Saturday, 20 July 2019

நமிநந்தி - முருகனார் மடம் -Tirunavukkarasar 5.1.234


 • தெருப் பெருக்கும் பணிகளைச் செய்துகொண்டு சிவனைப் பரவியவண்ணம் சென்றார். \ 1491 \ 5.1.225
 • பாடு இளம் பூதத்தினான் - ன்னும் பதிகம் முதலான பலவற்றைப் பாடினார். \ 1492 \     5.1.226
 • நமிநந்தி அடிகள் பெருமையைத் திருவிருத்தத்தில் வைத்துப் பாடினார். \ 1493 \   5.1.227
 • வலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர், - கண்டு பாடி மீண்டும் திருவாரூர் வந்தார். \ 1494 \     5.1.228
 • திருவாதிரை நாளில் வீதிவிடங்கப் பெருமான் பவனி வருவதை அடியாருடன் கண்டு மகிழ்ந்தார். \ 1495 \ 5.1.229
 • திருவாரூரை உள்ளத்த்தில் வைத்துக்கொண்டே பிற ஊர்களில் உள்ள சிவன் கோயில்கள் பலவற்றையும் வழிபட்டு மீண்டார். \ 1496 \ 5.1.230
 • அந்த நாளில் ஞானசம்பந்தர் பூம்புகலூர் வந்து வழிபாடு செய்துவிட்டு முருகனார் மடத்தில் தங்கியிருந்தார். \ 1497 \ 5.1.231
 • நாவுக்கரசு பூம்புகலூர்  வருகிறார் எனக் கேட்டு எதிர்கொள்ள, தொண்டருடன் ஞானசம்பந்தர் செஎன்றார். \ 1498 \ 5.1.232
 • இருவரும் இரண்டு நிலாக்கள் ஒன்றாகிக் கலந்தது போல் தழுவினர். \ 1499 \ 5.1.233
 • “அப்பரே! திருவாரூரில் நிகழ்ந்த பெருமைகளை வகுத்து உரைப்பீர்” என்று சம்பந்தர் வேண்ட, அப்பர் பாடினார். \ 1500 \ 5.1.234

பாடல்

1491 
மார்பு ஆரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வு ஆகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்     5.1.225

1492 
நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்     5.1.226

1493 
நான் மறை நூல் பெருமை நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில்   5.1.227

1494 
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலிவலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ்வேளுர் கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே 5.1.228

1495 
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை லாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே     5.1.229

1496 
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பு ரையன் மடப் பாவை இடப்பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்     5.1.230

1497 
அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம்புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காலை  5.1.231

1498 
ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார்     5.1.232

1499 
கரண்டம் மலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே  5.1.233

1500 
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார்  5.1.234
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி