மலைமக்கள் தெய்வம் முருகன்,
ஆடு மாடு மேய்ப்போர் தெய்வம் கண்ணன்,
உழவர் தெய்வம் இந்திரன்,
கடலில் மீன் பிடித்தும், உப்பு விளைவித்தும் வாழ்பவர் தெய்வம் வருணன், வெற்றி தரும் பெண்தெய்வம் கொற்றவை
ஆகியவை தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே
தமிழர் வழிபட்ட தெய்வங்கள்.
சிவனைப் பாடும் 12 திருமுறைகள்
திருமாலைப் பாடிய 12 ஆழ்வார்கள்
திருமுறைகளைப் பாடியோர் 27 பேர்
நாயன்மார்கள் 63 பேர்
எல்லாம் தமிழ்ப் பாடல்கள்.
எல்லாரும் தமிழர்கள்.
பாடிய புலவர்களும், வாழ்ந்து காட்டிய தொண்டர்களும் தமிழ்நாட்டில் / தமிழ் மண்ணில் பிறந்தவர்கள்.
All are Tamil songs.
All are Tamils.
The poets who sang and the volunteers who lived were born in Tamil Nadu / Tamil soil.
தென்னாடு உடையவன் சிவன். இவன் பனிமலைப் பெண்ணை மணந்தான் என்பது கதை. இவன் ஒளி. கண்ணில் இருக்கும் பாப்பா. பாப்பாவைக் கொண்டிருக்கும் விழி கருமை. இருள். கருமை நிறத்தவன் கண்ணன். இருளும் ஒளியும் இரட்டையம்.
இருள் தெய்வத்துக்கும், ஒளித் தெய்வத்துக்கும் எத்தனையோ கதைகள். இந்தக் கதைகளைக் கட்டியவர் தென்னாட்டவரா, வடநாட்டவரா என்று யாரும் அறுதியிட்டுக் காட்ட முடியாது.
கற்பனையை மற்றவர்களுக்குக் காட்டுவது மொழி. மொழி மனிதன் கொண்டிருக்கும் உடைமை.
தமிழனும், வடமொழியாளனும் கட்டிவிட்டிருக்கலாம். கதையாகச் சொன்னால்தானே கேட்பவர் மனத்தில் கருத்து நிலைத்திருக்கும்.
ஒருவர் நினைவு அவர் தாய்மொழியில் தோன்றும். பதிந்த மொழியில் வளரும்.
இறைவனைத் தெரியாத மொழியால் நினைக்க முடியுமா?
எனவே
இறைவனை இசையில் போற்றும் தமிழ்ப்பாடல்களே நமக்கு மந்திரம்.
No comments:
Post a Comment