Friday, 24 January 2020

திருவாசகம் – திரு ஏசறவு – Tiruvasagam – self-blaming - chapter 38

திரு ஏசறவு

கொச்சகக் கலிப்பா

தான் அருள் பெற்றதை ஏசல்

இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்பு உருக்கிக்
கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலினைகள்
ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகளெல்லாம்
பெருங் குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே. 546

  • நரிகளைக் குதிரை ஆக்கினாய் 
  • காட்டு நரி \ வீட்டுக் குதிரை

பண்ணார்ந்த மொழிமங்கை பங்கா நின் ஆளானார்க்கு
உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட் டாள்வாய் நீ வா என்னக்
கண்ணார உய்ந்தவா றன்றே உன் கழல் கண்டே. 547

  • நீ வா என்றாய் 
  • உய்ந்தேன்

ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற்கு ஆஆ என்று
ஓதமலி நஞ்சுண்ட உடையானே அடியேற்குன்
பாதமலர் காட்டியவா றன்றே எம் பரம்பரனே. 548

  • தமர் ஆரும் இன்றி நரகில் அழுந்தினேன் 
  • ஆ ஆ வா - என்று அழைத்துக்கொண்டாய் 

பச்சைத்தா லரவாட்டீ படர்சடையாய் பாதமலர்
உச்சத்தார் பெருமானே அடியேனை உய்யக்கொண்டு
எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என்
சித்தத்தா றுய்ந்தவா றன்றே உன் திறம் நினைந்தே. 549

  • சிறுதெய்வம் ஏத்தாமல் 

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கியலால் வார்கழல் வந்து
உற்று இருமாந்து இருந்தேன் எம் பெருமானே அடியேற்குப்
பொற்றிவிசு நாய்க்கிடுமா றன்றே நின் பொன்னருளே. 550

  • நாய்க்கு அரியணையா
  • நான் நாய் 

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நஞ்சாய துயர் கூர நடுங்குவேன் நின்னருளால்
உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை
அஞ்சேலென் றாண்டவா றன்றே அம் பலத்தமுதே. 551

  • மடவார் கண்ணால் இடர்ப்பட்டேன் 

என்பலைப் பிறப்பறுத்திங் கிமையவர்க்கும் அறியவொண்ணா
தென்பாலைத் திருப்பெருந் துறையுறையஞ் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்தருளி ஆட்கொண்ட
தென்பாலே நோக்கியவா றன்றே எம் பெருமானே. 552

  • என்பால் பிறப்பு அறுத்தாய் 

மூத்தானே மூவாத முதலானே முடியில்லா
ஓத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே புகுந்திங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவா றன்றே எம் பெருமானே. 553

  • ஓத்து - மறை
  • இன்மையுமாய் உண்மையுமாய்ப் பூத்தானே

மருவினிய மலர்ப்பாதம் மனத்தில் வளர்ந் துள்ளுருகத்
தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமா னென்றேத்திப்
பருகிய நின் பரங்கருணைத் தடங்களிற் படிவாமாறு
அருளெனக்கிங் கிடைமருதே இடங்கொண்ட அம்மானே. 554

  • உன் கருணைக் குளங்களில் படியும் வண்டலாக நான் ஆகுமாறு எனக்கு அருள் தந்தாய்  

நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே. 555

  • சிவாயநம
  • தானே வந்து என் உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் ஞெய்தான் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
38. திரு ஏசறவு
(திருப்பெருந்துறையில் அருளியது)


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி