Tuesday, 28 April 2020

சிறப்பு அணி rhetoric, excellent 2

சிறப்பு அணி 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு - திருக்குறள்

இதில் சொல்லும் பொருளும் சிறப்புற அமைந்திருத்தல் காண்க.

இறைவன் பற்று அற்றவன்
அவன் நம்மீது பற்றற்ற நிலையில் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கிறான்.
அவன் நம்மைப் பற்றிக்கொண்டிருப்பது நாமும் அவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.
(கொடி கொம்பைப் பற்றிக்கொள்வது போலப் பற்றிக்கொள்ள வேண்டும்)

எதற்காகப் பற்றிக்கொள்ள வேண்டும்
நம்மிடம் இருக்கும் பிற பற்றுகளை விடுவதற்காகப் பற்றிக்கொள்ள வேண்டும்.
பற்றை விடுவதே வீடுபேறு
நாம் வீடுபேறு அடைய வேண்டும்.

இப்படிப் பற்பல  சிறப்புப் பொருள்கள் இதில் உள்ளன.

இதனை, சிலீட்டம்/சிலீட்டை(சிரேஷ்டம்) என்றனர். இது காந்தி(காந்தம்) அணியில் ஒன்று


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி