுடன்இரவுக்காலம் முடிவுறும் வைகறைக் காலமும் முடியும். 68
 69. பகைவரை வென்று கொண்டுவந்த செல்வத்துடன் புத்தேள்உலகம் (தேவர் உலகம்) போல மதுரை பெரும்பெயர் கொண்டது. 69
 70. மகளிர் தோளைத் தழுவிக்கொண்டு உறங்கிய பாண்டியன்துயில் எழுவான். 70
 71. சந்தனம், முத்துமாலை, கஞ்சிபோட்ட ஆடை முதலானவற்றைப்புனைந்துகொண்டு முருகன் போலத் தோன்றுவான். 71
 72. பகை வென்ற மறவர் அவனை வாழ்த்துவர். 72
 73. எல்லோரும் வருக என்று அழைப்பதுவாக புலித்தோல்போர்த்திய முரசு முழங்கும். 73
 74. பாணர் வருக, பாட்டியர் வருக, புலவர் வருக,வயிரியர் வரு, இரவலர் வருக என்று கூவி அழைத்துத் தேர், களிறு முதலான பரிசுகளை வழங்குவான்.74
 75. கள், கறிச்சோறு, நெய்ச்சோறு முதலானவை எங்கும்சமைத்து ஆங்காங்கே வழங்கப்படும். 75
 76. ஆசிரியர்களை (புலவர்களை) ஒன்று திரட்டியநிலந்தரு திருவின் நெடியோன் போல நெடுஞ்செழியனும் சிறப்புப் பெற்றவன். 76
 77. குடிமக்களை விரிவுபடுத்திக்கொண்டு சுற்றம்பூக்க வாழவேண்டும். 77
 78. மாறன் தலைமையில் கோசர் உன் சொல்லுக்குக்கீழ்படிய வேண்டும். 78
 79. ஐம்பெருங்குழு அடங்கிய அவை உன்னைப் புகழ்ந்துபாராட்ட வேண்டும். 79
 80. மகளிர் பொற்கிண்ணத்தில் தரும் தேறலை உண்டுகொண்டுநீ உன் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழவேண்டும். 80


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி