Tuesday, 21 January 2020

திருவாசகம் – திருத்தசாங்கம் – Tiruvasagam – Ten parts 19

திருத்தசாங்கம்


நேரிசை வெண்பா

1 - பெயர்

ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலாரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358

  • கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் பயர்களைச் சொல் 
  • ஆரூரன் 
  • செம்பெருமான் 
  • வெண்மலாரான் 
  • பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று.

2 - நாடு

ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி. 359

  • தென்பாண்டி நாடு

3 - ஊர்

தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர். 360

  • உத்தரகோசமங்கை

4 - ஆறு

செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு. 361

  • ஆனந்தம்

5 - மலை

கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362

  • முத்தி அருளும் மலை

6 - ஊர்தி

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363

  • வெள்ளைக் குதிரை 

7 - படை

கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்
மாற்றாறை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364

  • மும்மலங்களை ஏற்றும் கழுமரம் - சூலம்

8 - முரசு

இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை. 365

  • பிறவிப் பகையைக் கலக்கும் நாதம்  

9 - தார்

ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார். 366

  • தீவினை அணுகாமல் காக்கும் அறுகம்புல் 

10 - கொடி

சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி. 367

  • பகைவரை மருட்டும் ஏறு (காளை) 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் - 
19.திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை
(தில்லையில் அருளியது)

சூலம்
மும்மலங்களை ஏற்றும் கழுமரம்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி