ஒட்டக்கூத்தரின் தனிப்பாடல் ஒன்று இரண்டாம் இராசராசன் மனைவி ஒருத்தி பாண்டியனின் மகள் என்றும், அவள் கணவனிடம் ஊடல் கொண்டிருந்தாள் என்றும், அந்த ஊடலைத் தணிக்குமாறு அரசன் தன் அவைக்களக் புலவர் ஒட்டக்கூத்தரை அழைத்துக்கொண்டு வந்தான் என்றும், அரசனுடன் அந்தப்புரம் வந்த புலவர் கீழ்க்காணும் பாடலைப் பாடினார் என்றும் விநோத மஞ்சரி என்னும் பருவ இதழில் அட்டாவதானம் வீராசாமிச் செட்டியார் எழுதிய கட்டுரை குறிப்பிடுகிறது.
அந்தப் பாடல்
சுரத்தும் சிரத்தும் களிக்கும் களிருடைக் கண்டன் வந்தான்
இரத்தும், கபாடம் இனி திறப்பாய் பாண்டியன் அணங்கே
உரத்தும் சிரத்தும் கபாடம் திறந்திட்டது உண்டு, இலங்கா
புரத்தும் கபாடபுரத்தும் கல்யாணபுரத்திலுமே.
- கண்டன் எனப் போற்றப்படுபவன் இரண்டாம் இராசராசன்.
- அவன் உன்னைக் களிற்றின் மேல் ஏற்றிக்கொண்டு சுரத்தின் வழியே வந்தான்.
- தலைமேல் உன்னை வைத்திருக்கிறான்.
- உன்னை நான் இரந்து கேட்டுக்கொள்கிறேன்.
- பாண்ணடியன் மகளே
- உன் மனைக்கதவை திற
- உன் நெஞ்சையும் அறிவையும் அவனுக்காக நீ திறந்து வைத்திருக்கிறாய்.
- இவன் போரிடும்போது இலங்கை, கபாடபுரம், கல்யாணபுரம் கோட்டைக் கதவுகளைத் திறந்த பழக்கம் உள்ளவன்.
- அவன் திறக்காமல் நீயே திறந்துவிடு.
இந்தக் கருத்தமைந்த மேலே கண்ட பாடலை ஒட்டக்கூத்தர் பாடினார்.
அதனைக் கேட்ட பாண்டிமாதேவி "ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்று சொல்லி மற்றுமொரு தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டாளாம்.
No comments:
Post a Comment