ஒட்டக்கூத்தர் புன்கவிகளிடம் இரக்கம் காட்டாதவர். அதனால் அவருக்குப் புன்கவிகளால் ஏதேனும் தீங்கு நேருமோ என்று அவரைப் பாதுகாத்த அரசன் கண்டன் (இராசராசன்) அஞ்சினான்.
அஞ்ச வேண்டாம் என்று ஒட்டக்கூத்தர் பாடிய பாட்டு.
பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல் பே
தாட்டுக் கடல் புவி அஞ்சல் அன்றோ அறுத்துக் கிடந்த
சூட்டுக் கதிர்கள் நிலத்து அடங்காமல் தொகுத்து மள்ளர்
மேட்டுக் குவா-விடும் பொன்னி நன் நாடுடை வேல் கண்டனே.
இதனைக் கண்ட ஒட்டக்கூத்தன் "அஞ்சுவது பேதாட்டு" (பேதமை) என்று அரசனைத் தேற்றினான். கடல் அலைக்கும் நில நடுக்கத்துக்கும் அஞ்சி வாழ முடியுமா என வினவினான்.
கண்டன் பொன்னி நாடன். அவன் நாட்டில் நெல்கட்டுகள் நிலத்தில் அடங்காமல் கிடக்கும்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 266
No comments:
Post a Comment