Monday, 31 December 2018

புறநானூறு Purananuru 305

பார்ப்பான் ஒருவன் மதிலை முற்றுகை இட்டிருக்கும் மன்னனிடம் சமாதானத் தூது வருகிறான். அந்தப் பார்ப்பான் கூறிய சில சொற்களால் முற்றுகைப் போர் விலக்கிக்கொள்ளப் பட்டது.
மதுரை வேளாசான் பாடல் இதனைத் தெரிவிக்கிக்கிறது. 


புறநானூறு Purananuru 304

வீரன் ஒருவன் எதிராளி குதிரை வீரன் ஒருவனைப் பற்றிக் கூறுகிறான். 
நேற்று குதிரை வீரன் ஒருவன் என்னிடம் வெட்டுப் பட்டான். "நாளை என் தம்பியுடன் வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றான். அவன் குதிரை காற்றை விட வேகமாக வரும். அவன் சொன்னது பொய்யாகாது. கவனமாக இருக்கவேண்டும் என்று ஒருவன் தனக்குள் சொல்லிக்கொள்வதாக அரிசில் கிழாரின் இந்தப் பாடல் அமைந்துள்ளது.


புறநானூறு Purananuru 303

என் தலைவன் குதிரையைக் காணுங்கள். நேற்று அவன் குதிரை கடல் நீரைப் பிளந்துகொண்டு செல்லும் திமில் போல் படையைப் பிளந்துகொண்டு சென்றது. அப்போது என் தலைவன் பகையரசனின் யானையைக் கொன்றான். இன்று அந்தக் குதிரை நிலம் பின்னோக்கிச் செல்வது போல் பாய்ந்து செல்கிறது. இன்று எம் தலைவன் பகையரசனைக் கொல்வான்.
குதிரை மறம் பற்றி எருமை வெளியனார் இவ்வாறு பாடுகிறார். 


புறநானூறு Purananuru 302

தமக்காக யாழ் மீட்டும் மகளிர்க்கு ஊரைப் பரிசாக வழங்க எம் குதிரை  வீரன் துடித்துக்கொண்டிருக்கிறான். அவன் இதற்கு முன் கொன்ற யானைகள் வானத்து மீன், மழையில் விழும் துளி ஆகியவற்றின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.
குதிரை வீரனின் மறத்தை வெறி பாடிய காமக்கண்ணியார் இவ்வாறு கூறிப் பாடுகிறார். 


புறநானூறு Purananuru 301

இளங்குமரி கூந்தல் போலப் பலவாக வேல் நட்டு வேலி அமைத்திருக்கும் பாசறையில் அமைதியாக இருக்கும் போர்லீரச் சான்றீரே! எம் வீரன் குதிரையில் வருகிறான். உம் அரசனையும் அவன் ஏறியிருக்கும் யானையையும் அல்லாமல் பிறரைத் தாக்க மாட்டான். உம் அரசனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். - இப்படி ஒரு வீரன் எச்சரிப்பதாக  ஆவூர் மூலங்கிழார் பாடுகிறார். 


Sunday, 30 December 2018

புறநானூறு Purananuru 300

வீர! தோல் கவசம் தா, என்னைப் பாதுகாத்துக்கொள்கிறேன் என்று கூறுகிறாய். இதனை நீ அணிந்துகொண்டு பெரிய பாறைக்குப் பின்னால் ஒளிந்து நின்றாலும் இன்று நீ பிழைக்கப் போவதில்லை. நேற்று நீ ஒருவனை வெட்டி  வீழ்த்தினாயே அவன் தம்பி இன்று போருக்கு வருகிறான். அவன் கண்கள் அகலில் கிடக்கும் குன்றிமணி சுழல்வது போலச் சுழன்று உன்னைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஊரார் அவனுக்கு ஊட்டிய கள்ளுக்கு விலையாக ஒரு கோட்டையைத் தரவேண்டும் என்று அவன் துடிக்கிறான்.
அரிசில் கிழார் பாடல் இவ்வாறு கூறுகிறது.

குன்றிமணி

புறநானூறு Purananuru 299

உளுந்துக் கோதினைத் தின்ற சிற்றூர் மன்னன் குதிரை கடலைப் பிளந்துகொண்டு செல்லும் நாவாய் போலப் போர்க்களத்தில் பாய்கிறது. நெய் கலந்த சோற்றை உண்ட வளவயல் மன்னன் குதிரை, முருகன் கோயிலை விட்டு விலகிச் செல்லும் வீட்டுவிலக்குப் பெண்போல் நாணி ஒதுங்கிச் செல்கிறது.
இப்படிக் கூறுவது பொன்முடியார் பாடல்.


புறநானூறு Purananuru 298

வேந்தே! தானே கள்ளைப் பருகும் இவன் "கோட்டையை முற்றுகை இட நீ முந்திச் செல்" என்னும் நெடுமொழியைத் தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.
புலவர் ஆலியார் பாடல் இவ்வாறு கூறுகிறது.

போர்க்களம்

புறநானூறு Purananuru 297

இந்த வீரன் மட்டையுடன் நிற்கும் பனைமரம் போல விழுப்புண்ணில் கட்டு போட்டுக்கொண்டிருக்கிறான். காட்டுக்கோழி முட்டைகளை இவனுக்குத் தாருங்கள். அது இவன் புண்களை விரைவில் ஆற்றும். போர் இப்போது வேண்டாம். - ஆசிரியர் பெயர் அழிந்துபோன இந்தப் பாடல் இவ்வாறு கூறுகிறது.


புறநானூறு Purananuru 296

விழுப்புண்ணை ஆற்றிக்கொண்டிருப்பவர் வீடுகளில் வேப்பிலை செருகப்பட்டிருந்தது. கடுகெண்ணெய் ஊற்றிப் புகை எழுப்பிக்கொண்டிருந்தனர். எங்கும் ‘கல்’ என்னும் அமைதி. அந்த வீரன் வீட்டுக்கு ஆறுதல் கூற நெடுந்தகை மன்னனும் வருவான் என்று வெள்ளைமாளர் பாடல் கூறுகிறது. 


புறநானூறு Purananuru 295

அந்த வீரத் தாயின் மகன் போருக்குச் சென்றான். பகைவரைச் சாய்த்தான். வெட்டுப்பட்டுப் போர்களத்தில் அவன் கிடப்பதைத் தாய் பார்த்தாள். அவள் முலையில் வீரப்பால் ஊறியற்று. - ஔவையார் பாடல் இவ்வாறு கூறுகிறது.


புறநானூறு Purananuru 294

அரசே! படையுடன் பாசறையில் குடை நிழலில் நீ இருக்கிறாய். இவன் உன்னைத் தாக்க வரும் பகைவரைத் தன்முன் வருமாறு, நாகம் மணியை உமிழ்ந்து அதன் ஒளியில் இரை தேடுவது போல் அழைத்துக்கொண்டிருக்கிறான். இவ்வாறு வீரன் ஒருவன் கூறுவதாப் பெருந்தலைச் சாத்தனார் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 293


 • தன் பூமாலையை வாங்குபவர் தன் மனைக்கு வரவேண்டும் என்று எண்ணுவாளே அல்லாமல் பூவிலைப் பெண்டு வாங்குபவன் வீட்டுக்குச் செல்வாளா? 
 • போருக்கு அஞ்சா இந்த யானைவீரன் போருக்கு அஞ்சுபவர்மீது இரக்கம் கொள்வானா? 
 • நொச்சி நியமங் கிழார் பாடுகிறார். 

செய்தி

புறநானூறு Purananuru 292

அரசே! போருக்குச் செல்ல  இவன் கள் உண்ணவில்லை என்று இவன்மீது சினம் கொள்ள வேண்டாம். போர்களத்தில் "என் முறை வரட்டும்" என்று இவன் காத்திருக்க மாட்டான். வாய் பேசாமல் முன்னே எழுந்து சென்று எதிரிப் படையை முறியடிப்பான் - என்று ஆண்தகை ஒருவனை ஒரு வீரன் குறிப்பிடுவதாக அமைந்துள்ள இந்தப் பாடலைப் பாடியவர் விரிச்சியூர் நன்னாகனார்.


புறநானூறு Purananuru 291

ஆனிரைகளை மீட்டுத் தந்துவிட்டு இவன் மாண்டு கிடக்கிறான். நாம் எல்லாரும் இவன் புகழைப் பாடிக்கொண்டு இவன் உடலைப் பாதுகாப்போம். அரசன் வரட்டும். தன் மணிமாலையை இவனுக்குச் சூட்டட்டும் என்று மூதில் மகன் ஒருவன் சொல்வதாக அமைந்துள்ள இந்தப் பாடலைப் பாடியவர் புலவர் நெடுங்கழுத்துப் பரணர். 


புறநானூறு Purananuru 290

பட்டறையில் இரும்புக் கருவி செய்யும்போது கொல்லன் சம்பட்டி அடியைத் தாங்கும் பணைக்கல் போல இவன் தந்தையும் அவனுடைய தந்தையும்  உன் தந்தைக்கு இடர் வரும்போது எதிர்த்து நின்று தாங்கிக்கொண்டு போரிட்டனர். அதனால், கள்ளை இவனுக்குக் கொடுத்த பின்னர் நீ உண்ணுவாயாக. இவன் மழையில் நனையாமல் காப்பாற்றும் பனங்குடை போல உன்னைக் காப்பாற்றுவான் - என்று ஔவையார் அரசன் ஒருவனுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.


புறநானூறு Purananuru 289

இன்று பகைவன் பூமியைக் கைப்பற்றும் பூக்கோள் விழா. அரசன் படைத்தலைவனைத் தேர்ந்தெடுத்து, பொன்மணிகளைப் பரிசாக நல்க இருக்கிறான் என்று இழிசினன் முரசறைந்தான். - புலவர் கழாத்தலையார் பாடல் இதனைத் தெரிவிக்கிறது.


புறநானூறு Purananuru 288

போரில் இரண்டு யானைகள் மோதும்போது வென்று மடிந்த யானையின் தோலை உரித்துப் பதப்படுத்தாமல் பச்சையாகவே போர்த்தி அரசனுக்கு முரசினைச் செய்வது வழக்கம். அப்படிச் செய்யப்பட்ட முரசம் முழங்கிற்று. போரில், மார்பில் வேல் பாய்ந்த நிலையில், குருதி வெள்ளத்தில்  அந்த வீரன் கிடந்தான். அவனைப் பருந்துகள் தழுவிக்கொண்டிருந்தன.
கழாத்தலையார் பாடிய பாடலின் சிதைவு இவற்றைத் தெரிவிக்கிறது.


Saturday, 29 December 2018

புறநானூறு Purananuru 287

ஆனிரை மீட்கும் போர்க்களத்திலிருந்து திரும்பி ஓடாத பீடுடைய அவன் வானுலகில் உள்ள மகளிர் இன்பத்தைத் துய்க்கச் சென்றுவிட்டானே! மன்னன் அவனைப் போற்றி நெல்வளம் மிக்க ஊர் ஒன்றையே தந்திருக்கிறானே! அந்த ஊரை அவன் எவ்வாறு துய்ப்பான்?
சாத்தந்தையார் பாடியது.


புறநானூறு Purananuru 286

இறந்தவர் உடலைத் தூக்கிச் செல்வதற்காகக் கால் இல்லாத கட்டிலில் வைத்து வெள்ளைத் துணி போர்த்துவர். என் மகன் உடம்பை அவ்வாறு கூடப் போர்த்த முடியவில்லையே. கரந்தைப் போரில் முன்னேறிய அவன் உடலைக்கூடப் பார்க்க முடியவில்லையே. இவ்வாறு தாய் ஒருத்தி கூறுவதாக ஔவையார் பாடுகிறார். 


புறநானூறு Purananuru 285


 • ஆனிரை மீட்கும் கரந்தைப் போரில் மாண்ட வீரன் ஒருவனின் வேலையும், மார்புக் கவசத் தோலையும் கையில் ஏந்திக்கொண்டு அவனது சுற்றத்தார் அரசனைக் கண்டனர். அரசன் அவர்களுக்குச் சிற்றூர் ஒன்றை வழங்கினான். இந்தச் செய்தியை அவரகள் போர்ப்பாசறையில் உள்ளவர்களுக்குத் தெரிவிக்கின்றனர். 
 • அரிசில் கிழார் பாடல் இதனைத் தெரிவிக்கிறது. 

செய்தி

புறநானூறு Purananuru 284

தனியே தூது சென்ற மூதில் மகன் எதிர்த்தவனைப் பிணமாக்கி அவன் பல்லைப் பிடுங்கிக்கொண்டு ஏளனச் சிரிப்பு சிரித்தான்.
ஓரம்போகியார் பாடிய பாடல்.


புறநானூறு Purananuru 283

 • அழும்பில் நீர்வளம் மிக்க ஊர். மகளிர் அங்குத் மெற்றி விளையாடுவர். அங்கு வலம்புரிக் கோசர் மரபினர் வாழ்ந்தனர். அரும்பிலன் அவ்வூர் அரசன். தன் நாட்டை விரிவாக்க எண்ணித் தும்பை சூடிப் போருக்குப் புறப்பட்ட அவன் மாண்டுபோனான்.
 • பாணன் ஒருவன் பாடுவது போல் அடைநெடுங் கல்வியார் பாடுகிறார். 
 • சிதைந்துபோன பாடலில் கண்ட தெளிவு இது 
செய்தி

புறநானூறு Purananuru 282

அஞ்சா நெஞ்சுடன் போர்க்களத்தில் பகைவர்களைத் தடுத்து நிறுத்தி உலகுக்குத் தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்த அவனது கேடயம் மட்டும் கிடக்கிறதே, அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்று வினவினால், புலவர் போற்றும் நாக்கில் இருக்கிறான் என்று சொல்லுவேன் - என்கிறார் புலவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.


புறநானூறு Purananuru 281

போரில் காயம் பட்டவருக்கு மருத்துவம் செய்யும் வீட்டில் இருள் என்னும் இரவ இலை, வேப்பிலை ஆகியவற்றை வீட்டுக் கூரையில் செருகி வைப்பர். புண் பட்டவருக்கு வலி தெரியாமல் கவனத்தைத் திருப்ப யாழும் முழக்கும் கருவிகளும் இசைப்பர். கைகளால் மென்மையாக வெண்சிறு கடுகு எண்ணெய் உடம்பில் தெளிப்பர். மணி அடித்துக்கொண்டு காஞ்சிப் பண் பாடுவர். வீட்டில் நறுமணப் புகை எழுப்புவர். இப்படிப்பட்ட சங்க கால மருத்துவ மருத்துவ முறைகளைக் கூறி அரிசில் கிழார் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 


புறநானூறு Purananuru 280

கணவன் மார்பில் பட்ட விழுப்புண் பெரிதாக இருக்கிறது. எதிர் காலத்தைக் காட்டும் புள்-சகுனங்கள் சரியாக இல்லை. இவன் இறந்துவிட்டால் கைம்மைக் கோலத்துடன் உயிர் வாழமாட்டேன் என்று மனைவி கூறுவதாகச் சொல்லும் பாடலைப் புலவர் மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ளார்.


புறநானூறு Purananuru 279

அவள் மூதில் மகள். முந்தாம் நாள் நடந்த போரில் அவளது தந்தை யானையை வீழ்த்தி மாண்டான். நேற்று நடந்த போரில் அவளது கணவன் குதிரையை வீழ்த்தி மாண்டான். இன்று போர் முழக்கம் கேட்டதும் தனக்கு இருக்கும் ஒரே மகனை இளையன் என்றும் எண்ணாமல் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்பி வைக்கிறாள். இவள் எண்ணம் கெட்டொழியட்டும் என்று புலவர் ஒக்கூர் மாசாத்தியார் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 278


 • என் மகன் படையைக் கண்டு மனம் உடைந்து திரும்புகையில் கொல்லப்பட்டான் என்றால், அவனுக்குப் பாலூட்டிய என் முலையை அறுத்து எறிவேன் - என்று போர்க்களம் சென்று தன் மகன் மார்பில் வெட்டப்பட்ட காயத்துடன் கிடப்பதைக் கண்டு அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பெரிதாக அந்த முதியோள் மகிழ்ந்தாள்.
 • காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடல்

செய்தி

புறநானூறு Purananuru 277


 • தன் மகன் போர்க்களத்தில் களிற்றை வெட்டி வீழ்த்தி  மாண்டான் என்னும் செய்தி கேட்டு அவனைப் பெற்ற தாய் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அகிகமாக மகிழ்ந்தாள். என்றாலும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய்ப் பாய்ந்தது. 
 • இந்தக் கண்ணீர் பூவாக உதிர்ந்தது. கண் பூவை உதிர்த்தது. கண்பூ > பூங்கண் - இலக்கணப் போலி. (இல் முன் என்பது முன்றில் ஆனது போன்றது) பாடிய புலவர் பூங்கணூஉத்திரையார் (பூங்கண் உத்திரையார் - பூங்கண்ணைப் பாடிய உத்திரையார் - உத்திரட்டாதி நாளில் பிறந்ததால் உத்திரையார் எனப் பெயர் சூட்டப்பட்டவர்) 


Friday, 28 December 2018

புறநானூறு Purananuru 276

அவள் செம்முது பெண்டு. தலையில் நரைத்த மயிர். அது மணம் ஊட்டப்படாத மயிர். இரம் காழ் போலத் தொங்கும் முலை - கொண்டவள்
அவளது அன்புச் சிறுவன் போர்க்களத்துக்குச் சென்றான் அவன் எதிர்த்தவர் படையை நிலைகுலையச் செய்தான். எப்படி நிலை குலைந்தது? - மதுரைப் பூதன் இளநாகனார் பாடிகிறார். 

இரம் காழ் அன்ன திரங்கு கண் வன முலை
இலவங்காய் போல் அவள் முலை

புறநானூறு Purananuru 275

அவன் போர்க்களத்தில் தன் தோழனைக் காப்பாற்றப் பாய்ந்தான். விளைவு என்ன ஆயிற்று? - ஒரூஉத்தனார் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 274

அந்த வீரன் போர்க்களத்தில் பகைவன் கையிலிருந்த வாளைப் பிடுங்கித்
தன் மார்பில் தானே குத்திக்கொண்டான். ஏன்?  - உலோச்சனார் விளக்குகிறார்.

செய்தி

புறநானூறு Purananuru 273


 • எல்லார் குதிரைகளும் வந்துவிட்டன. என் மகனின் தந்தை ஊர்ந்து சென்ற குதிரை வரவில்லை. இரண்டு ஆறுகள் கூடுமிடத்தில் பின்புறம் ஒதுங்கி அல்லாடும் தனி மரம் போல அவன் போரிடும் குதிரை தத்தளிக்கிறதோ?
 • எருமை வெளியனார் பாடியது.


புறநானூறு Purananuru 272


 • கோத்திருக்கும் மணி போல் நீல வண்ணத்தில் கொத்தாகப் பூத்திருக்கும் நொச்சி கள்ளக் காதலர்க்கு  நிழல் தருவதையும், மகளிர் இடையில் தழையாடையாகக் கிடப்பதையும், கோட்டை மதிலின் மீது ஏறிப் போரிடும் வீரன் தலையில் போர்-அடையாளப் பூவாக விளங்குவதையும் பார்க்கிறேன். 
 • மோசி சாத்தனார் பாடியது.

மணி போல் நொச்சிப் பூ

புறநானூறு Purananuru 271


 • நொச்சி தழையும் பூவுமாக இருக்கையில் மகளிர் இடுப்பில் அணியும் தழையாடையாக இருக்கும்போதும், மதிலைத் தாக்கிய மறவன் மாண்டு கிடக்கும் நிலையில் அவன் பக்கத்தில் அவன் உன் கறியோ என்று எண்ணும்படிக் கிடப்பதையும் பார்க்கிறேன் 
 • வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.


தமிழ் - சமற்கிருதம் Tamil - Sanskrit

இளஞ்சென்னியன் உரை
 • தமிழில் வல்லின ஒலிகள் (Plosive) 6. இவற்றில் தமிழுக்கே உரிய ஒலி [ற]. ஏனைய ஒலிகள் 5-க்கும் வடமொழியில் ஒவ்வொன்றுக்கும் 3 வகையான அழுத்தம் தரும் ஒலிகளைக் கூட்டியுள்ளனர்
 • ன்றை எண்ணுவோம். எளிய ஒலி வளர்ச்சிப் பாதையில் விரிவது இயல்பு. விரிந்த மொழியொலி சுருங்கிற்று எனல் அறிவீனம்
 • எளிய தமிழொலி கடின சமக்கிருத ஒலியாக வளர்ந்தது. தமிழிலிருந்து சமற்கிருதம் வளர்ந்தது.
 • இதனைச் சுட்டும் இளஞ்சென்னியன் உரையைக் கேட்டு அவர் கருத்துக்குத் துணைநிற்போம்

புறநானூறு Purananuru 270

பேரில் பெண்டு ஒருத்தியை அவள் மகனுக்கு அரசன் செய்யும் சிறப்பினைக் காணும்படிப் புலவர் கழாத்தலையார் அழைக்கிறார். 
ஆனிரை மீட்டுவந்த அவன் மாண்டு கிடக்கிறான். அவன் ஆவி நன்னிலை பெறவேண்டும் என்று அரசனே அவனுக்காக வேள்வி செய்கிறான். 
செய்தி

