Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - சடாயு காண் படலம் - KambaRamayanam 3-4 20

ஐயுற்றுத் தெளிதல்


வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை,
அனையவன் தானும் கண்டு, அயிர்த்து நோக்கினான் -
'வினை அறு நோன்பினர் அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்; புலவரோ?' எனா. 11

 • கழுகு வேந்தன் சடாயு இரானைப் பார்த்தான் 
 • முனிவர் அல்லர். கையில் வில் உள்ளது. 
 • தலை முடியப்படுள்ளது 
 • புலவரோ - என்று நினைத்தான் 

'புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென்; நேமியானும், அவ்
வரம் தரும் இறைவனும், மழுவலாளனும்,
கரந்திலர் என்னை; யான் என்றும் காண்பெனால். 12

 • இந்திரன் முதலான தேவர்களை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன் 
 • சக்கரம் கொண்ட மாலும், மழு ஏந்திய சிவனும் யான் என்பதை அறிவர் 

'காமன் என்பவனையும், கண்ணின் நோக்கினேன்;
தாமரைச் செங் கண் இத் தடங் கை வீரர்கள்
பூ மரு பொலங் கழற் பொடியினோடும், ஒப்பு
ஆம் என அறிகிலென்; ஆர்கொலாம் இவர்? 13

 • காமனைக் கூடப் பார்த்திருக்கிறேன் 
 • இவர்கள் யாரோ 

'உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்;
மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச்
சிலை வலி வீரரைத் தெரிகிலேன்' எனா, 14

 • மலர்மகள் போன்றவளுடன் வந்திருக்கின்றனர்

'கரு மலை செம் மலை அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங் கண் வீரர்தாம்,
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை, இருவரும் ஒத்துளார் அரோ.' 15

 • என் நண்பன் திருமால் போல் இருவரும் உள்ளனர் 
 • ஆரோ தெரியவில்லை 

எனப் பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான்,
சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான்,
'கனப் படை வரி சிலைக் காளை நீவிர் யார்?
மனப்பட, எனக்கு உரைவழங்குவீர்' என்றான். 16

 • இவ்வாறு ஐயுற்றவன் வினவினான் 
 • வில் வீரர்களே நீவிர் யாவிர் 

வினவிய காலையில், மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால்,
'கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்,
வனை கழல் தயரதன், மைந்தர் யாம்' என்றார். 17

 • தயரதன் மைந்தர் என்றனர்

உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,
தரைத்தலை இழிந்து, அவர்த் தழுவு காதலன்,
'விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன் தன்,
வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான். 18

 • கேட்டதும் வணங்கினான்
 • வேந்தன் நலமா என்றான் 

'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும்,
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்;
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான். 19

 • வாய்மை காத்து, வேந்தன் துறக்கம் எய்தினான் என்றனர் 
 • கேட்டதும் மயக்கமுற்றறுத் தெளிந்தான் 

தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம்
கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்,
அழிவுறு நெஞ்சினன், அரற்றினான் அரோ. 20

 • இராமன் கழுகின் மன்னனைத் தழுவினான்  
 • மன்னன் புலம்பினான்

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
4. சடாயு காண் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

கழுகு வேந்தன் சடாயு

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி