Pages

Thursday, 6 November 2025

உத்தரகாண்டம் காப்புச்செய்யுள்

இது ஒட்டக்கூத்தர் பாடிய இராமாயணம் உத்தரகாண்டம் நூலின் காப்புப் பாடல். இந்தப் பாடல் இராமன் தோன்றுவதற்குக் காரணம் கூறுவது போல் உள்ளது. 

சிவன் இருக்கும் வெள்ளியங்கிரி என்னும் மலையைத் தூக்கி எறிய முனைந்த 10 தலை, 20 கைகள் அனைத்தும் நிலத்தில் விழ அம்பு எய்தவன் இராமன். அவன் மலரடிகளை வணங்குகிறேன் - என்கிறான் புலவன் ஒட்டக்கூத்தன். 

வெள்ளியங்கிரியை மீதே வேரொடும் எடுத்த வீரக்
கள்ளவன் புயம் நாலைந்தும் கனக மா மவுளி பத்தும்
துள்ளி அம் புவிமேல் வீழ ஒரு கணை தொடுத்து விட்ட 
வள்ளல் அம் புயமே அன்ன மலர் அடி வணக்கம் செய்வாம்.  

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 325

No comments:

Post a Comment