உலகிலுள்ள மேன்மக்கள் உண்டு என்று சொல்வதை இல்லை என்று சொல்பவனை மனிதப்பேய் என்று கொள்ளவேண்டும் என்று வள்ளுவர் பாடுகிறார்.
"உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்"
இதனை ஒட்டக்கூத்தர் தன் இராமாயணம் உத்தரகாண்டம் நூலில் இந்தத் திருக்குளின் விளக்கம் போல ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
அந்தப் பாடல்:
உலகத்தார் உள்ளது என்றது உள்ளதாம்; ஒலி நீல் வேலை
உலகத்தார் இல்லை என்றது இல்லையாம் உணருங்கால்;
உலகத்தார் உள்ளது என்றது இல்லை என்று உரைக்கும் ஆகில்
உலகத்துக்கு அவன் பேய் ஆகும் உண்மையால் பயன் ஒன்று இல்லை
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 324
No comments:
Post a Comment