Saturday, 26 January 2019

அகநானூறு Agananuru 147

  • குட்டி போட்ட புலியின் பசியைப் போக்க ஆண்புலி ஆண்மான் குரல் எங்காகிலுமிருந்து வருகிறதா என்று கேட்டுக்கொண்டிருக்கும் வழியில்  பொருள்தேடச் சென்ற அவரை தேடிக்கொண்டு செல்லத் தீர்மானித்திருக்கிறேன். 
  • வெள்ளி வீதியாரைப் போலத் தேடிக்கொண்டு செல்ல விரும்புகிறேன். 
  • உண்ணாமல் உடல் இளைத்து தோள் பொலிவிழந்து உயிர் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன். 
  • தலைவி தோழியிடம் சொல்கிறாள். 
பாலை
ஒளவையார் பாடியது
பாடல் பகுதி
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,  10
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினை இலனே!

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி