Friday, 24 January 2020

திருவாசகம் – திருக்கழுக்குன்றப் பதிகம் – Tiruvasagam – Tirukkalukkundram - chapter 30

திருக்கழுக்குன்றப் பதிகம்


ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணக்கிலாததோர் இன்பம் மேவுரும் துன்பமே துடைத்து எம்பிரான்
உணக்கிலாததோர் வித்துமேல் இளையாமல் என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 468

  • உன் பெயரைச் சொன்னால் இன்பம் 

பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே
சட்டம் நேர்பட வந்திலாச் சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடையாய எம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 469

  • சழக்கன் - வம்புக்காரன்

மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக் கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்ற நின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 470

  • மலம் கெடுத்தவன் 

பூணொணாத ஓர் அன்பு பூண்டு பொருந்தி நாள்தொறும் போற்றரும்
நாணொணாத ஓர் நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்தி நான்
பேணொணாத பெருந்துறைப் பெருந் தோணி பற்றி உகைத்தலுங்
காணொணாத் திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 471

  • பெருந்துறை என் வாழ்வுக்கு உதவும் தோணி 

கோல மேனி வராகமே குணமாம் பெருந்துறைக் கொண்டலே
சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமே கரியாக நான் உனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமே உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 472

  • உன் பெயரைச் சொன்னதும் வந்து காட்டினாய் 

பேதம் இலாததொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரணாமெனக்
காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 473

  • கற்பு = கல்வி

இயக்கிமார் அறுபத்து நால்வரை எண்குணம் செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப் பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க் கழல் தந்தெனக்
கயக்க வைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே. 474

  • துயக்கு = தீங்கு 
  • கயக்க வைத்து = கலங்க வைத்து

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
30. திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம்
(திருக்கழுக்குன்றத்தில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி