Thursday, 23 April 2020

கம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 150

மாற்றுத் தேரில் இந்திரசித்தன்


குரங்குப்படை யானைகளை இழுத்து வீசிற்று 141
படையினரை அவை கையால் அள்ளிப் பிசைந்தன 142
பிடித்துத் தரையில் அடித்தன 143
விழுந்த குரங்குகள் தெம்பு பெற்று எழுந்தன 144
தெம்பு பெற்ற அரக்கர் இலக்குவனைச் சூழ்ந்துகொண்டன 145
சக்கரம் போலச் சூழ்ந்துகொண்டனர் 146
அவரகளை அங்கதன் மலை எடுத்து வீசித் தாக்கினான் 147
இந்திரசித்தன் மாற்றுத்தேர் அழிந்தது 148
தேவர்கள் மகிழ்ந்தனர் 149
மற்றுமொரு தேரில் ஏறிக்கொண்டு இந்திரசித்தன் தாக்கினான் 150

பாடல்

பார்க்கும் அஞ்ச; உறுக்கும்; பகட்டினால்
தூர்க்கும், வேலையை; தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும்; ஆயிரம் தேர் பிடித்து அம் கையால்
ஈர்க்கும்-ஐயன் அன்று ஏறிய யானையே. 141

மாவும் யானையும் வாளுடைத் தானையும்,
பூவும் நீரும் புனை தளிரும் என,
தூவும்; அள்ளிப் பிசையும்; துகைக்குமால்-
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே. 142

உரகம் பூண்ட உருளை பொருந்தின
இரதம் ஆயிரம், 'ஏ' எனும் மாத்திரை,
சரதம் ஆகத் தரைப் படச் சாடுமால்-
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே. 143

அவ் இடத்தினில், ஆய் மருந்தால், அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டென,
எவ் இடத்தினும் வீழ்ந்த இனத்தலைத்
தெவ் அடங்கும் அவ் வலியவர் தேறினார். 144

தேறினார் கண் நெருப்பு உகச் சீறினார்;
ஊறினார் வந்து, இளவலை ஒன்றினார்;
மாறு மாறு, மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார். 145

விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம்
புகட, உற்ற பொறுத்தன, போவன,
துகள் தவத் தொழில் செய் துறைக் கம்மியர்
சகடம் ஒத்தன, தார் அணி தேர் எலாம். 146

வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்,
காலின் வந்த அரக்கனை; 'கா; இது
போலும் உன் உயிர் உண்பது, புக்கு' எனா,
மேல் நிமிர்ந்து, நெருப்பு உக வீசினான். 147

'ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம்' என, தேவர்கள்
ஊர் அழித்த உயர் வலித் தோளவன்
தேர் அழித்து, ஓர் இமைப்பிடைச் சென்றதால். 148

அந்த வேலையின், ஆர்த்து எழுந்து ஆடினார்,
சிந்தை சால உவந்தனர், தேவர்கள்-
'தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன்' என்பது ஓர் ஏம்பலால். 149

அழிந்த தேரின்நின்று, அந்தரத்து, அக் கணத்து,
எழுந்து, மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்,-
'கழிந்து போகலை, நில்!' என, கைக் கணை
பொழிந்து சென்றனன்-தீ எனப் பொங்கினான். 150

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
19. நாகபாசப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி