Tuesday, 23 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1630


கயிலை நோக்கி
 • நாவுக்கரசர் காட்டு வழியில் கயிலை நோக்கி நடந்தார். விலங்குகள் அவருக்குத் தீங்கு செய்ய அஞ்சின. இரவில் நாகங்கள் மணிவிளக்கால் வெளிச்சம் தந்தன. \ 1621 \ 5.1.355
 • பகலில் கனல் போல் வெயில். \ 1622 \ 5.1.356
 • கால் பரடுகள் தேய்ந்தன. கைகளால் தாவினார். \ 1623 \ 5.1.357
 • கைகளும் தேய, மார்பினால் உந்திச் சென்றார். \ 1624 \ 5.1.358
 • மார்பு எலும்பு முரிய, உருண்டு சென்றார். \ 1625 \ 5.1.359
 • அதுவும் முடியாமல் அப்படியே கிடந்தார். \ 1626 \ 5.1.360
 • சிவன் முனிவர் உருவில் அவர்முன் தோன்றினார். \ 1627 \ 5.1.361
 • உடல் அழிந்து இந்தக் கொடிய காட்டில் என்ன நினைவில் செல்கிறீர் – என வினவினார். \ 1628 \ 5.1.362
 • நாவுக்கரசர் தம் உணர்வால் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். \ 1629 \ 5.1.363
 • வட கயிலையில் மலைமகளுடன் அண்டர் நாயகன் இருக்கும் காட்சியைக் கண்டு இன்புறுவது என் குறிப்பு – என்றார். \ 1630 \ 5.1.364

பாடல்

1621 
ஆய ர் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
தீய ய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால்
வாய நாக மணிப் பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார்  5.1.355

1622 
வெங்கதிர்ப் பகல் அக் கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கு அழற்று எறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத் திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார்  5.1.356

1623 
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் 5.1.357

1624 
கைகளும் மணி பந்து அசைந்து றவே கரைந்து சிதைந்த பின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசைப் பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்     5.1.358

1625 
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்  5.1.359

1626 
அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்     5.1.360

1627 
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால்   5.1.361

1628 
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார்   5.1.362

1629 
மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த் தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர்    5.1.363

1630 
வண்டு லாம் குழல் மலை மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற     5.1.364
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி