Thursday, 2 April 2020

கம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayanam 6-5 20

இலங்கை அரண்


இராவணன் திடத்தையுன் தன் வில்லையும் இராமன் நினைத்தான் 11
இராமனால் சீதையை மறக்க முடியவில்லை 12
சுக்கிரீவனை வினவினான் 13
வீடணனை அழைத்துவரச் சொன்னான் 14
இலங்கை அரண், திறன், படை ஆகியவை பற்றி வினவினான் 15
வீடணன் சொல்கிறான் 16
அரண் வடமலைப் பொற்குன்றம் போன்றது 17
அதன் அகலம் 700 யோசனைத் தொலைவு 
அகழி ஆழம் 100 யோசனை 18
பொறிகள் பலவற்றுடன் கூடியது 19
வடதிசை வாயிலில் 200 கோடி காவலர் 20

பாடல்

உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்குமால்;
இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்;
கடலினை நோக்கும்; அக் கள்வன் வைகுறும்
திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால். 11

பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால்,
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்,
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ? 12

ஆயது ஓர் - அளவையின், அருக்கன் மைந்தன், 'நீ
தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை;
மேயவன் தன்னொடும் எண்ணி, மேல் இனித்
தூயது நினைக்கிலை' என்னச் சொல்லினான். 13

அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான்,
'செவ்வழி அறிஞனைக் கொணர்மின், சென்று' என,
'இவ்வழி வருதி' என்று இயம்ப, எய்தினான் -
வெவ் வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 14

'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான். 15

எழுதலும், 'இருத்தி' என்று இராமன் ஏயினான்,
முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான்
பழுது அற வினவிய பொருளைப் பண்புற,
தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: 16

'நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன்
தலை என விளங்கிய தமனியப் பெரு
மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. 17

'ஏழு நூறு யோசனை அகலம்; இட்ட கீழ்
ஆழம் நூறு யோசனை; ஆழி மால் வரை,
வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால். 18

'மருங்குடை வினையமும், பொறியின் மாட்சியும்,
இருங் கடி அரணமும், பிறவும், எண்ணினால்,
சுருங்கிடும்; என், பல சொல்லி? சுற்றிய
கருங் கடல் அகழது; நீரும் காண்டிரால். 19

'வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர்,
இடை இலர், எண் - இரு கோடி என்பரால்;
கடையுக முடிவினில் காலன் என்பது என்?
விடை வரு பாகனைப் பொருவும் மேன்மையோர். 20


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
5. ஒன்னார் வலி அறி படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 

நாலடி நறுக்குகளின் அடுக்கு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி