Pages

Saturday, 25 October 2025

சோமன்

சோமன் என்பவர் ஒரு வள்ளல். திரிபுவனம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஒட்டக்கூத்தரின் நண்பன். 

புலவர்கள் பாடலில் செய்யும் பிழைகளை ஒட்டக்கூத்தர் பொறுக்கமாட்டார். எனவே இவருக்குப் பகைவர் பலர். ஒரு சமயம் இத்தகைய பகைவர் பலர் இவரைத் துரத்திக்கொண்டு வரும்போது இவர் பக்கத்தில் இருந்த சோமன் இல்லத்திற்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொண்டு பின் வரும் பாடலைப் பாடினார். 

தன்னுடைய தேவியர்க்குத் தார் வளவன் தான் உரைப்பது
உன்னுடைய கீர்த்தி உயர் நலமே - துன்னு புகழ் 
சோமா திரிபுவனத் தோன்றலே நின் புகழை
யாமோ உரைக்க இனி. 

திரிபுவனம் ஊரில் வாழ்பவனே! வளவனே தன் மனைவியரிடம் உன் புகழைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட புகழை உடையவன் நீ. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 269


No comments:

Post a Comment