Pages

Wednesday, 29 October 2025

இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133-1150)

ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா நூலின் 
இரண்டாவது உலா குலோத்துங்க சோழன் உலா. 
இந்தக் குலோத்துங்க சோழன் பற்றிய சில செய்திகள்:
  1. 1133-ல் இளவரசு பட்டம் பெற்றான்
  2. 1135-ல் தந்தை இறந்தபோது அரசன் ஆனான் 
  3. இராசகேசரி என்னும் பட்டம் பெற்றான்
  4. இவனது மேய்க்கீர்த்திகளில் சிறப்பானவை 12 உள்ளன
  5. இவன் ஆட்சியில் போர்கள் இல்லை. எங்கும் அமைதி நிலவிற்று
  6. தில்லையில் திருப்பணிகள் பல செய்தான். நடராசப் பெருமானின் திருவடித் தாமரையிலுள்ள தேனைப் பருகும் வண்டு போன்றவன் என்று இவனைத் திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. 
  7. சிவகாமியம்மை கோட்டத்தைப் பெரிதாக்கினான்
  8. திருக்குளத்தை அழகுபடுத்தினான் 
  9. தில்லை நகரைப் பெரிதாக்கினான்
  10. இவன் தில்லையில் இருந்த திருமால் சிலையைப் பெயர்த்துக் கடலில் போட்டான் என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார். 
  11. வேங்கி நாடு இவன் ஆளுகைக்குள் இருந்தது.
  12. இவன் கலைகளில் தேர்ச்சி நிறம்பியவன்.
  13. ஒட்டக்கூத்தர் இவனுக்கு ஆசிரியராகவும், அவைப்புலவராகவும் விளங்கினார். 
  14. இவன் இளவரசனாக இருந்தபோது இவன்மீது உலாவும், பிள்ளைத்தமிழும் பாடினார்.
  15. தண்டியலங்காரம் பாடியவர் இந்த அரசன் காலத்தவர். 
  16. இவன் காலத்தில் சேக்கிழார் பெரியபுராணம் பாடினார். 
  17. இவன் தலைநகர் கங்கைகொண்ட சோழபுரம்
  18. இவனது இயற்பெயர் எதிரிலாப் பெருமான்
  19. சிறப்புப் பெயர் அனபாயன், திருநீற்றுச் சோழன் என்பன
  20. இவனது வாக்குகளை எழுதிய திருமந்திர-ஓலை என்னும் அலுவலன் மூவேந்த வேளான்
  21. அனபாய நல்லூர் என்னும் ஊர் இவனால் புதுப்பிக்கப்பட்டது
  22. மனைவியர் இருவர். 
  23. பல்லவர் குலத்தில் தோன்றிய காடவராயன் என்பவன் திருமாணிக்குப்பம் என்னும் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் பரம்பரையில் தோன்றிய கோப்பெருஞ்சிங்கன் (மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவன்) என்பவனே சோழர் ஆட்சி வீழ்ச்சியடையக் காரணமாக இருந்தவன். சீயகங்கன் என்பவன் இந்தக் கோப்பெருஞ்சிங்கன் பரம்பரையில் வந்தவன். இந்தச் சீயகங்கன் பரம்பரையில் வந்த சீயகங்கன் என்பவனே நன்னூல் என்னும் இலக்கண நூலை பவணந்தி முனிவர் 13-ஆம் நூற்றாண்டில் இயற்றுமாறு செய்தவன். 
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 273 & 274

No comments:

Post a Comment