ஒட்டக்கூத்தரின் தனிப்பாடல் ஒன்று இரண்டாம் இராசராசன் பகைமன்னரிடம் துலா தானம் பெற்ற செய்தியைக் கூறுகிறது.
தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட செம்பொன் துலாத்திடை வண்டு
உழுகின்ற தார்க் கண்டன் ஏறிய ஞான்று இன் உவா மதி போய்
விழுகின்றது ஒக்கும் ஒரு தட்டு, காலை வேளையில் வந்து
எழுகின்ற ஞாயிறு ஒத்தான் குலதீபன் எதிர் தட்டிலே.
கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன்.
அவன் வண்டு உழும் மாலை அணிந்தவன்
அவனைத் தொழும் மன்னர்கள் அவனுக்குப் பொன்னைத் திறையாகத் தந்தனர்.
அவன் எடைக்கு எடை தந்தனர்.
நிறுப்பதற்கு நாட்டப்பட்ட தராசு தட்டு ஒன்றில் அவன் ஏறினான்.
அதில் அவன் காலையில் தோன்றும் ஞாயிறு போல் கானப்பட்டான்.
மற்றொரு தட்டில் அவனைத் தொழும் மன்னர்கள் தங்க அணிகலன்களைத் திறையாக வைத்தனர்.
அது நிறை-மதியம் போலத் தோன்றிற்று.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 265
No comments:
Post a Comment