Tuesday, 31 December 2019

திகுக்குறள் - பிரிவாற்றாமை - Separation, Unendurable - 1151-1160

பிரிவாற்றாமை

மனைவி சொல்கிறாள்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. ⁠1151

 • பிரிது செல்லாமல் இருப்பாயானால் என்னிடம் பேசு 
 • பிரிந்து செல்வாயானால், நீ திரும்பி வரும்வரையில் உயிருடன் இருக்கக் கூடியவரிடம் உன் பிரிவு பற்றிச் சொல்.  

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. ⁠1152

 • அவரது பார்வையில் இன்பம் இருக்கிறது 
 • அவரது புணர்ச்சியில் பிரிந்துவிடுவாரோ என்று அஞ்சும் துன்பம் இருக்கிறது. 

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். ⁠1153

 • என் கணவர் அறிவுடையவர். என்றாலும் அவரைப்பற்றித் தெளிவு கொள்ள முடியவில்லை. ஓரிடத்தில் பிரிந்து செல்லும் பண்பு ஆடவருக்கு உண்டு அல்லவா? 

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. ⁠1154

 • அவர் எனக்கு அளி செய்தார் (உடலின்பம் தந்தார்) 
 • அஞ்சாதே என்றார் 
 • அவர் என்னை விட்டுவிட்டுச் சென்றால், அவர் சொல்லை நம்பிய என்மேல் தவறு உண்டோ? 

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. ⁠1155

 • ஏதாவது தடுக்கவேண்டும் என்று விரும்பினால், வாழ உதவுபவர் பிரிவைத் தடு 
 • பிரிந்தால் மீண்டும் சேர்தல் அரிய செயவாகிவிடுகிறது.  

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. ⁠1156

 • தன் பிரிவை என்னிடம் கூறும் கொடிய மனம் அவரிடம் இருக்குமாயின், திரும்பி வந்து அளி செய்வார் என்னும் நப்பாசை கொள்வது எனக்கு அரிது. 

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. ⁠1157

 • முன்கை மணிக்கட்டு வளையல் கழல்கின்றன. 
 • துறைவன் என்னைத் துறந்திருக்கிறான் என்பதை அவை தூற்றவில்லையா? 

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. ⁠1158

 • இனமாக இல்லாதவர்கள் வாழும் ஊரில் ஒருத்தி வாழ்தல் துன்பம். 
 • அதனினும் துன்பம் இனிய கணவரைப் பிரிந்திருத்தல்.  

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. ⁠1159

 • தீ தொட்டால் சுடும் 
 • காம நோயாகிய தீ விட்டு விலகினால் ச்டுகிறதே 

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். ⁠1160

 • கணவர் பிரிவை அரிதாகப் பொறுத்துக்கொண்டு 
 • பிரிவுத் துன்ப நோயை நீக்கிப் பொறுத்துக்கொண்டு 
 • அவருக்குப் பின்னர் வரும்வரையில் உயிருடன் வாழ்பவர் பலர் உள்ளனர். [என்னால் முடியாது] 


Tirukkural - Military spirit - 771-780

Military spirit

 1. A soldier warns his opponent “Not to sand before opposing my king; there are many standing as hero-stone who oppose him earlier”.   
 2. It is better attempting to kill an elephant using his spear, than gaining victory in shooting a rabbit.  
 3. It is the greatest man-power, not to fight against his opponent, if he loses his weapon in war, releasing mercy upon him.  
 4. A soldier threw his spear on war-elephant; by this having no weapon to fight against, picks up the spear that is hitting in his chest, and laughs at his opponent, being ready fight.
 5. It is weakness to a brave warrior, if he winks his eyelids in fear, while a spear coming to attack him.
 6. A warrior will consider a day that has been wasted, if he does not have a new wound in war.
 7. It is not a beneficial ornament, an anklet in his leg, if it is not moving in war to earn reputation.
 8. A warrior does not mind the wound in his body, in fear, will not lose his reputation, even if his king force other kind of rage,   
 9. Without fulfilling his revenge, a warrior will not die; if he dies before who will blame him?
 10. If a man has a chance of dying, making the king shedding tears in loss of him, it should be received even by begging.

படைச்செருக்கு


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். ⁠771

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. ⁠772

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. ⁠773

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். ⁠774

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. ⁠775

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. ⁠776

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. ⁠777

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். ⁠778

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். ⁠779

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. 780

Tirukkural, why my translation


Why

 • Tirukkural is the oldest ethic poem in Tamil. It is in a form of poetry ‘couplet’ (Kural). Scholars have its age as B.C. 31, January 14 or15 that falls on the first day of Tamil-month ‘Thai’.
 • It has been translated in many prominent languages of the world.
 • It explains human life of model. It has three parts: moral life of an individual, esteemed wealth of public and pleasure of sexual love.
 • Again, the first part splits into four: The External Mighty acting on human life, moral activities of a family, the moral activities of renounced man and destiny that affect the life.
 • The second part deals with the duty of the Ruler and his allies, the society with various kinds of people, etc. that is deemed to be the wealth of a society.
 • The third one speaks about the pleasure in sexual love: before marriage and after marriage.
 • It is better to enter into the ancient literature with the basic knowledge about it.

Something about the translations:

 • G. U. Pope translated the Tamil-couplets into English-couplets as a translated English literature. Kavi Yogi Maharishi Dr. Shuddhananda Bharati and K. M. Balasubramaniam followed Pope’s pattern.
 • As a Tamil poet, I see what kind difficulties the original work faces to convey the meaning in its poetic form. 
 • Prosody form is easier than poetic form to convey the true meaning of the original work, in translation. 
 • Some foreign scholars like W. H. Drew, John Lazarus and F.W. Ellis and native schors like M. S. Purnalingam Pillai, V. R. Rammachandra Deetchadar, M. R. Rajagopala Iyyar and Va. Ve. Su. Iyyar used prosody form in translating this work. Their translations are excellent, but, in some portions, bewildering, because, they consider the words in their individual meaning, instead of context meaning (that is meaning of the words used in sentence).
 • Hence, this translation appears.     
Same message in Tamil

திருக்குறள் - படைச்செருக்கு - Military spirit - 771-780

படைச்செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். ⁠771

 • என் தலைவன் முன் அவனை எதிர்த்து நிற்காதீர். 
 • முன்னர் நடந்த போரில் என் தலைவனை எதிர்த்து நின்றவர் நடுகல் ஆயினர். [நீங்களும் நடுகல் ஆகிவிடுவீர்கள்]  

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. ⁠772

 • முயலின்மீது அம்பு எய்து வெல்வதை விட 
 • யானைமீது வேலைப் பாய்ச்ச அது தப்பியோட தான் ஏமாந்து போனது மேல். [உயர்ந்த குறிக்கோள் வேண்டும்]

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. ⁠773

 • எதற்கும் அஞ்சாமை பேராண்மை எனப்படும். 
 • (போர்க்களத்தில் எதிர்ப்பவன் படைக்கருவியை இழந்துவிட்டது போன்ற) ஊறு அடைந்துவிட்டால் அவனுக்கு உதவிப் போரிடுவது அந்தப பேராண்மைக்குக் கவசம் ஆகும். 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். ⁠774

 • போர்க்களத்தில் தன் கையிலிருந்த வேலைக் களிற்றின்மீது வீசியவன், பகைவன் தன் மார்பில் பாய்ச்சிய வேலைப் பிடுங்கிக் கையில் வைத்துக்கொண்டு பகைவனைப் பார்த்துச் சிரிக்கிறான். [போர்க்களத்தில் வீரம்]  

விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. ⁠775

 • பகைவன் வீசும் வேலுக்கு அஞ்சிக் தன் விழித்த கண்ணை மூடித் திறப்பானேயானால், அது மனத்திட்பம் கொண்ட வீரனுக்கு இழுக்கு. 

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. ⁠776

 • தன் உடலில் போர்க்காயம் படாத நாளை, வீரன், தான் வழுக்கி விழுந்த நாளாக எண்ணிக்கொள்வான். [நாள்தோறும் போரிட வீரன் விரும்புவான்]

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. ⁠777

 • சுற்றும் புகழ் அவனுக்கு வேண்டும் 
 • தன் உயிர் அவனுக்கு வேண்டியதில்லை 
 • அவன் தன் காலில் அணிந்திருப்பதுதான் வீரக் கழல் 
 • அவனுக்குத்தான் அது அழகு [பிறர் அணிந்திருக்கும் கழலுக்கு அழகு இல்லை] 

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். ⁠778

 • உடலில் காயம் பட்டால் உயிருக்கு அஞ்சாதவன் மறவன் 
 • இறைவனே எதிர்த்து நின்று போரிட்டாலும், அவன் நிலைதளர மாட்டான். 

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். ⁠779

 • இழைத்தது - வஞ்சினம் கூறியது 
 • இகவாமை - கைவிடாமை
 • தான் கூறிய வஞ்சினம் நிறைவேறவில்லையே என்று தன் உயிரை மாய்த்துக்கொள்பவனைத் தண்டிக்க வல்லார் யார்? [தன் வஞ்சினத்தை நிறைவேற்றவில்லை என்று அவனைத் தண்டிக்க முடியுமா] 

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. 780

 • தன்னைப் பேணிப் பாதுகாத்த அரசன் கண்ணீர் விடும்படிச் சாகும் நிலைமையை வீரன் அரசனிடம் பிச்சை கேட்டாவது பெற்றுக்கொள்ள வேண்டும். Tirukkural - The Excellence of an army - 761-770

The Excellence of an army 

 1. An army acting as a limb to the king, being undaunted, earns him victory, is the superior wealth of all.
 2. Undaunted having wound by attack, braveness in loss are the qualities of old army of the king.   
 3. What is the use of roaring waves against the floor? What is the use of enmity of a rat against a snake? So, the enemies are to me. – A man says.
 4. The army having not destroyed, not betraying, having braveness – is a limb to the king.
 5. Together, the army stands against the Dead-God, is the quality of an army.
 6. Killing men, izzat (maintaining the honour), dignity of marching and faith in victory – are four-fold qualities of army.
 7. The leading army is important, for, it is bearing attack.   
 8. Even though the army is wanting of enforcement, together it is fit to fight.
 9. If an army maintains its dignity without mean-thoughts, force-less anger and poverty in strength.
 10. Without the captain, the army having numeral strength is nothing.

படைமாட்சி


உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. ⁠761

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. ⁠762

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். ⁠763

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. ⁠764

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. ⁠765

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. ⁠766

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. ⁠767

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். ⁠768

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. ⁠769

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். ⁠770

Monday, 30 December 2019

திருக்குறள் - படைமாட்சி - The Excellence of an army - 761-770

படைமாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. ⁠761

 • யானை, குதிரை, தேர், படைக்கருவிகள் முதலானவை படையின் உறுப்புகள். 
 • இந்த உறுப்புகளைக் கொண்டு வெல்லும் படை அரசனுக்கு இருக்கும் செலவங்கள் பலவற்றுள்ளும் தலையாய செல்வம். 

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. ⁠762

 • போரில் துன்புறம்போது காயங்களுக்கு அஞ்சாமல் போரிடும் மனவுறுறுதி பழக்கப்பட்ட பழமையான படைக்கு அல்லாமல் பிறவற்றிற்கு இல்லை. 

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். ⁠763

 • கடலிலுள்ள உப்பு நீர் அலை வீசி ஒலிப்பதால் என்ன பயன்? - பகைவர் ஆரவாரம் அப்படிப்பட்டது. 
 • எலிகள் பலவற்றின் பகை நாகம் பெருமூச்சு விட்டாலே இல்லாமல் போய்விடும் - "பகைவர் எலி. நான் நாகம்" என்று ஒரு வீரன் பேசுகிறான்.  

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. ⁠764

 • மனம் சோராமலும், பகைவர்க்குத் துணைபோகாமலும் மனவுறுதி கொண்டிருப்பதே சிறந்த படை. 

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. ⁠765

 • கூற்றமே வந்து போரிட்டாலும் ஒன்று திரண்டு எதிர்த்துப் போரிடும் வல்லமை மிக்கதே சிறந்த படை. (கூற்றம் - உயிரைக் கொல்லும் தெய்வம்) 

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. ⁠766

 1. அஞ்சாமல் ஆட்களைக் கொல்லும் மறம் 
 2. மான உணர்வு 
 3. சிறந்த வழியில் முன்னேறுதல் 
 4. வெல்வோம் என்னும் மனத் தெளிவு - ஆகிய நான்கும் படைக்குப் பாதுகாவல் 

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. ⁠767

 • தார்ப்படை - முன்னே போருக்குச் செல்லும் படை (கூழைப்படை அதற்குத் துணையாக அதன் பின்னே செல்லும் படை) 
 • தானை என்று போற்றப்படுவது தார்ப்படை 
 • போரைத் தாங்கும் தன்மை கொண்டது இதுதான். 

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். ⁠768

 • பகைவரை அழிக்கும் தகைமையும், ஆற்றலும் இதற்கு இல்லாவிட்டாலும், ஒன்றுபட்டு தாக்கும் தகைமையால் இதற்கே பெருமை அதிகம். 

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. ⁠769

 • சிறுமைக் குணம் 
 • செல்லுபடி ஆகாத சினம் 
 • எண்ணிக்கையில் வறுமை - ஆகியவை இல்லாமல் இருக்குமாயின், அந்தப் படை வெல்லும். 

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். ⁠770

 • படை வீரர்கள் பலர் இருந்தாலும், படைத்தலைவன் இல்லாவிட்டால் படைக்கு ஆற்றல் இல்லை. 


Tirukkural - The way of accumulating wealth - 751-760

The way of accumulating wealth

The use of wealth
 1. Wealth will make a man mindful. Others can do this job.  
 2. All men will humiliate the poor. And all the men will praise the rich.
 3. Wealth is a torch that light the possessor everywhere.
 4. The wealth earned in right way will born the children: charity and enjoyment.
 5. The wealth will come along with kindness and grace. Otherwise leave the wealth backside.  
 6. Wealth of a king are: tax, custom-duty and brought from enemy’s region.
 7.  ‘Grace’ is mother. She will give birth of a child kindnesses. Wealth-nurse will cherish the child.  
 8. A man doing anything, is like watching elephants-fight sitting on the top of a hill.
 9. Earn wealth, for, it is the sword that will cut the ego of enemies.
 10. One who earns a lot of money, the charity and pleasure will join him.

பொருள்செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். ⁠751

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. ⁠752

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. ⁠752

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். ⁠754

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். ⁠755

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். ⁠756

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. ⁠757

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. ⁠758

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். ⁠759

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. ⁠760

திருக்குறள் - பொருள்செயல்வகை - The way of accumulating wealth - 751-760

பொருள்செயல்வகை

பொருளைச் செய்யும் (சேர்க்கும்) வகை 
பொருள் செய்யும் நலப்பாட்டு வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். ⁠751

 • ஒரு பொருளாக மதிக்கப்படாதவரைப் பொருட்படுத்தக்கூடிய ஒருவராக மதிக்கச் செய்யவல்லது பொருட்செல்வம் அல்லது வேறொன்றும் இல்லை. 

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. ⁠752

 • பொருள் இல்லாதவரை எல்லாரும் ஏளனப்படுத்துவர். 
 • செல்வருக்கு எல்லாரும் சிறப்புச் செய்வர்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. ⁠753

 • பொருள் ஏமாற்றாத விளக்கொளி 
 • நினைக்கும் இடத்திற்கெல்லாம் சென்று இருளைப் போக்கி ஒளியை உண்டாக்கும். 

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். ⁠754

 • பொருளானது, அறவழி, இன்பநெறி இரண்டையும் பெற்றுத்தரும்.
 • தீது செய்யாமல் ஈட்டிய பொருள்தான் இந்த இரண்டையும் செய்யும்.  

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். ⁠755

 • அருளையும் அன்பையும் அழைத்துக்கொண்டு வராத பொருட்செல்வத்தைத் தழுவிக்கொள்ளாமல் புரண்டு படுத்து விட்டுவிட வேண்டும்.  

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். ⁠756

 • வரியாகத் தனக்கு வந்து சேரும் பொருள் 
 • ஏற்றுமதி, இறக்குமதி வரியாகப் பெறப்படும் உல்கு பொருள் 
 • பகைவரை அழித்துப் பெறும் பொருள் - ஆகியவை வேந்தனுக்கு உரிய பொருள்கள். 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. ⁠757

 • அருள் தாய் 
 • அன்பு அவள் பெற்றுத் தரும் குழந்தை 
 • செல்வம் இருவரையும் பேணும் செவிலி 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. ⁠758

 • தன் கையில் பொருளை வைத்துக்கொண்டு செயலாற்றுபவன்
 • குன்றின்மேல் ஏறிக்கொண்டு யானைகள் போரிடுவதைக் காண்பது போல இன்பமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். 

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். ⁠759

 • பொருளை ஈட்டுக. 
 • எதிர்ப்போரின் செருக்கை அறுக்க வல்ல வாள் பொருளைப் போல வேறொன்றும் இல்லை. 

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. ⁠760

 • புகழொளி தரும் பொருளை, வயிரம் போல் தன்னிடம் நிலை கொள்ளும்படி ஈட்டி வைத்திருப்பவர்க்கு எண்ணிப் போற்றப்படும், ஏனைய இரண்டு பொருளாகிய அறம் செய்தலும், பாலின்பம் துய்த்தலும் தானே வந்து கிட்டும். 


Tirukkural / The fortification / 741-750

The fortification

 1. Fort prevents the force entering and protect insiders.
 2. Dike with water, bricks-wall, mountain and thick forest are kinds of forts.
 3. The first two of the above should have the fives: height, thickness, strong and difficulties in entering  
 4. It should have the capacity of simple defending and vast space to prevent the attacking force.  
 5. It should have vast area that not to be covered in seizing; it should have enough food sources inside for defenders.
 6. It should all kinds of materials to live in and defending army.
 7. It should have firmness not to be seized, not to be attacked without seizing and having betraying men.
 8. It should be vast, not to be covered by seizing army along with the strength of winning the attackers.  
 9. It should have proudness of destroying the attacker in the past.
 10. Whatever fitness it has, there is no use, if there are no defenders inside.

அரண்


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். ⁠741

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். ⁠742

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். ⁠743

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். ⁠744

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். ⁠745

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். ⁠746

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். ⁠747

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். ⁠748

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். ⁠749

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். ⁠750


திருக்கிறள் / அரண் / The fortification / 741-750

அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். ⁠741

 • வெளியிலிருந்து போர் தொடுக்கும் பகைவர்க்குத் தடுப்புக் கோட்டை
 • உள்ளிருந்து தம் பொருளைப் பாதுகாப்பவர்க்குப் பாதுகாப்புக் கோட்டை 

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். ⁠742

 • நீல நிற நீர் கொண்ட அகழி
 • சுடுமண் சுவர் 
 • மலை 
 • நிழல் தரும் அடர்ந்த காடு - ஆகியவை தடுப்பாய் அமைந்திருப்பது அரண். 

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். ⁠743

 • உயர்வு 
 • அகலம் 
 • உறுதி 
 • கடத்தற்கு அருமை - ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பது அரண் என்று நூல்கள் கூறுகின்றன. 

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். ⁠744

 • எளிய பாதுகாப்பாக, 
 • அகன்ற இடம் கொண்டதாக 
 • உள்ளே நுழையும் பகைவரின் ஊக்கத்தை அழிப்பதாக - அமைந்திருப்பது அரண்

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். ⁠745

 • பகைவர் கொள்ளுதற்கு  அரிதாக 
 • பகைவர் முற்றுகையின்போது, உள்ளிருப்பவர்களுக்கு போதிய உணவுப்பொருள் கொண்டு எளிமையாக நிலைகொண்டிருக்கும் வாய்ப்புகளைக் கொண்டதாக - அமைந்திருப்பவது அரண்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். ⁠746

 • கோட்டைக்குள் எல்லாப் பொருளும் இருப்பாகக் கொண்டு, வேண்டிய இடத்தில் அவற்றைத் தரும் ஆட்களைக் கொண்டிருப்பது - அரண். 

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். ⁠747

 • முற்றுகையிட்டும் 
 • முற்றுகையிடாமல் தாக்கியும்
 • உள்ளிருப்போர் அறைபோகியும் (காட்டிக்கொடுத்தும்) - கைப்பற முடியாததாக - அமைந்திருப்பது அரண். 

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். ⁠748

 • முற்றுகையைத் தடுத்து நிறுத்தி
 • முற்றுகையிட்டவரைப் பற்றாமல் தடுத்து 
 • உள்ளே வந்தவரை வெல்வது - அரண்  

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். ⁠749

 • முற்றுகைப் பகைவர் போரில் சாய, உள்ளிருப்போர் போரிட்டு பெருமித வீறாப்புடன் இருக்கும்படி சிறப்பாக அமைந்திருப்பது அரண். 

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். ⁠750

 • எத்தகைய அரண் பாதுகாப்பு அமைந்திருந்தாலும், செயலாற்றும் போர்வீரர்கள் இல்லையென்றால் அரண் இல்லை. 

Tirukkural / The Country / 731-740

The Country / kingdom

 1. A kingdom is that, which have high yielding in nature, worthy men in population and rich people never fading.
 2. It is a good kingdom, which have enormous wealth to like and yielding without failing.  
 3. It is a good kingdom, when it has the burden of foreigner, then the citizen gives more tax to the king wantonly.  
 4. It is a good kingdom, which has no hungry in poverty, no illness by sick and no enemy-attack.
 5. It is a good kingdom, where there is no unremovable diversity, internal enmity and pirating gangs.
 6. It is a good kingdom, which have not met disaster and enormous harvest when meets disaster.
 7. It is a good kingdom, which has mountain with fountains and lakes, enough rain-fall and natural fortress.
 8. These are ornaments to a kingdom: happy without illness, wealth materials, good yielding, bliss and protection to life.  
 9. It is deemed to be a good country, if it will give yielding without manual effort and it will not be a country if it will give yielding by great effort.  
 10. Even a country possesses all kinds of needful qualities, if it does not have a good Ruler, there is no use.


நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. ⁠731

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. ⁠732

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. ⁠733

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. ⁠734

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. ⁠735

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. ⁠736

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ⁠737

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. ⁠738

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. ⁠739

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. ⁠740

Sunday, 29 December 2019

திருக்குறள் / நாடு / The Country / 731-740

நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. ⁠731

 • தடையில்லா விளைச்சல் 
 • போற்றத் தக்க பண்பாளர் 
 • குறைவில்லாச் செல்வர் - சேர்ந்திருப்பது நாடு என்று போற்றத் தக்கது. 

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. ⁠732

 • பெரும்பொருளால் விரும்பத் தக்கது ஆகி 
 • கேடின்றி மிகுதியாக விளைவது நல்ல நாடு 

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. ⁠733

 • வெளிநாட்டவர் வந்து தங்கி, அவர்களைத் தாங்க வேண்டிய கடமை அரசனுக்கு வரும்போது, குடிமக்கள் வரியைச் சேர்த்துக் கொடுப்பது நல்ல நாடு. 

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. ⁠734

 • வறுத்தும் பட்டினிப் பசி 
 • நீங்காத பிணி 
 • பகைவர் தாக்குதல் - இல்லாமல் இயங்கிக் கொண்டிருப்பது நல்ல நாடு. 

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. ⁠735

 • (இக்கால அரசியல் கட்சிகள் போன்ற) பல குழுக்கள் 
 • நாட்டைப் பாழாக்கும் உட்பகை 
 • வேந்தனை அலைக்களிக்கும் சிற்றரசர்கள் - இல்லாமல் இருப்பது நல்ல நாடு. 

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. ⁠736

 • கேடு அறியாததாக 
 • கெட்டபோது வளம் குன்றாத - இயல்பினை உடையது தலையாய நாடு. 

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. ⁠737

 • சுனை போன்றவற்றில் தேங்கும் நிலைநீரும், ஆற்றில் வரும் ஊற்றுநீர் ஆகிய இருபுனல் வளம் கொண்ட மலை 
 • மழை பொழிந்து வரும் வெள்ளப் புனல் 
 • காடு போன்ற அரண் - ஆகியவை நாட்டுக்கு உறுப்புகள்.  

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. ⁠738

 • பிணி இல்லாமை 
 • செல்வ வளம் 
 • விளைச்சல் வளம் 
 • மக்கள் இன்பமாக வாழ்தல் 
 • பாதுகாப்பாக வாழ்தல் - ஆகியவை நாட்டுக்கு அணிகலன்கள். 

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. ⁠739

 • விரும்பாமல் நிறைந்திருக்கும் இயற்கை வளம் கொண்டது நாடு. 
 • வருந்தி உழைத்து வளம் பெறும் நாடு, போற்றத் தக்க நாடு அன்று. 

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. ⁠740

 • இப்படிப்பட்ட எல்லா நலன்களும் கொண்ட நாடாக இருப்பினும்
 • நல்ல வேந்தன் அமையாத நாட்டால் பயன் இல்லை. 


Tirukkural / Fearlessness to dare public meetings / 721-730

Fearlessness to dare public meetings

 1. The orator will be very careful in usage of synonyms.  
 2. One who conveys what he has learned, to be accepted by learned, is elated as the learned among learners.  
 3. To die in battle is easy; but to say something without fear in the public meeting, is rare.
 4. It is the duty to the learned, to say, to be accepted, by the audience of public meeting and earn the reputation among his schoolmates.  
 5. Learn to reply fearlessly to the public, in learning matters.  
 6. What is the use of having a sword in hand, if the holder is not bold? What is use of learning books and books, if he fears to say something in public meeting?
 7. A book that learned by a man who fears to dare the public meeting, is like a sword in the hands of a coward.  
 8. What is the use of having vast knowledge by learning a lot, if he does not say to other to understand?
 9. Illiterate is better than learned who fears to convey his thought, in the public meeting.
 10. One who fears to convey in the public meeting, is nothing but living.  

அவையஞ்சாமை


வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். ⁠721

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். ⁠722

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். ⁠723

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். ⁠724

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. ⁠725

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. ⁠726

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். ⁠727

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். ⁠728

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். ⁠729

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். ⁠730

அமைச்சியல் முற்றிற்று

திருக்குறள் / அவையஞ்சாமை / Fearlessness to dare public meetings / 721-730

அவையஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். ⁠721

 • சொல்லின் தொகை - சொல்வதின் தொக்கி நிற்கும் பயன். 
 • தூய்மையவர் - சொல்லிலும், நடத்தையிலும் மேற்கொள்ளும் தூய்மையாளர் 
 • சொல் பொருள் தரும் வைப்பாடுகளை அறிந்தவர், சொல்லில் சோர்வு படாமல், வலிமை மிக்க சொற்களைப் பயன்படுத்துவர். 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். ⁠722

 • தாம் கற்ற செய்திகளை, கற்றவர்கள் உள்ளத்தில் செல்லுமாறு, அவர்கள் முன்னிலையில், சொல்லுபவர் கற்றவர்களுள் நன்கு கற்றவர் என்று போற்றப்படுவார்.  

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். ⁠723

 • பகைப் போரில் சாவார் எளியர். 
 • அவைப் போருக்கு அஞ்சாதவர் அரியர். 

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். ⁠724

 • கற்றதை கற்றவர் முன் அவர் எற்குமாறு சொல்லி, தம்மோடு கற்ற பிற மாணவர்களிடையே மேன்மை பெறுக. 

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. ⁠725

 • கற்க வேண்டிய முறைப்படி, கற்கும் அளவைக் கருத்தில் கொண்டு, கற்க வேண்டும். எதற்காக? 
 • அவைக்கு அஞ்சாமல்  விடை தந்து வெல்வதற்காக. 

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. ⁠726

 • வீரம் இல்லாதவர்க்கு, அவர் கையில் வைத்திரும் வாளால் என்ன பயன்?
 • அறிவுக் கூர்மை உள்ளவர் அவைக்கு அஞ்சுபவரக்கு நூல்களால் என்ன பயன்? 

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். ⁠727

 • அவையைக் கண்டு அஞ்சுபவன் கற்ற நூல் 
 • பகைவரிடையே நிற்கும் பேடி கையில் இருக்கும் வாள் போன்றது. 

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். ⁠728

 • நல்லோர் அவையில் நன்கு செல்லுபடி ஆகுமாறு சொல்லாதவர், பலவற்றைக் கற்றிருந்தாலும் பயன் இல்லாதவரே ஆவார்.  

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். ⁠729

 • நன்கு கற்றிருந்தும், நல்லார் அவைக்கு அஞ்சிச் சொல்லாவர், கல்லாதவரை விடக் கடையர். 

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். ⁠730

 • அவைக்களத்தைக் கண்டு அஞ்சி, கற்றவற்றை அவை ஏற்குமாறு சொல்லாதவர், இருந்தாலும் இல்லாதவருக்குச் சமம். 

அமைச்சியல் முற்றிற்று

Tirukkural / Reading the audience court / 711-720

Reading the audience court

 1. The orator should speak understanding the audience.
 2. He should speak on his subject paying some interval in diversion of matter suitable to audience.  
 3. If one speaks without knowing the audience, his learned knowledge will become nothing.
 4. Speak before learned as learned; speak before innocent as an innocent.  
 5. Do not speak first in a conversation with elders.
 6. Slipping words before the audience who are appreciating his speech, is like slipping down, while bathing, in a river with flowing flood.
 7. The learned credit will emerge, only before the audience of clear understanding.
 8. If a speech has been followed by the audience, it will be useful, as pouring water in nursery field.
 9. One who has the capacity of speaking before learned, should not speak before the audience of mean-fellows.
 10. Orating before other people who are not equal to the orator in understanding, is like pouring Ambrosia in drainage.


அவையறிதல்


அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். ⁠711

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். ⁠712

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். ⁠713

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். ⁠714

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. ⁠715

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. ⁠716

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. ⁠717

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. ⁠718

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். ⁠719

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720

திருக்குறள் / அவையறிதல் / Reading the audience court / 711-720

அவையறிதல்


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். ⁠711

 • அவையில் கேட்போரின் தன்மையினை ஆராந்து உணர்ந்துகொண்டு தான் சொல்லவேண்டியதைச் சொல்ல வேண்டியது, சொல்லின் அறிந்த தூய்மையவர் கடமை. (சொல்லின் தொகை - சொல்லின் கருத்து) (தூய்மையவர் - நல்லவர்) 

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். ⁠712

 • இடையில் அவை விரும்பும் சிலவற்றைச் சொல்லிவிட்டுத் தன் கருத்தைச் சொல்வது சொல்லின் நடை. 
 • இந்த நன்மையைச் செய்பவர் இவ்வாறு சொல்ல வேண்டும். 

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். ⁠713

 • அவையைத் தெரிந்துகொள்ளாமல் சொல்பவர் சொல்லும் வகை  தெரியாதவர் ஆவார். 
 • அவர் தம் விருப்பம் போலச் சொன்னால், அவரது வல்லமை எடுபடாது. 

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். ⁠714

 • அறிவுக் கூர்மை உடையவரிடம் தன் அறிவுக் கூர்மையை வெளிப்படுத்த வேண்டும். 
 • பகுத்தறிவு இல்லாத வெகுளி மக்களிடம் தானும் வானத்து நிறம் போல் இருந்துகொண்டு சொல்ல வேண்டும். 
 • (சுதை - சுண்ணாம்பு, வானத்து நீல நிறம் பகல் ஒளியின் தாக்கத்தால் சுண்ணாம்பு போல் தோன்றும். - இவ்வாறு சொல்வன்மை உடையவன் தான் சொல்லும் முறைமையை மாற்றிக்கொள்ள வேண்டும்)

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. ⁠715

 • அறிவில் முதுமை பெற்றிருப்பவரிடம்  முதலில் தன் கருத்தைச் சொல்லத் தொடங்கக் கூடாது 
 • இது தன்று போற்றப்படுவனவற்றுள் மிக-நன்று. 

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. ⁠716

 • அகன்ற அறிவை ஏற்று உணர்ந்துகொள்பவர் முன்னர் தாழ்வு உண்டாதலானது, 
 • ஆற்று நீரில் குளிக்கும்போது, நிற்க முடியாமல் நிலை தளர்வது போன்றதாகும். 

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. ⁠717

 • சொல்வதைத் தெரிந்துகொள்ளும் வல்லமை படைத்தவர் முன் பேசினால், கற்றறிந்து பேசும் கல்விநலம் வெளிச்சமாகும். 

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. ⁠718

 • சொல்வதை உணர்ந்துகொள்ளக் கூடியவர் முன்னர் பேசினால், அது பயிர் வளரும் பாத்தியில் தண்ணீர் விடுவது போல் பயன்படும். 

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார். ⁠719

 • நல்லோர் அவையில் நன்கு ஏற்றுக்கொள்ளுமாறு சொல்ல வல்லவர், அற்பர் கூடிய அவையில் தன்னை மறந்த நிலையிலும் பேசக் கூடாது. 

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720

 • தன்னை ஒத்தவர் இல்லாத அவையில் பேசுதல், கழிவுநீர்ச் சா(ய்)க்கடையில் அமிழ்தத்தைக் கொட்டுவது போன்றது. 


Tirukkural /Understanding Intentions / 701-710

Understanding Intentions 

One’s face and eyes indicate his intentions  
 1. One who reads others indications without his words is an ornament to world.
 2. One who reads others mind, without suspecting him, is equal to Deity. 
 3. The king should buy the man of indication-reader at any cost.
 4. An indication-reader is an external part to a man (king).
 5. What is the use of one’s eyes, if they do not read other’s intentions through their eyes?
 6. As a mirror-stone one’s eyes indicate his intention.
 7. There are no other parts in human body than face, that indicates his intention.
 8. It is enough to show the face to read your intentions.
 9. Your eyes will indicate your intentions to the man of capable to reed it.
 10. Your eye-sight is a scale to measure your intentions. There are no other parts in your body useful for this purpose.

குறிப்பறிதல்


கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. ⁠701

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். ⁠702

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். ⁠703

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. ⁠704

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். ⁠705

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். ⁠706

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். ⁠707

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். ⁠708

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். ⁠709

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. ⁠710

திருக்குறள் / குறிப்பறிதல் / Understanding Intentions / 701-710

குறிப்பறிதல்

குறிப்பு = எண்ணம், கருத்து 
முகமும் கண்ணும் கருத்தினை உணர்த்தும் உறுப்புகள்
வாயால் கூறாமல் அவை ஒருவனின் கருத்தினை உணர்த்தும். 
இவை உள்ளத்துக் கண்ணாடி போன்றவை 

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. ⁠701

 • ஒருவன் வாயால் கூறாமல் இருக்கும்போது அவனது உறுப்பு அசைவுகளைப் பார்த்து அவனது உள்ளத்தில் இருப்பதை அறிந்துகொள்பவன் உலகுக்கு அணிகலன் 
 • மாறா நீர் வையம் - கடல் நீரின் உயரம் மாறாமல் இருக்கும். அதனை அளவுகோலாகக் கொண்ட உலகம். 

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். ⁠702

 • கருத்தினை உணர்த்துபவன் ஐயப்படாத வகையில் அவன் உள்ளக் கிடக்கையை உணர்ந்துகொள்ளும் திறம் படைத்தவனைத் தெய்வத்துக்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும். 

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். ⁠703

 • குறிப்பினால் கருத்தினை உணர்வாரை தனது வெளி உறுப்பாக அமைந்துள்ள செல்வம் முதலானவற்றுள் எதைக் கொடுத்தாவது (மன்னன்) வாங்கிக்கொள்ள வேண்டும் 

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. ⁠704

 • தன் எண்ணம் குறித்து வைத்திருப்பதை வாயால் கூறாமல் புரிந்துகொள்பவர் வெளியில் இருக்கும் தன் உறுப்பு பான்றவர் ஆவார். 

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். ⁠705

 • கருத்தினைக் குறிப்பால் உணர்ந்துகொள்ளாமல், வாயால் சொல்லும்போது தெரிந்துகொள்பவரின் கண்களால் என்ன பயன்? 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். ⁠706

 • பளிங்குக் கல் பக்கத்தில் இருப்பவரை உள்ளே காட்டும் 
 • அதுபோல் நெஞ்சில் இருப்பதை முகம் காட்டும் 

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். ⁠707

 • முதுக்குறைவு - பெண் பருவம் அடைதல் - இதனை அவள் உறுப்புகள் காட்டும். - அதுபோல 
 • ஒருவன் மகிழந்தாலும், சினந்தாலும் அவன் முகம் காட்டும். 

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். ⁠708

 • ஒருவனுக்கு நேர்ந்ததை, அவன் உள்ளத்தில் உள்ளதை, உணர்ந்துகொள்ளக் கூடிய திறம் படைத்தவர் முன் முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றால் போதும். அவர் அறிந்துகொண்டு செயல்படுவார் 

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். ⁠709

 • கண்ணின் பார்வை தன் முன் இருப்பவன் நண்பனா, பகைவனா என்பதைச் சொல்லிவிடும். 
 • கண்ணைப் படிக்கும் திறம் பெற்றவர் அதனைத் தெரிந்துகொள்வர். 

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. ⁠710

 • ஒருவரது கண்தான்  அவரை அளக்க உதவும் அளவுகோல். 
 • நுண்ணியர் தன் கண்ணால் தன் முன் உள்ளவர் கண்ணை(கருத்தை) அளந்துவிடுவர். Saturday, 28 December 2019

Tirukkural / Conduct in the presence of the king / 691-700

Conduct in the presence of the king  

 1. The contact with the king should be as heating the body before fire.
 2. Not liking, what the king likes, is benefit
 3. If one wants to save his position with the king, behave unsuspectable. If the king suspects anybody cannot avoid his anger.
 4. One should not say anything near the ear if the king. Don’t laugh when he laughs.
 5. Don’t follow the secrecy of the king. If he releases, then, hear.
 6. Do help the king, avoiding what he does not like, after, reading his mood, suitable time.
 7. Say to the king, what he likes and do not say plain words, even if he insists.
 8. Not to treat the king, having in mind, that he is young by age, relative by this way. Honour his dignity.  
 9. A man of vivid knowledge, will not do the king, with the hope, “the king has already accepted my views”.   
 10. It will end in fault to his friendship, doing something virtue-less to the king, with a hope, “I am an intimate friend to the king”


மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். ⁠691

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். ⁠692

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. ⁠693

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. ⁠694

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. ⁠695

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். ⁠696

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். ⁠697

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். ⁠698

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். ⁠699

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். ⁠700

திருக்குறள் / மன்னரைச் சேர்ந்தொழுதல் / Conduct in the presence of the king / 691-700

மன்னரைச் சேர்ந்தொழுதல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். ⁠691

 • நெருப்பு மூட்டி அதனை நெருங்கியும் நெருங்காமலும் இருந்துகொண்டு தன் குளிரைப் போக்கத் தீக்காய்வார் போல, மன்னனை நெருங்கியும் நெருங்காமலும் பழக வேண்டும். 

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். ⁠692

 • மன்னர் விரும்பும் பொருளை தான் விரும்பாமல் இருந்தால், மன்னன் தரும் நிலையான ஆக்கத்தைப் பெறலாம். 

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. ⁠693

 • மன்னன் தன்மீது ஐயம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுதல் அரிய செயல். மன்னனைச் சேர்ந்து ஒழுகுபவன் மன்னன் தன்மீது ஐயம் கொள்ளாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். மன்னன் ஒருவன்மீது ஐயம் கொண்டு சினம் கொள்வானே ஆனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுதல் எவராலும் முடியாது. 

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. ⁠694

 • அரசன் போன்ற ஆன்ற பெரியவரிடம் காதோரம் சென்று பேசுவதும் (கண்டறியாமல் காதால் கேட்ட சொற்களைக் கூறுவதும்), 
 • அவர் சிரிக்கும்போது தானும் சேர்ந்து சிரித்தலும் கூடாது 

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. ⁠695

 • அரசன் மறைத்து வைத்திருக்கும் பொருளையோ, செய்தியையோ ஆராயக் கூடாது. 
 • அரசன் செல்லுமிடமெல்லாம் தானும் பின்தொடர்ந்து செல்லக் கூடாது. 
 • அரசன் தன் மறைபொருளை வெளிப்படுத்தும்போது மறைவாகக் கேட்டு பிறரிடம் சொல்லாமல் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். ⁠696

 • அரசன் குறிப்பினை அறிந்து
 • தக்க காலம் பார்த்து 
 • அரசனுக்கு வெறுப்பு இல்லாதனவற்றை 
 • விரும்புவனவற்றை 
 • விரும்பும்படி - எதனையும் சொல்ல வேண்டும் 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். ⁠697

 • அரசன் விரும்புவனவற்றைச் சொல்லி, அவன் பொருட்படுத்தாதபோது, அவன் அவன் எப்போது கேட்டாலும் அதையே திரும்பவும் சொல்லக் கூடாது. 

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். ⁠698

 • அரசர் தமக்கு இளையவர் 
 • இன்ன உறவு முறையினர் - என்று சொல்லி அரசனை இகழாமல், அவர் பெற்றிருக்கும் புகழினைப் பாதுகாத்து நடந்துகொள்ள வேண்டும். 

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். ⁠699

 • அரசர் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று எண்ணி, அவர் ஏற்றுக்கொள்ளாத செயல்களை, ஆடாது ஒளிரும் மெயப்பொருள் கண்டவர், அரசனுக்குச் செய்யக் கூடாது. 

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். ⁠700

 • மன்னனுக்குத் தான் பழைய நண்பன் என்னும் உரிமை கொண்டு, பண்பற்ற செயல்களைச் செய்தால் கேடு விளையும். 


அறம் (வழி) common route

அறம் என்றால் என்ன?
எது அறம்

எல்லாரும் இணக்கமாக நடந்து செல்லும் வாழ்க்கை வழி அறம்
எதிர்த்துச் செல்வது மறம்

பொது வழியில் எல்லாரும் செல்லலாம்
தனி வழியில் எல்லாரும் செல்ல முடியாது
பொது வழியே அறம்
தனிவழி திருட்டுவழி

உலகம் பொது
உலகம் ஏற்றுக்கொள்வது அறம்
ஏற்றுக் கொள்ளாதது மறம். திருட்டு, போர் முதலானவை மறம். 

அறத்தை ஆறு என்று தமிழர் குறிப்பிடுகின்றனர்.
பண்டைக் காலத்தில் ஆறுதான் வழியாகப் பயன்பட்டது.

பின்னர் மரங்களை வெட்டி, தடைகளைப் போக்கி வழி அமைத்துக் கொண்டோம்.

வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இருக்க நாம் அமைத்துக்கொண்ட வழிதான் \ ஆறுதான் அறம்.

தெருவைப் போல் அமைத்துக்கொண்ட பொதுவழி அறம்.Tirukkural / The Envoy / 681-690

The Envoy

 1. Having kindness, born in a noble family, having behaviour that his king likes are the qualities of an ambassador.
 2. An ambassador should have these three qualities: kindness, knowledge and power of eloquence.  
 3. The royal messenger, who is to reap victory in battle to his king, will be a learned among learners.  
 4. One who has these three qualities must go to covey the royal message: having knowledge, magnanimity in appearance and profound knowledge by education.
 5. The man conveying royal message will speak briefly, avoiding meaning-less words and humorous.
 6. An ambassador will be a learned man, convey fearlessly, to be accepted by the audience and minding the time of situation and subject.
 7. The royal messenger, while conveying his message, will mind his duty, the time and place of context.
 8. He should convey the truth, the strength of companionship boldly.
 9. His tongue should not slip from the royal message.
 10. He should not mind his life while conveying royal message.

