Thursday, 2 April 2020

கம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayanam 6-5 30

காவலர் 


இராவணன் மேல்திசை வாயிலில் 2 கோடி காவலர் 21
தென் வாயிலில் 16 கோடி காவலர் 22
கிழக்கில் 16 கோடி 23
வான்வெளியில் வரும் வானவரைத் தடுக்க 32 கோடி பேர் 24
1000 கோடி காவலர் மதிலின் முன்னும் பின்னும் திரிகுவர் 25
இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக 3 மதில்கள் 26
சிறப்பினைப் பெற்றுக்கொண்டு அவனுக்குத் துணை நிற்பவர் 16 நூறு கோடி 27
வாயில் காவலர் வலமாகவும் இடமாகவும் சுற்றிக்கொண்டிருப்பர் 28
ஆராய்ச்சி மணி முற்றத்தில் கோடி கோடி பேர் 29

படைகளின் பெருக்கம்

தேர் 10 ஆயிரம் பதுமம் 
யானை 20 ஆயிரம் பதுமம்
குதிரை 40 ஆயிரம் பதுமம்
தார்ப் படை 80 ஆயிரம் பதுமம் 30

பாடல்

'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு

ஏற்றமும் உள, அவர்க்கு இரண்டு கோடி மேல்;
கூற்றையும் கண் - பொறி குறுகக் காண்பரேல்,
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார். 21

'தென் திசை வாயிலின் வைகும் தீயவர்

என்றவர் எண் - இரு கோடி என்பரால்;
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்?
வன் திறழ் யமனையும் அரசு மாற்றுவார். 22

'கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர்

ஈட்டமும் எண் - இரு கோடி என்பரால்;
கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும்
தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். 23

'விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர்

எண் - இரு கோடியின் இரட்டி என்பரால்;
மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர்
கண் இலர், கரை இலர், கரந்து போயினார். 24

'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும்,

உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால். 25

'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி

ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார். 26

'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,

அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண் - இரு நூறு கோடியே. 27

'"விடம் அல, விழி" எனும், வெகுளிக் கண்ணினர்,
"கடன் அல, இமைத்தலும்" என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண் - எண் கோடியால். 28

'அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி

முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்,
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்;
குன்றினும் வலியவர்; கோடி கோடியால். 29

'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக்
கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம்
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே. 30


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
5. ஒன்னார் வலி அறி படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்குகளின் அடுக்கு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி