ஒட்டக்கூத்தர் சைவர். திருமாலைப் பாடுமாறு சிலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் பாடிய பாடல் ஒன்று ஒன்று தமிழ்நாவலர் சரிதையில் உள்ளது.
ஆரே எனும் ஒன்று சொல்லத் தொடங்கினும் அவ்விடத்து உன்
பேரே வரும் என்ன பேறு பெற்றேன் பெரு நான்மறையின்
வேரே மிதிலையின் மின்னுடனே வெய்ய கான் நடந்த
காரே கடல் கொளுந்து அச்சிலை வாங்கிய காகுத்தனே
யார் எதைச் சொல்லத் தொடங்கினாலும் அவ்விடத்து ‘மால்’ (பெரியவன், ஆசை) என்னும் பொருளைத் தரும் உன் பெயரே வரும்.
உன்னைப் பாட நான் என்ன பேறு பெற்றேன்.
நான்மறையின் வேரே
மிதிலை மின்னல் சீதையுடன் காட்டில் நடந்த கார்மேகமே
கடலின் கொளுந்தே
வில்லை வளைத்த காகுத்தனே
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 267
No comments:
Post a Comment