ஒட்டக்கூத்தர் அரசவையில் வீற்றிருந்தார். அவை கலைந்தபோது முதுமையால் உடல் தளர்ச்சியுற்றிருந்த கூத்தர் எழுந்திருக்க முடியாமல் தள்ளாடினார். கண்ட இராசராசன் தானே அவரிடம் வந்து அவரைத் தன் கைகளால் பற்றி அணைத்துக்கொண்டு நடந்தான்.
இதனால் மனம் நெகிழ்ந்த புலவர் உள்ளம் நெகிழ்ந்து ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடல்:
கொலையைத் தடவிய வைவேல் குலம் மடியக்
சிலையைத் தடவிய கையே இது செகத்து அண்டத்து உள்ள
மலையைத் தடவிய விந்தத்து அடவி மலைத்த ஒன்னார்
தலையைத் தடவி நடக்கும்கொல் யானைச் சயதுங்கனே.
கொலைவேல் ஏந்திய பகைவர்-குலம் மடிய வில் ஏந்திய கை இது.
‘விந்தத்து இருந்த அடவி’ ஆகிய கிரவுஞ்ச மலை என்னும் பகையை அழித்த முருகனின் கைகள் யானையை (தெய்வயானையை)த் தடவி நடப்பது போல் (அரசன் என்னைத் தழுவிக்கொண்டு) நடந்தான்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 267
No comments:
Post a Comment