தூது


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. ⁠681

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. ⁠682

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. ⁠683

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. ⁠684

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. ⁠685

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. ⁠686

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ⁠687

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. ⁠688

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன். ⁠689

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. ⁠690

திருக்குறள் / தூது / The Envoy / 681-690

தூது


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. ⁠681

 • அன்புடையவனாக இருத்தல் 
 • ஆன்றோர் குடியில் பிறந்திருத்தல் 
 • வேந்தன் விரும்பும் பண்புகளைக் கொண்டிருத்தல் - ஆகியவை தூது செல்பவனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் ஆகும். 

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. ⁠682

 1. அன்பு 
 2. அறிவு
 3. சூழலுக்குப் பேசும் சொல்வன்மை - ஆகிய மூன்றும் சூதனிடம் கட்டாயமாக இருக்க வேண்டும். 

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. ⁠683

 • நூல்களைக் கற்று வல்லாரிடையே சென்று தூது சொல்பவன், தானும் நூல்களைக் கற்று வல்லவனாக இருக்க வேண்டும். 
 • வேல் வீரர்களிடையே போரிட்டு வெற்றி தேடுவதைச் சொல்வதே தூது சொல்பவன் பண்பு. 

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. ⁠684

 1. நல்லறிவு 
 2. நல்ல தோற்றம் 
 3. நன்கு ஆராய்ந்து கற்ற  கல்வித் திறன் - மூன்றும் உடையவனே தூது சொல்லச் செல்ல வேண்டும்.  

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. ⁠685

 • தொகுத்துச் சொல்லி 
 • வலிமை இல்லாதனவற்றை விலக்கி 
 • கேட்போர் மகிழ்ந்து சிரிக்கும்படிப் பேசி
 • நல்லது விளையும்படிச் சொல்வதே தூது. 

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. ⁠686

 • தன் முன் இருப்பவரை நன்றாகப் படித்தறிந்து கொண்டு 
 • அவர்களின் கண் பார்வைக்கு அஞ்சாமல் 
 • தான் சொல்வதை எதிரில் உள்ளவர் ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி 
 • காலத்துக்குத் தக்கது எது என அறிந்துகொண்டு - தூதுக் கருத்தினை வெளிப்படுத வேண்டும். 

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. ⁠687

 • தன் கடமையை உணர்ந்து 
 • காலம் கருதி 
 • இடம் அறிந்து 
 • எண்ணிப் பார்த்து - தூது சொல்வதே தலையாய பண்பு. 

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. ⁠688

 1. தன் அரசன் கொண்டுள்ள தூய்மை 
 2. துணை வலிமை 
 3. துணிவுடைமை - ஆகிய மூன்றனையும் உண்மையாக எடுத்துரைத்தல் தூதுவன் பண்பு. 

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன். ⁠689

 • தன் வேந்தன் சொல்லும்படி விடுத்த செய்தியைக் கேட்கும் வேந்தனுக்குத் தூது சொல்பவன் 
 • சொல்லில் குற்றம் நேராமல் 
 • தன் வாய்ச்சொல்லில் சோர்வு நேராமல் 
 • உறுதியுடன் - கூற வேண்டும். 

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. ⁠690

 • தன் உயிருக்கு முடிவு விளைவதாயினும், எதையும் விட்டுவிடாமல், தன் அரசனுக்கு உறுதி விளைவிப்பதாகச் சொல்வதுதான் தூது.   Tirukkural / Procedure of Action / 671-680

Procedure of Action

 1. One should not hesitate to do his duty. If you hesitate, it is fault.  Consider the result. Enforce your power in mind.  
 2. Take your time in works, which need. Do it quickly, that one needs.  
 3. Do the work, where it is possible. If not possible in a place, find somewhere else to achieve it.
 4. Remember. The remaining portion of un-fulfilled action in a deed and that of in war against enemy, will burn your heart as a fire not extinguished
 5. When you are if action, think, without doubt in these five corners: the mater or material, the instrument, suitable time, the action and suitable place.  
 6. When you are doing a thing, consider, who is going, how he is doing and how much he has knowledge in it.  
 7. The matter in action, the doer, the method adopted – all these corners should be in mind, when in action.  
 8. Let an action to be done by another action; as catching a wild elephant by a termed elephant.
 9. It is better, doing it fast, welcoming an enemy in his weakness, than doing, benefits to friends.
 10. When a small king, in fear, wants to join under the kingdom of an emperor, the emperor should accept.


வினைசெயல்வகை


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ⁠671

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. ⁠672

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். ⁠673

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். ⁠674

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். ⁠675

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். ⁠676

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். ⁠677

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. ⁠678

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். ⁠679

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. ⁠680

திருக்குறள் / வினைசெயல்வகை / Procedure of Action / 671-680

வினைசெயல்வகை


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ⁠671

 • செயலை ஆராய்தல் 
 • செய்ய முடிவெடுத்தல் 
 • செய்யத் துணிவு கொள்ளல் - என்று செயலாற்றும்போது 
 • காலம் தாழ்த்தித் தங்கியிருத்தல் தீது 

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. ⁠672

 • காலம் நீட்டித்துச் செய்ய வேண்டுவனவற்றை நீட்டித்துச் செய்க. 
 • நீட்டிக்காமல் செய்ய வேண்டியனவற்றை உடனே செய்க 
 • தூங்கல் - தொங்குதல் - தொய்வு 

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். ⁠673

 • செயல் செல்லுபடி ஆகும் இடத்தில் செயலாற்றுக. 
 • முடியாவிட்டால் செல்லுபடி ஆகும் இடம் நோக்கிச் சென்று செயலாற்றுக. 

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். ⁠674

 • செயலை அரைகுறையாக விடுதல் 
 • பகையை அழிக்கும்போது அரைகுறையாக விடுதல்
 • ஆகியவை அவிக்காமல் விட்ட தீ போலச் சுடும்  

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். ⁠675

 1. செய்யும் பொருள்
 2. செய்ய உதவும் கருவி 
 3. செய்யும் காலம் 
 4. செய்யும் செயல் 
 5. செய்யும் இடம்
 • ஆகிய ஐந்தையும் குறைவற எண்ணிச் செயலாற்ற வேண்டும். 

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். ⁠676

 • செயலின் முடிவு 
 • செயலுக்கு வரும் இடையூறு 
 • செயல் முடிந்த பின்னர் விளையும் பயன் - ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும் 

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். ⁠677

 • செய்யும் செயல் 
 • செய்பவன் 
 • செய்யும் முறைமை - ஆகிய செயல் நுட்பங்களை உள்ளத்தில் கொண்டு, செய்பவன் செயலாற்ற வேண்டும். (உள் அறிதல் - நுட்பம் அறிதல்)

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. ⁠678

 • ஒரு செயலை மற்றொரு செயலின் துணை கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். 
 • இது பழக்கிய பெண் யானையை வைத்துக்கொண்டு, பழகாத ஆண் யானையைப் பிடிப்பது போன்றது.  

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். ⁠679

 • நட்பு கொண்டவர்க்கு நல்லது செய்வதை விட, விரைந்து 
 • ஒட்டாத பகைவரை ஒட்ட வைத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும். 


உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. ⁠680

 • (போர்ச் செயல் செய்யும்போது) மிகவும் சிறியவர் நடுங்குவாரே என்று அஞ்சி, பகைவர் குறை வேண்டி வந்தால் (சமாதானம் செய்துகொள்ள வந்தால்) பெரியார் பணிவுடன் ஏற்றுக் கொள்வர்.  

