Wednesday, 24 July 2019

ஆலவாய்-Tirunavukkarasar 5.1.410


 • ஞானசம்பந்தர் தொண்டை நாடு சென்று பாடுதற்கு வேண்டிய செய்திகளை நாவுக்கரசு தெரிவித்தார். \ 1671 \ 5.1.401
 • பின்னர் திருப்பூந்துருத்தியிலிருந்து புறப்பட்டுத் தென்திசையில் சென்றார். திருப்புத்தூர் சென்று பாடிய பின்னர் மதுரை வந்தார். \ 1672 \ 5.1.402
 • மதுரையில் நூல் சங்கத்தில் தங்கித் தமிழ் நூலகளை ஆராயந்த பின்னர் கோழிலுக்குச் சென்றார். \ 1673 \ 5.1.403
 • மொய் திகழும் சடையானை முளைத்தானை – என்று அடி எடுத்துப் பாடினார். \ 1674 \ 5.1.404
 • பாண்டிமா தேவி, கூன் நிமிர்ந்த தென்னவன், குலச்சிறையார் ஆகியோரைக் கண்டார். அவர்கள் இவரைப் போற்றினர். \ 1675 \ 5.1.405
 • ஆலவாய் அமர்ந்தான் மேல் நேரிசை, தாண்டகம் பாடினார். \ 1676 \ 5.1.406
 • திருப்பூவனம் சென்று தாண்டகம் பாடினார். \ 1677 \ 5.1.407
 • இராவணனைக் கொன்ற பாவத்தை இராமனுக்குப் போக்கிய இராமேசுவரம் தொழுதார். \ 1678 \ 5.1.408
 • திருநேரிசை பாடினார். \ 1679 \ 5.1.409
 • நெல்வேலி, கானப்பேர் – தொழுதார். \ 1680    \ 5.1.410

பாடல்

1671 
பிரமபுரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்     5.1.401

1672 
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்   5.1.402

1673 
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்   5.1.403

1674 
எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்     5.1.404

1675 
சீர் திகழும் பாண்டிமாதேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று
ர்கிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்     5.1.405

1676 
திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்     5.1.406

1677 
கொடி மாடம் நிலவு திருப்பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்   5.1.407

1678 
தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர்     5.1.408

1679 
தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார்     5.1.409

1680 
அங்கு றைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல்வேலி
செங்கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்   5.1.410
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி