Pages

Wednesday, 22 October 2025

கண்டசுத்தி

ஒட்டக்கூத்தன் பாடிய இந்தப் பாடலைக் கண்டசுத்தி என்று குறிப்பிடுகின்றனர்.

கரண்டக் கண்டத் தொனிக்கு அஞ்சிய மான் கருங்குயிலே 
திரண்ட வெள்ளத்துப் பிணம் மீது சென்றனன் சேர்ந்தவனை 
அரண்ட இன்பம் கொடு மீளக் களம் பற்ற அம் கொலு சால்
குரண்ட கன்னத்தில் உதைத்தனன்காண் அம் குலோத்துங்கனே.

பெண்ணின் குரல் குயில் போல் இனிமையாக இருக்கும். சிலருக்குக் கரகரப்பான  தொனி அமைந்துவிடுவது வழக்கம். இதனைப் போக்கி இனிய குரல் அமைய அவர் கன்னத்தில் உதைத்து மருத்துவம் செய்துவந்தனர் போலும். இந்த மருத்துவத்தைக் கண்டசுத்தி என்றனர். 

இந்த மருத்துவத்தைக் குலோத்துங்கன் செய்தான். பெண்கள் அணியும் கொலுசைக் காலில் அணிந்துகொண்டு உதைத்தான். பெண் ஒருத்தி தன் குரல் கரண்டத் தொனியுடன் இருப்பதை மாற்றும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க உதைத்தான். அவன் பிணத்தின்மீது நடந்து போரிட்டவன்.  

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 266   

No comments:

Post a Comment