Thursday, 23 January 2020

திருவாசகம் – வாழாப்பத்து – Tiruvasagam – Not Liking to Live - chapter 28

வாழாப்பத்து


அறு சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. 448

  • ஆரோடு நொந்து கொள்வேன் 

வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்கு உணர்வு இறந்து உலகம் ஊடுருவும்
செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே எனனை ஆள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. 449

  • என்னை நீ கூவிக் கொள் 

பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்று அருள் புரியாயே. 450

  • உன்னோடு ஊடுகிறேன் 
  • உன்னை உவக்கிறேன் 

வல்லை வாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லை மூவுலகும் உருவி அன்று இருவர் காணும்நாள் ஆகி ஈறு இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 451

  • உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு எனக்கு இல்லை 

பண்ணின் நேர் மொழியாள் பங்க நீ அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 452

  • என் ஐம்பலனும் உன்மேல் வைக்க அருள் தா 

பஞ்சின் மெல்லடியாள் பங்க நீ அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டு நீ அளித்த அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 453

  • உன் அருளை மருளினால் மறந்தேன் 

பரிதி வாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்து நான் வாழுமாறு அறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 454

  • வாழுமாறு அறியா மருளன் நான் 

பந்தனை விரலாள் பங்க நீ யல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை
வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455

  • அமுதே 

பாவ நாசா உன் பாதமே யல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தம் தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுலகு உருவ இருவர் கீழ் மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே
மா வுரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456

  • என் பாவங்களை நாசம் செய்பவன் 

பழுதில் சொல் புகழால் பங்க நீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457

  • பிறரைத் தொழமாட்டேன் 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
28. வாழாப்பத்து - முத்தி உபாயம்
(திருப்பெருந்துறையில் அருளியது)

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி