Friday, 21 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 100

வாலி சொன்ன அறம்


உறவினர் இருவர் போரிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒருவர் மேல் கருணை காட்டி, மற்றொருவர் மார்பில் மறைந்திருந்து அம்பைப் பாய்ச்சுதல் என்ன தருமமோ? என்னைப் பொருத்த மட்டில் அது  தகுதி இல்லாத செயல் - என்றான் வாலி  91

வீரம் இல்லாதது 
விதி முறைமை இல்லாதது 
உன் மண்ணுக்கு நான் பாரம் அன்று 
உனக்கு நான் பகை இல்லை 
பண்பு இல்லாமல், நெஞ்சில் ஈரம் இல்லாமல் என்ன செயல் செய்திருக்கிறாய். 92

இரு பாலாரையும் பார்த்து, எல்லாருக்கும் ஒத்ததைச் செய்வதன்றோ அறம்? 
அதனை விட்டுவிட்டு ஒருவருக்கு உதவலாமா?  93

நேர்ந்த பகையைப் போக்க உனக்குத் துணை வேண்டுமென்றால், அரிமாவை விட்டுவிட்டு முயலைத் துணையாக்கிக் கொள்வதா? 94

நிலாவுக்குக் களங்கம் இருக்கிறது என்று சூரிய குலத்துக்கும் களங்கம் உண்டாக்கிக்கொண்டாயே 95

ஒளிந்திருந்து என் உயிரை வாங்கிய நீ ஏறு போல் நிற்பாயோ? 96

நீ வலியைக் கொல்லவில்லை 
அற வேலியைக் கொன்றாய் 97

உன் மனைவியை ஒருவன் கொள்ள நீ வேருவனைக் கொன்றாய் 98

இவற்றைக் கேட்ட இராமன் தன் செயல் முறை என்று சொல்கிறான் 99

குகையிலிருந்து நீண்டநாள் நீ வெளிவராத போது 
முதியோர் சூட்டிய முடி என்று என்பதை நினைக்காமல் 
தம்பியைத் துன்புறுத்தினாய் 100

பாடல்

'இருவர் போர் எதிரும் காலை, இருவரும் நல் உற்றாரே;
ஒருவர் மேல் கருணை தூண்டி, ஒருவர்மேல், ஒளித்து நின்று,
வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ? பிறிது ஒன்று ஆமோ? தக்கிலது என்னும் பக்கம். 91

'வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று; பண்பு அழிந்து
ஈரம் இன்றி, இது என் செய்தவாறு அரோ? 92

'இருமை நோக்கி நின்று, யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ, அறம் காக்கின்ற
பெருமை என்பது? இது என்? பிழை பேணல் விட்டு,
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ? 93

'செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின்,
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி, ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ? 94

'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு,
ஆரியன் பிறந்து ஆக்கினையாம் அரோ! 95

'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து
உற்ற என்னை, ஒளித்து, உயிர் உண்ட நீ,
இற்றையில், பிறர்க்கு, இகல் ஏறு என,
நிற்றிபோலும், கிடந்த நிலத்து அரோ! 96

'நூல் இயற்கையும், நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும், சீலமும், போற்றலை;
வாலியைப் படுத்தாய் அலை; மன் அற
வேலியைப் படுத்தாய் - விறல் வீரனே! 97

'தாரம் மற்று ஒருவன் கொள, தன் கையில்
பார வெஞ் சிலை வீரம் பழுதுற,
நேரும் அன்று, மறைந்து, நிராயுதன்
மார்பின் எய்யவோ, வில் இகல் வல்லதே?' 98

என்று, தானும் எயிறு பொடிபடத்
தின்று, காந்தி விழிவழித் தீ உக,
அன்று அவ் வாலி, அனையன விளம்பினான்.
நின்ற வீரன், இனைய நிகழ்த்தினான்: 99

'"பிலம் புக்காய் நெடு நாள் பெயராய்" எனப்
புலம்புற்று, உன் வழிப் போதலுற்றான் தனை,
குலம் புக்கு ஆன்ற முதியர், "குறிக் கொள் நீ -
அலம் பொன் தாரவனே! - அரசு" என்றலும், 100

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

3 comments:

 1. In this fashion my colleague Wesley Virgin's adventure starts with this SHOCKING AND CONTROVERSIAL video.

  As a matter of fact, Wesley was in the military-and soon after leaving-he discovered hidden, "mind control" secrets that the CIA and others used to get whatever they want.

  These are the exact same secrets lots of famous people (notably those who "come out of nothing") and the greatest business people used to become wealthy and famous.

  You probably know how you only use 10% of your brain.

  Mostly, that's because the majority of your brainpower is UNTAPPED.

  Maybe this conversation has even occurred INSIDE OF YOUR own head... as it did in my good friend Wesley Virgin's head seven years back, while riding an unregistered, beat-up trash bucket of a vehicle without a license and in his bank account.

  "I'm very fed up with going through life check to check! Why can't I become successful?"

  You've taken part in those types of conversations, am I right?

  Your success story is waiting to start. Go and take a leap of faith in YOURSELF.

  Take Action Now!

  ReplyDelete
 2. Poet Kamban, the author of the poem has created the controversial point. Not I am.

  ReplyDelete
 3. வாலி கூறுவது சரியா
  விடை
  அவரவர் பார்வை அவரவர் உள்ளத்தில் ஊறிக் கிடக்கும் எண்ணத்தைப் பொருத்தது.

  ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி