Pages

Saturday, 25 October 2025

கவிச்சக்கரவர்த்தி

இலக்கிய மரபில் கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்டவர் சிலரே. 
அவர்களுள்
  • கம்பர்
  • செயங்கொண்டார்
  • ஒட்டக்கூத்தர் 
ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். 

இவர்கள் உலக இயல்பைக் கடந்த கற்பனைப் பாடல்களைப் பாடியமையால் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்பட்டனர். 

இப்படி உலக இயல்பைக் கடந்த பாடல்களைப் பாடுவது ‘கௌட நெறி’ எனப்படும்.

தண்டியலங்காரம் என்னும் அணியிலக்கண நூல் வடமொழி அணியிலக்கணத்தைத் தழுவித் தமிழில் செய்யப்பட்டுள்ளது. 

அது வைதருப்ப நெறி, கௌட நெறி என்று இரண்டு வகையான யாப்பியல் நெறிகளைக் குறிப்பிடுகிறது. வைதருப்ப நெறி இயல்பான உவமைகளைக் கொண்டது. கௌட நெறி உலகியலைக் கடந்த உவமைகளைக் கொண்டது.  

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 269

No comments:

Post a Comment