Thursday, 28 February 2019

முத்தொள்ளாயிரம் Muttollayiram 69


Translated by Dr. Pandiyan, I.A.S. 


69
யானை மறம்

மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று.

(சோழனின் யானையின் வீரத்தை இயம்பல்)

(முத்தொள்ளாயிரமென்று கருதத்தக்கது - பேரா. ந.சே)

Translated verse

Our Emperor Killi bears the world on his shoulders
            His rutting tusker in terrible wrath
Pared the white parasols of the opposing kings
            The cool Moon hovers in the sky
And thins day by day on the clear sky
            Staying put there
Afraid of Killi's steed
            Whether it would pounce upon it!.மண்படுதோட் கிள்ளி முத்தொள்ளாயிரம்+ Muttollayiram 120

கிள்ளி மண்ணுலகைத் தன் தோளில் சுமப்பதால் அவன் தோள் "மண்படு தோள்" ஆயிற்று.  இந்தக் கிள்ளி ஏறிச்செல்லும் மத யானை பகையரசர்களின் வெண்கொற்றக் குடையை வீழ்த்திக் தன் காலால் தேய்த்தது. இப்படித் தேய்த்த பழக்கத்தால், விண்ணில் குடை போலத் தோன்றும் தன்னையும் வீழ்த்தித் தேய்க்கப் பாயுமோ எனப் பயந்து மதியம் தன் தோற்றத்தை மாற்றிக் காட்டுவதற்காகத் தேய்கிறது போலும்.

தற்குறிப்பேற்ற அணி

பாடல்

மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று.
  
மூவேந்தர் பிரிப்புப் பாடல் பகுப்புக்கு முந்தைய பதிப்பில் உள்ள பாடல்
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

முத்தொள்ளாயிரம் Muttollayiram 68


Translated by Dr. Pandiyan, I.A.S. 


68
குதிரை மறம்

சாலியரி சூட்டால் மடையடைக்கு நீர்நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா
மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு.

(சோழனின் குதிரையின் மறச் செயலைக் கூறல்)

Translated verse

In our Emperor's empire of perennial river
            The ploughmen plug the sluices
With the harvested shafts of paddy crop
            He is Valavan the Great whose broad shouldered hands
Shower like singing clouds
            His steed fast like wind knocks out the kings crowns
And shatters their golden ornaments on their chest
            Their hooves are like touch stone of gold.சாலியரி சூட்டால் முத்தொள்ளாயிரம்+ Muttollayiram 119

காவிரியாற்று நீர் மிகுதியாக வருவதால் மண்ணால் மடை கட்டி அதனைத் திருப்ப முடியவில்லை. எனவே நெல்லந் தாளையும் மண்ணையும் வைத்து மடையை அடைக்கும் அளவுக்கு நீர்வளம் மிக்க நாட்டை உடையவன் சோழன். இவன் தன் வலிமை மிக்க கையால் மழை போல் கொடை வழங்குபவன். அதனால் இவனை மாவளவன் என்பர். இவன் குதிரையில் செல்லும்போது இவனது குதிரையின் காலிலுள்ள குளம்புகள் பகைமன்னர் மார்பில் அணிந்திருக்கும் பொன் அணிகலன்களையும், தலையில் அணிந்திருக்கும் பொன் முடிகளையும் காலால் இடறுவதால் பொன்னை மாற்றுப் பார்க்க உரைக்கும் கட்டளைக்கல் போலக் காணப்பட்டன.

பாடல்

சாலியரி சூட்டால் மடையடைக்கு நீர்நாடன்
மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா
மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப்
பொன்னுரைகற் போன்ற குளம்பு.

பொன்னுரை கல்
மூவேந்தர் பிரிப்புப் பாடல் பகுப்புக்கு முந்தைய பதிப்பில் உள்ளவை
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

முத்தொள்ளாயிரம் Muttollayiram 67


Translated by Dr. Pandiyan, I.A.S. 
67

செல்வி இலனே

நின்றீமின் மன்னீர் நெருநற் றிறைகொண்ர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க - இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செல்வி இலனே
பெருந்தண் ணுறந்தையர் கோ.

(சோழனுக்குத் திறை கொடுக்க வந்து மொய்த்து நெருங்கிய மன்னரை 
"இன்று செவ்வி இல்லை பொறுமின்" எனக் மெய்காப்பாளன் கூறியது)

Translated verse

Wait and Offer Your Tribute

Colophon:

(The body guard of Colan requests the kings who had thronged to offer tributes to wait for a day to offer their tributes)

"Wait, please Oh wait and offer your tributes Oh Kings"
            Yesterday a host of kings prostrated
And offered their tributes
            Alas! their crowns chaffed
The Emperor's manicured feet
            Because of the wound in his feet
Our Emperor of this cool Urantai
            Grants no interview to-day.

Foot Note:

On a fixed day for paying tributes, kings jostle with each other. In a melee one wants to offer earlier than others.  They prostrate before the Emperor with their crowns.

முத்தொள்ளாயிரம் Muttollayiram 66


Translated by Dr. Pandiyan, I.A.S. 


66
விற்பயிர் வானகம்

மாலை விலைபகர்வார் கிள்ளிக் கனைந்தபூச்
சால மருவியதோர் தன்மைத்தால் - காலையே
விற்பயிர் வானகம் போலுமே வெல்வளவன்
பொற்பார் உறந்தை யகம்.
(உறையூர் வளம் உரைத்தல்)

Translated verse

Crop of Rainbow

The sellers of garlands in the evening
            Nip off the unwanted portion
Of flowers while knitting them
            The discarded varietal flowers heap on the road
And form a massive garland of a sort.
            In the morning the street looks like
A field which yields rainbow inside the City
            Of Urantai of ever winning Valavan.

Foot Note:

Urantai - The capital of Cola's.  The present Tiruchirapalli.முத்தொள்ளாயிரம் Muttollayiram 65


Translated by Dr. Pandiyan, I.A.S. 


65
 (கோக்கிள்ளியின் நாட்டு வளம் கூறுதல்)

காவல் உழவர் களத்தகத்துப் போரேறி
நாவலோஒ என்றழைக்கும் நாளோதை - காவலன்றன்
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்லி நாடு.

Translated verse

The ploughman guarding in the thrashing floor
            Climb upon the rick of sheaves
And exultantly shout, "Navalo"
            Their joyous cry during day
Is like the similar war cry
            By the warriors riding on the murderous Elephant
Challenging the God of Death
            This land of King Killi with hosts of stately Elephants.

Foot Note:

(1)  Navalo - A joyful cry, calling men for  work by the ploughman at thrashing floor at dawn.
The warriors on Elephant backs too cry out similarly when they go out for war.

முத்தொள்ளாயிரம் Muttollayiram 64


Translated by Dr. Pandiyan, I.A.S. 
64

வினை வகையால் வேறு

புனல்நாடர் கோமானும் பூந்துழாய் மாலும்
வினைவகையால் வேறு படுவர் - புனல்நாடன்
ஏற்றெறிந்து மாற்றலர்பால் எய்தியபார் மாயவன்
ஏற்றிரந்து கொண்டமையி னால்.

(பேரா. ந.சே.  இதை முத்தொள்ளாயிரப் பாடலாகக் கருதுகிறார்.)

Translated verse

The Lady Love to her Confidante

The King of water abundant land
            And Mal the wearer of basil garland
Differ in their modes of war
            In annexing the enemy kingdom
The King of Kaviri got the spear on his chest
            And shot it back to kill the enemy
And annexed the opposing King's land
            But Mayavan begged and got it.

Foot Note:

The girl in love with Cola King, compares him to Lord Naryana.  In giving protection to all they are similar.

But they are dissimilar in annexing their lands from the enemies.  Colan fought and won. Lord Krishna begged and got from Mavali Emperor.

புனல்நாடர் முத்தொள்ளாயிரம்+ Muttollayiram 118

காவரிப் புனல் பாயும் நாட்டு மக்களின் கோமான் சோழன்.
திருமால் துழாய் மாலை அணிந்தவன்.
இருவரும் உருவத்தில் ஒருவர் போல உள்ளனர். 
ஆனால் செயலால் வேறுபடுகின்றனர்.
சோழன் பகைவரின் ஆனிரைகளைக் கவர்ந்து தன் நாட்டை ஆள்கிறான்.
திருமாலாகிய மாயவன் மாபலி மன்னனிடம் இரந்து தானம் வாங்கி நாட்டை ஆள்கிறான்.

பாடல்

புனல்நாடர் கோமானும் பூந்துழாய் மாலும்
வினைவகையால் வேறு படுவர் - புனல்நாடன்
ஏற்றெறிந்து மாற்றலர்பால் எய்தியபார் மாயவன்
ஏற்றிரந்து கொண்டமையி னால்.

மூவேந்தர் பிரிப்புப் பாடல் பகுப்புக்கு முந்தைய பதிப்பில் உள்ளவை
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

முத்தொள்ளாயிரம் Muttollayiram 63


Translated by Dr. Pandiyan, I.A.S. 


63
எமக்குக் காட்டாய்

குருந்தம் ஒசித்தஞான் றுண்டால் அதனைக்
கரந்த வடிமெக்குக் காட்டாய் - மரம் பெறா
போரிற் குருகுஉறங்கும் பூம்புனல் நீர்நாட!
மார்பிற் கிடந்த மறு.

(பூவைநிலை: 
அதாவது மாநிலம் காக்கும் மன்னனைக் 
காத்ததற் கடவுளாகிய திருமாலாக் கூறல்)

(63) தொல்புறத்திணை இயல் ரு.  
நச்சினார்க்கிணியர் மேற்கோள். 
இது முத்தொள்ளாயிரப் பாடலாக இருக்கும் என பேரா. ந.சேதுரகுநாதன் கருதுகிறார்)

Translated verse

Show us your Beauty Freckle

You had  beauty-freckle on your chest
            When you broke kuruntam tree
Where did you hide it now
            Reveal us the hidden form.
In your land of water abundance
            The sparrow pecking grain in the paddy hay rick
Sleeps there as if on a quilt
            Flying back not to its tree abode.

Foot Note:

1.  This verse is quoted by Nacciniarkiniyar, one of the Commentators, in his commentary to Tolkappiam.  Prof. N.Sethuraghunathan opines it is a verse from Muttollayirm.

2.  Lord Tirumal in his incarnation as Krishna had a beauty freckle on his chest when he broke Atalantia missionis with his bare hands to give room to his doting girls (gopies) surrounding him.

3. Kuruntam - Atalantia missionisகுருந்தம் முத்தொள்ளாயிரம்+ Muttollayiram 117

திருமால் குருந்த மரத்தை வளைத்து ஆய்ச்சியருக்கு உதவினான். 
அப்போது அவனுக்குத் திருமாலின் கண்ணன் வடிவம்.
அவன் புனல் நாடனாகிய சோழன்  வடிவில் இப்போது வந்துள்ளான்.
"அந்தத் திருமால் உருவத்தை எனக்கு இப்போது காட்ட வேண்டும்" என்று அவனை அடைய விரும்பும் ஒருத்தி கூறுகிறாள்.

நெல்வயல் மிக்க புனல் நாட்டில் (சோழநாட்டில்) வயலில் மேயும் குருகுப் பறவைகளுக்கு அமர்ந்துகொண்டு இரை தேட மரம் கிடைக்கவில்லையாம். அதனால் அவை அங்குள்ள வைக்கோல் போரில் அமர்துகொண்டு இரை தேடுமாம். காவிரி நாட்டின் வளம் இவ்வாறு கூறப்படுகிறது.

பாடல்

குருந்தம் ஒசித்தஞான் றுண்டால் அதனைக்
கரந்த வடிமெக்குக் காட்டாய் - மரம் பெறா
போரிற் குருகுஉறங்கும் பூம்புனல் நீர்நாட!
மார்பிற் கிடந்த மறு.

மூவேந்தர் பிரிப்புப் பாடல் பகுப்புக்கு முந்தைய பதிப்பில் உள்ளவை
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு

முத்தொள்ளாயிரம் Muttollayiram 62


Translated by Dr. Pandiyan, I.A.S. 


62
சோழன் புகழ்
திங்கள் அதற்கோர் திலதம்

மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா - எங்கணும்
முற்றுநீர் வையம் முழுது நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை.

(கொற்றப் போர்க்கிள்ளி குடையின் தண்ணளி கூறல்)

Translated verse

The Moon is the Orb of Killi's White Parasol

The Mantara Mount for the handle
            The sapphire sky for the canopy leaf
The Full Moon for its central orb
            The entire world encircled by full seas
Will rule and protect giving shade
            The Royal Parasol of Killi
Who conducts expeditions of war
            Like the Lord of Death.

Foot Note:

Mantara - Mythical mount.  Also referring to the Himalayas.
Every land under the sky is given protection, shelter and
justice by Killi Valavan.Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி