Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 extra

மிகைப் பாடல்கள்

'அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப்
பெருந்தவம் செய்தவன், பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல்-வரத!-யாம் எலாம். 14-1

  • இராவணன் மாட்சியால் வருந்தினோம் - என்று முனிவர்கள் இராமனிடம் கூறினர் 

'தேவர்கள் தமைத் தினம் துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி, திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர் செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன் வலத்துக்கு யார் வலார்? 14-2

  • தேவர் மனைவியரை இராவணன் சிறைப்படுத்தினான் - என்றனர் 

'அவன் வலி படைத்து, மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை, தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை, மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர்-இறைவ!-இன்னுமே. 14-3

  • அவனைச் சேர்ந்தவர்கள் 
  • சிவன், மூவர், தேவர், சித்தர், முனிவர், புங்கவர் - முதலான அனைவரையும் ஓட்டிவிட்டனர் - என்றனர் 

'ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! 14-4

  • அரக்கர் எத்தனையோ பேர் 

'வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள்,
"கள்ளிய அரக்கரைக் கடிகிலேன்" எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற்
பள்ளிகொள்பவன் பொருது இளைத்த பான்மையான். 14-5

  • சிவன் அவர்களைக் கைகழுவி விட்டுவிட்டான் 

'நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ் சுடர் முதல் வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ் சிறைப்பட்டு மீண்டுளார்.' 14-6

  • பிரமன் அவர்களிடம் நல்லத்தனமாகப் பேசிக்கொண்டு தன் கடமையைச் செய்கிறான்  

என்று, பினும், மா தவன் எடுத்து இனிது உரைப்பான்;
'அன்று, அமரர் நாதனை அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர் வலிமைக்கு நிகர் யாரே! 53-1

  • இந்திரனையே சிறை வைத்து விடுவித்தனர் 

'ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே,
தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின் கடனது' என்றான்;
நாயகனும், 'நன்று!' என அவற்கு நவில்கின்றான். 53-2

  • அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுதல் நின் கடன் - என்று முனிவர்கள் இராமனிடம் முறையிட்டனர் 
கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்



No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி