"கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்"
என்று இவர் ஒரு பாடலில் போற்றப்படுகிறார்.
கோவை, உலா, அந்தாதி ஆகியவை சிற்றிலக்கியங்கள்.
இவர் பாடியனவாகக் கிடைக்கும் நூல்கள்
- விக்கிரம சோழன் உலா
- குலோத்துங்க சோழன் உலா
- இராசராசன் சோழன் உலா
- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
- தக்கயாகப் பரணி
- இராமாயண உத்தர காண்டம்
இவர் பாடிக் கிடைக்காத நூல்கள்
- விக்கிரமன் மீது பாடிய கலிங்கத்துப் பரணி
- அரும்பை தொள்ளாயிரம்
- காங்கேயன் நாலாயிரக்கோவை
- எதிர்நூல்
ஒட்டக்கூத்தர் பாடியிருக்கலாம் எனக் கருதத்தக்க நூல்கள்
- கண்டன் கோவை
- கண்டன் அலங்காரம்
- தில்லை உலா
இவர் பாடாமல் பாடியனவாகக் கூறப்படும் நூல்க்கள்
- ஈட்டி எழுபது முதலானவை
கோவை நூல்கள்
- நாலாயிரக் கோவை, என்னும் நூல் இவரால் செய்யப்பட்டது என்பர். ஆனால் அது கிடைக்கவில்லை.
- கண்டன் கோவை என்னும் நூலும் இவர் செய்திருக்கக் கூடும். ஆனால் இவை இரண்டும் கிடைக்கவில்லை.
உலா நூல்கள்
- மூன்று சோழர் அரசர்கள் மேல் பாடிய மூவர் உலா அச்சிடப்பட்டு நமக்குக் கிடைக்கிறது.
- தில்லை உலா நூலின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை. முதல் பகுதி உள்ளது.
அந்தாதி நூல்கள்
- இவர் பாடிய அந்தாதி நூல் எதுவும் கிடைக்கவில்லை.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 276
No comments:
Post a Comment