Pages

Thursday, 23 October 2025

ஒட்டக்கூத்தர் அருள் உள்ளம்

தமிழில் செய்யும் பிழைகளைப் பொறுக்காமல் பாடிப் பழகும் புலவர்களைத் தண்டித்தவர் ஒட்டக்கூத்தர். அவரிடம் கருணை உள்ளமும் இருந்தது. 

ஒரு சமயம் மண்ணையும், கல்லையும் கலந்து சமைத்து அரசனின் சமையல்காரன் அரசனுக்கு உணவளித்தான். பகைவர் சூழ்ச்சி வலையில் பட்டு அவன் செய்த பிழையைப் பொறுத்துக்கொள்ளுமாறு ஒட்டக்கூத்தர் மன்னனிடம் வேண்டிய பாடல் இது. 

மீனகம் பற்றிய வேலையும் மண்ணையும் வெற்பு அடங்கப்
போனகம் பற்றிய மா வலையோ பொருந்தா அரசர் 
கானகம் பற்ற, கனவரை பற்ற, கலங்கள் பற்ற,
வானகம் பற்ற, வடிவேல் விடுத்த மன துங்கனே. 

மீன் பூத்த வானுக்கு நிறம் தரும் கடல் உப்பு
மண்
கல் (வெற்பு)
ஆகியவற்றைச் சேர்த்து உணவு (போனகம்)  அளித்தவன் பகைவர் சூழ்ச்சி வலைப் பட்டுச் செய்திருக்கிறான். 
அதனால் அவனைக் கொல்லாமல் தண்டிக்கலாம். 
என்று ஒட்டக்கூத்தர் மன்னனிடம் கூறினார். 
மன்னனும் கூத்தர் சொன்னபடி செய்தான். 

அரசன் மனதுங்கன் (உயர்ந்த உள்ளம் படைத்தவன்) (குலோத்துங்கன்) (துங்கன் = உயர்ந்தவன்)
அவன் தன் பகைவர்களை,
காடு, மலைகளுக்கு ஓட்டியவன்.
கடல் கடந்து ஓடும்படிச் செய்தவன் 
வானுலகம் செல்லும்படி வேல் வீசியவன். 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 267

No comments:

Post a Comment