Pages

Tuesday, 28 October 2025

தில்லைத் திருச்சித்திரக்கூடம்

தில்லை நடராசர் சந்நிதிக்கு எதிரில் இப்போது தில்லைத் திருச்சித்திரக்கூடம் உள்ளது.

முன்பு இங்கு இல்லை. 8-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளிச் சுற்றில் இருந்த பெருமாள் திருமேனியைக் கொண்டுவந்து இங்கு நிலைகொள்ளச் செய்தான். 

12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் தில்லை நடராசப் பெருமானுக்குக்குத் திருப்பணிகள் செய்தபோது வைணவர்கள் சிலர் குறும்புகள் செய்தனர். 

அதனால் சினம் கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் பெருமாள் சிலையைப் பெயர்த்துக் கடலில் போட்டான் எனக் கூறப்படுவதில் உண்மை இருக்கலாம். 

இவன் மகன் இரண்டாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் அச் சிலை மீண்டும் இப்போதுள்ள இடத்தில் நிறுத்தப்பட்டது. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 273

No comments:

Post a Comment