Pages

Monday, 27 October 2025

நெய்த்தானத்துச் சிவன்

ஒட்டக்கூத்தர் நெய்த்தானத்துச் சிவன்மீது பாடிய பாடல் 

விக்கா வுக்கா வித்தா விப்போய் விட்டான் நட்டார் கட்டூர் புக்கார் 
இக்கா யத்தா சைப்பா டுற்றே இற்றோடிப்போய் வைப்பீர் நிற்பீர் 
அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண் 
நெக்கா டக்கா னத்தா டப்போம் நெய்த்தா னத்தா னைச்சே வித்தே 

விக்கா உக்கு ஆவித் தாவிப் போய்விட்டான் 
நட்டார் கட்டூர் புக்கார் 
இக் காயத்து ஆசைப்பாடு உற்றே இற்று ஓடிப்போய் வைப்பீர் 
நிற்பீர் 

அக் காடு அப் பேய் தொக்கு ஆடச் 
சூழ் அப்பு ஆடத் 
தீ வெப்பு ஆடப் 
பூண் நெக்கு ஆடக் 
கானத்து ஆடப் 
போம் 
நெய்த்தானத்தானைச் சேவித்தே

விக்கல் வந்தது
ஆவி மூச்சு உதிர்ந்தது
ஆவி மூச்சு தாவிப் போய்விட்டது
அவன் போய்விட்டான் 

நெய்த்தானத்தானை நண்பனாக ஆக்கிக்கொண்டவர் அவன் கட்டிய ஊராகிய சிவலோகம் அடைந்தார்

இந்த உடலின்பத்தின் மீது ஆசைப்பட்டு ஓடிப்போய் அதில் நிற்கிறீர்கள் 

அவன் காட்டில் அவன் பேய்கள் கூடி ஆடுகின்றன

அவன் தலையில் கங்கை நீர் ஆடுகிறது

கையில் தீ ஆடுகிறது

கழுத்தில் பாம்புப்பூண் ஆடுகிறது

அவன் சுடுகாட்டிலே ஆடுகிறான்

நெய்த்தானத்தானை வழிபாடு செய்துகொண்டு எல்லாரும் செல்வோம் 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 271  

No comments:

Post a Comment