ஒட்டக்கூத்தரின் தனிப்பாடல் ஒன்று இரண்டாம் இராசராசன் குதிரையேற்றம் பற்றிக் கூறுகிறது.
கண்டன் பவனிக் கவனப் பரி தெடுங்கால்
மண் துளங்காதே இருந்தவா - கொண்டிருந்த
பாம்புரவி தாய் அல்ல பாரு ரவி தாய் அல்ல
வாம் புரவி தாய வகை.
கண்டன் என்று போற்றப்பட்டவன் இரண்டாம் இராசராசன்.
அவன் குதிரையேற்றம் கற்று முடித்த பின்னர் குதிரையில் ஏறி வெளியே வந்தான்.
அப்போது புழுதி கிளம்பவில்லை.
பாம்பு நகர்வது போல் வந்தான்.
வெயில் அடிப்பதால் புழுதி கிளம்பாதது போல் வந்தான்.
என்றாலும் உலகைத் தாங்கும் பாம்பு ஆதிசேசன் போல் வந்தான்.
அவன் ஏறியிருந்த குதிரையின் தாவல் அப்படி இருந்தது.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 265
No comments:
Post a Comment