Friday, 27 December 2019

Tirukkural / Power of action / 661-670

Power of action

 1. Strong mind is firm-action. Others are not. 
 2. Two ventures: (1) ‘leaving the difficulties aside’ and (2) ‘not in cafard’: are the power of action.
 3. Doing a work to achieve the end is the power of action.
 4. To say is possible anybody; to obey as he said, is difficult.
 5. If a man died after achieving (say war) the also remembers his venture.
 6. The venture as it is planned, is achieved, if the planner has strong-mind.   
 7. Not degrade a man on seeing his figure. Remember the axis in a cart. He may be active as axis to roll others on.
 8. Not to fear; not to slack; achieve the goal.  
 9. A work that result in pleasure, should be done daring difficulties.
 10. The world will never like a man, in spite of all of his strength, if he is poor in achieving any one of his duties.


வினைத்திட்பம்

 1. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் \ மற்றைய எல்லாம் பிற. ⁠661
 2. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் \ ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ⁠662
 3. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் \ எற்றா விழுமந் தரும். ⁠663
 4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் \ சொல்லிய வண்ணம் செயல். ⁠664
 5. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் \ ஊறெய்தி உள்ளப் படும். ⁠665
 6. எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் \ திண்ணியர் ஆகப் பெறின். ⁠666
 7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு \ அச்சாணி அன்னார் உடைத்து. ⁠667
 8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது \ தூக்கங் கடிந்து செயல். ⁠668
 9. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி \ இன்பம் பயக்கும் வினை. ⁠669
 10. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் \ வேண்டாரை வேண்டாது உலகு. ⁠670


திருக்குறள் / வினைத்திட்பம் / Power of action / 661-670

வினைத்திட்பம் 

செயல் திறன்
செயலில் தீவிரம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. ⁠661

 • மன உறுதியே வினைத்திட்பம். 
 • பிற பின்னவை 

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் 
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ⁠662

 • துன்பத்தைப் பொருட்படுத்தாமை
 • வரும்போது மனம் தளராமை
 • இவை இரண்டும் வினைத் திட்பத்திற்கு வழி என்று ஆய்ந்தவர் கொள்கை வகுத்துள்ளனர். 

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் 
எற்றா விழுமந் தரும். ⁠663

 • வினை ஆளுமை என்பது செயல் முற்றுப் பெறுமாறு செய்வது. 
 • இடையில் விடுபட்டுத் தொங்குமாயின், "ஏன் செய்தோம்" என்று வருந்தும்படித் துன்பம் உண்டாகும்.  

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல். ⁠664

 • வாயால் சொல்லுதல் எல்லார்க்கும் எளிது 
 • சொல்லியபடி செய்தல் கடினம் 

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் 
ஊறெய்தி உள்ளப் படும். ⁠665

 • பெருமையை வாங்கிக்கொண்டு மாண்டுபோனவர் வினைத்திட்பம்
 • வேந்தனாலும் மனம் கலங்கி நினைக்கப் படும் 

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின். ⁠666

 • செயலாற்ற எண்ணியவர் மனத் திட்பம் உடையவராக இருந்தால் நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பர். 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
அச்சாணி அன்னார் உடைத்து. ⁠667

 • உருவத்தைப் பார்த்து ஏளனப் படுத்தக் கூடாது. (நினைவில் அகத்தியர்) 
 • தேர் பெரியது 
 • அது உருள உதவும் அச்சாணி சிறியதுதானே 

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது 
தூக்கங் கடிந்து செயல். ⁠668

 • கலங்காமல் கண்டறிந்து தொடங்கிய செயல் 
 • அதனைச் செய்யச் சோரக்கூடாது (துளக்கம் கடிந்து \ போக்கி)
 • தளர்வடைந்து தொங்கக் கூடாது (தூக்கம் கடிந்து \ போக்கி)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி 
இன்பம் பயக்கும் வினை. ⁠669

 • துன்பம் வந்தாலும், இன்பம் விளையக்கூடிய  செயலைத் துணிவுடன் செய்ய வேண்டும்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. ⁠670

 • எந்த உறுதி இருந்தாலும் செயல்படுவதில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பாது. 


Tirukkural / Purity in action / 651-660

Purity in action

 1. Companions provide wealth. Purity in action will give more qualities.
 2. One should forsake the deeds that do not give him fame and worth-full.  
 3. One, who to grow famous, should forsake the deeds the diminishing his fame.
 4. One having unshakable wisdom, never does anything, that humiliated by others, even in their difficulties under poverty.    
 5. One should not do leaving others to say “Shame, what he has done”. If he does unexpectedly, not to repeat.  
 6. One should not do the deeds, condemned by moral leaders, even to remove the hunger of his mother.  
 7. The noble man likes excess of poverty than getting wealth with blame.
 8. The deed completed with blame will give disaster, in reaping.  
 9. What is earned with the cry of other’s ailment, that will disappear in the same way of self-cry.
 10. Wealth earned by cheating, will spoil, as the water, saved in mud-pot-in-raw.

வினைத்தூய்மை


துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். ⁠651

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. ⁠652

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். ⁠653

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். ⁠654

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. ⁠655

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. ⁠656

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. ⁠657

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். ⁠658

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ⁠659

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. ⁠660

திருக்குறள் / வினைத்தூய்மை / Purity in action / 651-660

வினைத்தூய்மை


துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். ⁠651

 • துணைநலம் ஆக்கத்தைத்-தான் தரும். 
 • வினை நலமோ வேண்டியவை எல்லாவற்றையும் தரும்.  

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. ⁠652

 • புகழோடு நன்மையும் தராத செயல்களை என்றும் கைவிடுதல் வேண்டும். 

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். ⁠653

 • ஆக்கம் பெற விரும்புபவர் புகழ் தராத செயல்களைக் கைவிட வேண்டும். 
 • ஓதல் < ஒருவுதல் 
 • ஓஒதல், ஆஅதும் - இசைநிறை அளவெடை

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். ⁠654

 • தெளிவாகப் பார்ப்பவர், துன்பப் பட்டாலும் பிறர் ஏளனம் செய்யும் செயல்களைச் செய்ய மாட்டார்கள். 

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. ⁠655

 • "என்ன செய்கிறான்" என்று மற்றவர் இரக்கம் கொள்ளத் தக்க செயல்களைச் செய்யக் கூடாது. 
 • ஏதோ தவறுதலாகச் செய்துவிட்டால், அது போன்ற செயலை மீண்டும் செய்யக் கூடாது. 

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. ⁠656

 • தன்னைப் பெற்ற தாயின் பசியைப் போக்கவும், சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யக் கூடாது. 

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. ⁠657

 • பழியோடு வந்த செல்வத்தைக் காட்டிலும், சான்றோர், மிகப் பெரிய கொடிய வறுமையையே மேலாக மதிப்பர். 

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். ⁠658

 • செய்யக் கூடாது என்று மேலோர் விலக்கிய செயலை ஒருவர் செய்து அது நிறைவுற்றாலும், பின்னர் அது பழிக்கும் துன்பத்தையே தரும். 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ⁠659

 • பிறர் அழும்படி ஒருவன் சேர்த்த செல்வம், அவனை அழும்படிச் செய்துவிட்டுச் சென்றவிடும். 
 • பிறர் மகிழும்படி சேர்த்த செல்வத்தை, ஒருவன் இழக்க நேர்ந்தாலும், நல்லனவற்றையே தரும். 

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. ⁠660

 • வஞ்சகத்தால் பொருளைச் சேர்த்து வைத்துக்கொண்டு இறுமாப்புடன் இருத்தல், வேகாத மண் பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் கசிந்து ஒழுகிப் போவது போல் போய்விடும். 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி