அவை, ஆயம், சங்கம், கழகம், குழு, குழுமம், குழாம், திரள், கூட்டம் முதலான சொற்கள் தமிழில் மக்கள் ஒன்றாகத் திரள்வதை உணர்த்துகின்றன.
பேச்சிலும், எழுத்திலும் இவற்றைப் பயன்படுத்தும் தமிழ்மக்கள் இவை உணர்த்தும் பொருள்களில் நுட்பமான வேறுபாட்டை உணர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இது தாய்பொழி என்பதால் அவர்களுக்குக் கிடைத்த பேறு. அவற்றை அறிந்துகொள்வது நல்லது.
அவை
அரசவை - நாட்டை ஆள அரசன் தனக்குத் துணையாகச் சிலரை அமர்த்திக்கொள்வான். அவர்கள் கூடுவது அவை.அவையைச் சபை என்றும் கூறுகிறோம். எடுத்துக்காட்டு: மக்கள் அவை, மாநிலங்கள் அவை, சட்ட சபை.இது குழு என்றும் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஐம்பெருங்குழு. இக்கால அரசியலிலும் சில பணிகளைச் சேய்யக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.இதனை ஆயம் என்றும் கூறுகிறோம். எடுத்துக்காட்டு: எண்பேராயம்.
சங்கம்
குறிப்பிட்ட இனத்தவர் சேர்ந்து ஆராயும் சங்கம். எடுத்துக்காட்டு: தமிழ்ச்சங்கம் (தமிழ் ஆராயும் பெருமக்கள் குழு), வணிகர் சங்கம்
இதனைக் கழகம் என்றும் வழங்கினர். எடுத்துக்காட்டு: ‘கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த பழந்தமிழ்’.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (திருக்குறள்).
சூதாடும் கூட்டத்தாரைக் கழகம் என்றும் ஆயம் என்றும் குழாம் என்றும் திருக்குறள் கூறுகிறது.
குழு, குழாம்
கூத்து பார்க்க மக்கள் கூடுவதையும் குழாம் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.தமிழ் ஆயும் பெருமக்கள் சிலரைக் கி ஆ பெ விஸ்வநாதம் புலவர் குழு என்னும் பெயரில் கூட்டினார். குருவைக் குழுமம் என்றும் கூறுகிறோம்.
திரள்
மக்கள் திரள் என்னும் சொல் மக்கள் கூட்டத்தை உணர்த்துகிறது. இதில் பலவகைப்பட்ட மக்களும் திரண்டிருப்பர்.மக்கள் திரளை நாட்டுப்புரத் தமிழ் நரல் என்றும் குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment