Friday, 24 January 2020

திருவாசகம் – திருப்புலம்பல் – Tiruvasagam – lamentation - chapter 39

திருப்புலம்பல்

கொச்சகக் கலிப்பா

பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556

  • உன் கழல்கள் தவிரப் பிறவற்றைப் புகழமாட்டேன் 

சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557

  • உன்னை அல்லாமல் வேறு துணை எனக்குத் தெரியவில்லை 

உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 558

  • பசு, அதன் கன்று - போல் மனம் கசிந்து உருக - நான் உன்னை வேண்டுகிறேன். 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
39. திருப்புலம்பல் - சிவானநத முதிர்வு
(திருவாரூரில் அருளியது)


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி