Wednesday, 23 January 2019

அகநானூறு Agananuru 116


  • ஊர! நீ நாணம் இல்லாதவன். பொரி போல் புன்கம் பூக்கள் பூத்துக் குலுங்கும் நீர்த்துறையில் ஒருத்தியோடு நேற்று புனலில் நீராடினாய் என்கின்றனர். 
  • அந்தச் செய்தியை நான் பொய் என்று சொல்லி மறைத்தேன். முடியவில்லை. என் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஊரே பரவிவிட்டது. 
  • கூடல் போர்க்களத்தில் செழியன் இருபெரு வேந்தரைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்தபோது  பாண்டியர் படை ஆரவாரம் செய்தது போல நீ ஒருத்தியோடு நீராடிய செய்தி பேசப்படுகிறது
  • தோழி தலைமகனை வாயில் மறுத்தது.

மருதம்
பரணர் பாடல்

பாடல் பகுதி

மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்     15
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி