Thursday, 23 January 2020

திருவாசகம் – புணர்ச்சிப்பத்து – Tiruvasagam – Uniting - chapter 27

புணர்ச்சிப்பத்து



ஆசிரிய விருத்தம்

சுடர்பொற் குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட்டு இன்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என் ஆரமுதைப்
புடைபட் டிருப்பது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438

  • என்று அவனோடு கூடியிருப்பேன் 

ஆற்றகில்லேன் அடியேன் அரசே அவனி தலத்ததைப் புலனாய
சேற்றில் அழுந்தாச் சிந்தைசெய்து சிவன் எம் பெருமான் என்று ஏத்தி
ஊற்று மணல்போல் நெக்கு நெக்கு உள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்பது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 439

  • உலகச் சேற்றில் பிறக்காமல் 

நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத்து அடியார்முன்
வேண்டும் தனையும் வாய்விட்டு அலறி விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440

  • உள்ளத்தில் அள்ளிக்கொண்டு 

அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும்
சொல்லிப் பரவும் நாமத்தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.441

  • சொல்லும் பொருளும் கடந்தவன் 

திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்தும் காண மாட்டா அம்மான் இம்மா நிலம் முழுதும்
திகழப் பணிகொண்டு என்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்
புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.442

  • ஆ ஆ என்ற நீர்மை

பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற்கு அருள் செய்யப்
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மாலுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்து அன்பாய்ப்
புரிந்து நிற்பது என்று கோல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443

  • பரமானந்தம் 

நினையப் பிறருக்கு அரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனை ஒப்பாரை இல்லாத தனியை நோக்கித் தழைத்துத் தழைத்த கண்டம்
கனையப் கண்ணீர் அருவி பாயக் கையும் கூப்பிக் கடி மலரால்
புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444

  • மலரால் புனையப் பெறுவது என்றுகொல்லோ 

நெக்கு நெக்கு உள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானா விதத்தால் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பது என்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445

  • நானாவிதக் கூத்து 

தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே நாயேன் தனை ஆண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதா மணியே என்று என்று ஏத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்
போது ஆய்ந்து அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446

  • அவன் தந்தை, தாய் 

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
முப்பாய மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போது அணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447

  • என்னை ஆண்ட பார்ப்பானே 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி