Saturday, 25 January 2020

திருவாசகம் – திருப்படை எழுச்சி – Tiruvasagam – Holy Weapons - chapter 46

திருப்படை எழுச்சி

கலிவிருத்தம்

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615

  • வாள் - ஐந்து புலன் - ஞான வாள்
  • பறை - ஓங்கார நாதம் 
  • மா - ஏறு - காளை 
  • குடை - மதி
  • கவசம் - திருநீறு 
  • போரிட்டுக் கைப்பற்றும் ஊர் - வானவூர் 
  • படை - மாயப் படை 

  • நாம் ஞானத்தை வாளாகக் கொள்வோம் 
  • அவன் ஒங்கார நாதம் எழுப்புவான் 
  • காளை ஊர்தியில் வருவான் 
  • நிலாக் குடையுடன் வருவான் 
  • நாம் திருநீற்றுக் கவசம் அணிந்துகொள்வோம் 
  • அவன் வானவூரைக் கைப்பற்றுவோம் 
  • மாயப் படையைத் தடுத்து நிறுத்துவோம்  

தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர்
ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்
திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்
அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616

  • தொண்டர்களே! தூசிப்படையாகச்  செல்லுங்கள் (துணிக்கொடி)  
  • பத்தர்களே அவர்களைச் சூழ்ந்து செல்லுங்கள் 
  • யோகிகளே பேரணியாகத் தாவிச் செல்லுங்கள் 
  • சித்தர்களே கடைசியில் செல்லும் கூழைப் படையாகச் செல்லுங்கள் 
  • அண்டர் நாட்டை (வானுலகை) நாம் ஆள்வோம் 
  • அல்லல் நம்மை வருத்தக் கூடாது அல்லவா 

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
46. திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர்
(தில்லையில் அருளியது)


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி