Monday, 27 January 2020

கம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - KambaRamayanam 3-2 20

தேவேந்திரன் நேரில் வந்து அழைத்தும்

சரவங்கன் வானுலகம் வர மறுத்தது 


பல் ஆயிரம் மா மணி பாடம் உறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகைதாம்
எல்லாம் உடன் ஆய் எழலால், ஒரு தன்
வில்லால், ஒளிர் மேகம் எனப் பொலிவான்; 11

  • தேவேந்திரன் மேகம் வில் ஒளியில் மின்னுவது போல வந்தான் 

மானா உலகம்தனில், மன்றல் பொரும்,
தேன் நாறு, நலம் செறி, தொங்கலினான்;
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான்; 12

  • இந்திரன் வான் நாடும் முனிவர் கண்கள் மொய்க்கும் பேரொளியான் 

வெல்லான் நசையால், விசையால், விடு நாள்,
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல்,
நெல் வாலும் அறாத, நிறம் பிறழா,
வல் வாய் மடியா, வயிரப் படையான்;- 13

  • இராவணனை வெல்லும் வயிரப் படை கொண்டவன் 

நின்றான். எதிர் நின்ற நெடுந் தவனும்
சென்றான், எதிர்கொண்டு; சிறப்பு அமையா,
'என்தான் இவண் எய்தியவாறு?'எனலும்,
பொன்றாத பொலங் கழலோன் புகலும்: 14

  • முனிவன் எதிர்கொண்டு வரவேற்றான் 
  • வந்த நோக்கத்தை வினவினான் 

"நின்னால் இயல் நீதி நெடுந் தவம், இன்று,
என்னானும் விளம்ப அரிது" என்று உணர்வான்
அந் நான்முகன், நின்னை அழைத்தனனால்;
பொன் ஆர் சடை மாதவ! போதுதியால்; 15

  • இந்திரன் சரவங்கன் தவத்தைப் புகழ்ந்தான் 

'எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால்;
நந்தாத பெருந் தவ! நாடுஅது நீ
வந்தாய்எனின், நின் எதிரே வருவான்; 16

  • வானுலகம் வருக என முனிவனை அழைத்தான் 

'எல்லா உலகிற்கும் உயர்ந்தமை, யான்
சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்;
நல்லாளுடனே நட, நீ' எனலும்,
'அல்லேன்' என, வால் அறிவான் அறைவான்: 17

  • வர விரும்பவில்லை - என்றான் முனிவன்

'சொல் பொங்கு பெரும் புகழோடு! தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ?
அற்பம் கருதேன்; என் அருந் தவமோ
கற்பம் பல சென்றது; காணுதியால்; 18

  • என் தவம் போதும் - என்றான் முனிவன் 

'சொற்றும் தரம் அன்று இது; சூழ் கழலாய்!
பெற்றும், பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல? நீ இவண் வந்ததனால்,
முற்றும் பகல்தானும் முடிந்துளதால்; 19

  • நீயே இங்கு வந்ததால் இதுவே வானுலகம் ஆயிற்று - என்றான் முனிவன் 

'சிறு காலை இலா, நிலையோ திரியா,
குறுகா, நெடுகா, குணம் வேறுபடா,
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா, நெறி எய்துவென்;- வான் உடையாய்!' 20

  • ஐம்பூதங்களும் உகினும் உகாத நெறியை நான் எய்துவேன் - என்றான் முனிவன் 

கம்ப இராமாயணம்  3 ஆரணிய காண்டம் -  
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி