ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா நூலின் மூன்றாவது உலா இராசராசன் உலா. இந்த இராசராசனை வரலாற்று ஆசிரியர்கள் இரண்டாம் இராசராச சோழன் எனக் குறிப்பிடுகின்றனர். இவனைப் பற்றிய சில செய்திகள்:
- தந்தை இறந்தபோது இவன் பரகேசரி என்னும் பட்டத்துடன் 1150 ஆம் ஆண்டில் முடி சூடிக்கொண்டான்.
- இவன்மீது பாடப்பட்ட மெய்க்கீர்த்திகள் பல உள்ளன
- இவன் ஆட்சிக் காலத்தில் போர் எதுவும் நிகழவில்லை. பாண்டியனோடு சிறுசிறு போர்கள் நடந்தன.
- தந்தை இல்லாதவர்க்குத் தந்தை போலவும், தாய் இல்லாதவர்க்குத் தாய் போலவும், மைந்தர் இல்லாதவர்க்கு மைந்தன் போலவும் விளங்கினான் என்று இவன் போற்றப்பட்டான்.
- முத்தமிழ்த் தலைவன், வடமொழியில் பண்டிதன், இராச பண்டிதன் என்றெல்லாம் போற்றப்பட்டான்.
- இவன் காலத்தில் ஒட்டக்கூத்தர் வயது முதிர்ந்தவராக இருந்தார்.
- இவன் மலையை வெட்டிக் காவிரி ஆற்றுக்கு வழி உண்டாக்கினான். ("மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் \ வர ராசராசன் கை வாள் என்ன வந்தே" - தக்கயாகப் பரணி 549) -- ("மலைச் சிறைநீர் வாட்கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக் \ கொலைச் சிறை தீர் வேந்துக் குழாம்" - தொல்காப்பியம் பொருளதிகாரம் 91 - நச்சினார்க்கினியார் மேற்கோள்)
- இவன் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்.
- பழையாறை என்னும் ஊரையும் தலைநகராகக் கொண்டு அதற்கு இராசமாபுரம் என்று பெயரிட்டிருந்தான்.
- ஒட்டக்கூத்தர் இவன்மீது ஒரு உலா நூல் பாடியதோடு கோவை நூலும் பாயியுள்ளார்.
- கேசவசுவாமி என்பவரைக் கொண்டு இவன் நாதார்த்தார்ணவ சம்க்ஷேபம் என்னும் வடமொழி அகராதி செய்வித்தான்.
- கண்டன், இராசகம்பீரன் ஆகியவை இவனது சிறப்புப் பெயர்கள்.
- இவனுக்கு மனைவியர் நான்கு பேர்.
- திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பிப் பல்லவதரையர் என்பவர் இவனது படைத்தலைவர்களில் சிறப்பு மிக்கவர்.
- இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. நோய்வாய்ப்பட்டுப் பழையாறை அரண்மனையில் இருந்தான். விக்கிரம சோழன் மகள் ஆளுடைய நாச்சி. அவளுக்குப் பேரக் குழந்தைகள் இருவர். அவர்களை இவன் தன் குளத்தூரில் (இக்காலப் பல்லவராயன் கோட்டை) பாதுகாப்பாக வைத்திருந்தான். இறப்பப்பதற்கு சில நாள் முன்னதாக, அவர்களில் மூத்தவனுக்கு இராதிராசன் (இரண்டாம் இராதிராசன்) எனப் பெயர் சூட்டி அரியணை ஏற்றினான்.
- பல்லவராயன் கோட்டையிலுள்ள இராசராசேசுரம் இந்த இராசராசனால் கட்டப்பட்டது.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 275
No comments:
Post a Comment