புறநானூறு Purananuru 269

கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக் கொண்டுவந்தவன் ஒருவனின் கொடை பற்றி ஔவையார்  கூறுகிறார். 
அதிரல் பூ போன்ற வயிர மாலை சூட்டிவிட்டான். புலிக்கண் போன்ற தோற்றம் கொண்ட அகலில் சுடச்சுடப் பருகவும், பிழிந்த மகிழ் என்னும் தேறலும், வல்சி என்னும் நல்லுணவும் தந்தான்  
செய்தி

267, 268 பாடல்கள் கிடைக்கவில்லை

புறநானூறு Purananuru 266

வறுமையில் வாடும் தன்னை வயமான் சென்னி தனக்கு ஆசு (துணை) ஆக இருந்து தன் வறுமையைப் போக்க வேண்டும் என்று சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் வேண்டுகிறார். 

267, 268 பாடல்கள் கிடைக்கவில்லை


மழை எதனால் எங்கே எப்படி Rain-fall

மழை 
எங்கே, எதனால், எப்படி
பெய்யும்

precipitation = ஏறும் ஈரம் போலும்
humidity = இறங்கும் ஈரம் போலும்Thursday, 27 December 2018

புறநானூறு Purananuru 265

கடுமான் தோன்றலே! இப்போது நீ ஊருக்கு அருகில் இருக்கும் வறண்ட மேட்டு நிலத்தில், கல்லாக நிற்கிறாய். பசுக்களை மேய்க்கும் கோவலர்  வேங்கைப் பூக்களையும், பனைமட்டை மாலைகளையும் உன் மேல் சாத்தியுள்ளனர். 
பரிசிலர் பெறும் செல்வமும், வேந்தருக்காகப் போராடிக் கரந்தைப் போரில்  தரும் வெற்றியும் உன்னோடு போய்விட்டதே
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது

புறநானூறு Purananuru 264

கன்றுகளுடன் பசுக்களை  மீட்ட நெடுந்தகைக்குக் கல் நட்டனர். பாறைகளை மதில் போல் அடுக்கிப் பதுக்கைக்  கோயில் உருவாக்கினர். நடுகல்லுக்கு மயில் பீலி அணிவித்து மாலை போட்டனர். கல்லில் அவன் பெயரைப் பொறித்து வைத்துள்ளனர். நெடுந்தகை இவ்வாறு நடுகல் ஆகிவிட்டான் என்பது தெரியாமல் பாணர் சுற்றம் அவனைத் தேடிக்கொண்டு இன்னும் வருகிதே
உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

புறநானூறு Purananuru 263

பறை முழக்கிக்கொண்டு செல்லும் இரவல! செல்லும் வழியில் இருக்கும் நடுகல்லைத் தொழுதுவிட்டுச் செல்க. ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் கலிங்குக் கற்கள் போல் பகைவர்  கவரும் ஆனிரைகளைத் தடுத்து நிறுத்தியவனின் நடுகல் அது - இவ்வாறு கரந்தை வீரனின் கையறுநிலை பற்றி ஒரு புலவர் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 262

ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு என் தலைவன் வெட்சிப்போர் வீரன் வருகிறான். அவனை வரவேற்க நறவுக் கள்ளை மொந்தையில் மாட்டி வையுங்கள். காளைக் கறியை சமையுங்கள். பசுமையான இலைகளைப் பரப்பிப் பந்தல் போடுங்கள். ஆற்று மணலைக் கொண்டு வந்து பந்தலில் பரப்புங்கள் 
மதுரைப் பேராலவாயார் பாடியது.

புறநானூறு Purananuru 261

கரந்தைப்போர் வீரன் நடுகல் ஆயினான். அவன் மனைவி மொட்டைத் தலையுடன் கைம்மை நோன்பு இருக்கிறாள். வீட்டு விலக்கு நாளில் பெண் செயலற்று இருப்பது போல் அவன் வீட்டு முற்றம் செயலற்றுக் கிடக்கிறது. பாணர்க்கு நறவுக் கள்ளும், பெருஞ்சோறும் வழங்கிய முற்றம் வெறிச்சோடிக் கிடக்கிறது. அன்று உணவு வழங்கிய பாத்திரங்கள் இன்று தண்ணீர் இல்லாத ஆற்றில் கிடக்கும் ஓடம் போலக் கிடக்கின்றன. 
இதனைக் கண்டு என் கண்கள் இருண்டு சோர்கின்றன. 
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 260

நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ள தன் புரவலன் பெயரைப் பாணன் பார்க்கிறான். தன்னைக் காப்பாற்ற அவன் இல்லையே என்று பிதற்றுகிறான். 
இதனைக் கண்ட புலவர் அவனை ஆற்றுப்படுத்துகிறார் - ஆறுதல் கூறுகிறார்
ஆனிரை மீட்க இவன் போராடியபோது குருதி ஆறு ஓடிற்று. துடியன் தன் துடியை முழக்கினான். அந்தத் துடி முழக்கத்தைக் கேட்டுக்கொண்டே கவரும் ஆனிரையைத் தடுத்து மீட்டான். இப்போது அவன் யாரும் பெறமுடியாத உலகுக்குச் சென்றுவிட்டான். அவனை எண்ணி வருந்தும் நீ ஆறுதல் பெறுக.
வடமோதங் கிழார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 259

வெட்சி வீரன் ஆனிரைகளைக் கவர்வதைத் தடுத்து மீட்பவன் கரந்தை வீரன்.
வெட்சி வீரனே! கவனமாக இரு. கரந்தை வீரன் இலைகளுக்கு இடையில் மறைந்துகொண்டிருக்கிக்கிறான்
அவனைப் பார். மேலும் முன்னேறிச் செல்லாதே. முருகன் சாமி ஏறி விளையாடும் புலைத்தி போல அவன் உன்மேல் பாயவும் கூடும்
கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

புறநானூறு Purananuru 258

அவன் இளந்தாடி முளைத்திருக்கும் காளை. ஒரு சுற்று எல்லாரும் உணவு உண்பதற்கு முன்னர் ஆனிரைப் பெருங்கூட்டத்தைக் கொண்டுவந்து நிறுத்துவான். கறிக்குளம்பு தின்ற கையைக்கூடக் கழுவாமல் வில்லை எடுத்துக்கொண்டு அவன் ஆனிரை கவரும் வெட்சிப் போருக்குச் சென்றுள்ளான். அவன் திரும்பி வருவதற்கு முன்னர் காந்தாரம் என்னும் கள் இருக்கும் சாடியை யாருக்கும் திறக்காதீர்கள். அவன் வந்தால் சினம் கொள்வான். 
புலவர் உலோச்சனார் பாடியது.

புறநானூறு Purananuru 257

இவன் யார்? இரக்கம் கொள்ளத்தக்கவனாக உள்ளான்.
செருப்பில் காலுக்கடியில் இருந்துகொண்டு உருத்தும் பரல் கல் போலப் பகைவருக்கு இவன் உருத்திக்கொண்டு இருக்கிறான். தன் வீட்டில் பசுக்கள் இருக்கின்றனவே என்று அவன் எண்ணவில்லை. பகைநாட்டில் இருக்கும் பசுக்களைக் கவர அவற்றைத் தன் விரலால் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறான். - இவ்வாறு வெட்சிப்போர் ஒன்றைக் குறிப்பிட்டு ஒரு புலவர் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 256

ஊருக்கெல்லாம் ஈமத் தாழி செய்யும் குயவனே! நீ தாழி செய்யும் சக்கரம் சுழலும்போது அந்தச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியும் சுழல்வது போல நானும் என் காதலன் செல்லுமிடமெல்லாம் சென்று திரிந்தேன். இப்போது என் காதலன் மாண்டுபோனான். அவனைப் புதைக்கத் தாழி செய்கிறாய். அவனுடன் சேர்த்து என்னையும்  புதைக்கும் அளவிக்கு அகன்ற உள்ளிடம் கொண்டதாக தாழியைச் செய்து தருக என்று காதலி கூறுவதாகப் புலவர் ஒருவர் பாடுகிறார். 


புறநானூறு Purananuru 255

ஊருக்குத் தெரியாமல் காதலனுடன் காதலி செல்கிறாள். வழியில் தாக்க வந்த புலியுடன் போராடி காதலன் காயம் பட்டுக் கிடக்கிறான். வலி தாங்க முடியாமல் அவன் ஐயோ என்கிறான். 
ஐயோ என்னும் சொல்லைக் கேட்டதும் அவள் மீண்டும் புலி வந்துவிட்டதோ என அஞ்சுகிறாள். அவன் அவளை அணைத்துக்கொள்கிறான். அவன் அணைப்பிலிருந்து அவளால் தன் மார்பை எடுக்க முடியவில்லை. மரத்தடி நிழலுக்குச் செல்வோம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள். நலம் பெறுவான் என்பது அவள் நம்பிக்கை. 
வன்பரணர் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 254

காதலனுடன் ஓடிவந்த காதலி கதறுகிறாள். அவளைக் காட்டு விலங்கிடமிருந்து காப்பாற்றப் போராடி மார்பில் மண் பட்டு அவன் விழுந்து கிடக்கிறான். அவள் எழுப்பியபோது அவன் எ.வில்லை. 
நீ இல்லாவிட்டால் எனக்கு வளையல் ஏது? வளையல் இல்லாத கையுடன் ஊருக்குள் செல்வேனா? உனக்கு நேர்ந்தது தெரிந்தால் உன் தாய் என்ன ஆவாள்? உறவினர்கள் கதறுவார்களே. ஆதலால் நீ இறந்தால் நானும் இறந்துபோவேன் - என்கிறாள், காதலி. 
கயமனார் பாடியது.
செய்தி

புறநானூறு Purananuru 253

காதலனுடன் காதலி சென்றாள். காதலனை இளைஞர்கள் தாக்க அவன் விழுந்து கிடக்கிறான். காதலனிடம் காதலி சொல்கிறாள் 
எனக்காக வருந்தாதே. கணவனை இழந்ததால் என் வளையலைக் களைந்துவிட்டு வெறுங்கை வீசிக்கொண்டு இனி நான் வாழ்வேனா? வாழமாட்டேன் என்கிறாள். 
இப்படிப்பட்ட பண்பாட்டைப் புலவர்  குளம்பாதாயனார் உணர்த்திப் பாடிய பாடல் இது. 
செய்தி

புறநானூறு Purananuru 252

இன்று அவன் மழை வெள்ளம் கொட்டும் நீரில் கலங்கல் நீரில் நீராடியதால் தில்லைக் காய்கள் போல் தோன்றும் சடைமுடி கொண்டிருக்கிறான். உணவுக்காகத் தாளி இலையைப் பறிக்கிறான் 
அன்று அவன் வீட்டில் விளையாடும் மயில் போன்ற மகளிரை நயமான சொல்வலை வீசிப் பிடிப்பவன் - சொல்வலை வேட்டுவன் -
வாழ்வு நிலையாமை பற்றிப் புலவர் மாற்பித்தியார் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

புறநானூறு Purananuru 251

அன்று மகளிர் இன்பத்தில் மகிழ்ந்து திளைத்த அவன் இன்று துறவு பூண்டு சடைமுடியுடன் தவம் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்ப வாழ்க்கை நிலைக்கவில்லை. 
வாழ்வின் நிலையாமை பற்றிப் புலவர்  மாற்பித்தியார் இவ்வாறு கூறுகிறார். 
செய்தி

Wednesday, 26 December 2018

புறநானூறு Purananuru 250

அவன் பந்தல் போட்டு உணவு வழங்கிய வள்ளல். அவன் பெருங்காடு அடைந்தான். அவன் புதல்வனுக்காக அவன் மனைவி வாழ்கிறாள். 
கூந்தலைக் களைந்துவிட்ட அவன் மனைவி கையில் வளையல் இல்லாமல், அல்லி இலையில் உணவை வைத்து உண்கிறாள். அவன் பந்தல் வெறிச்சோடிக் கிடக்கிறது

புறநானூறு Purananuru 249

நேற்று அவள் கணவன் அரசன். இன்று உயர்நிலை உலகம் அடைந்தான். அவன் மனைவி கண்ணீருடன் முறம் அளவு தரையை மெழுகுகிறாள். அதில் உணவை வைத்து அவனுக்குப் படையல் செய்துவிட்டு உண்பாள். 
தும்பி சேர் கீரனார் பாடல் 
செய்திபுறநானூறு Purananuru 248

அது வெள்ளை நிறப் பூ மலரும் ஆம்பல் கொடி - அல்லிக் கொடி
அவள் இளமையாக இருந்தபோது அவள் அணிந்து மகிழத்தக்க தழையாடை செய்ய இது பயன்பட்டது 
இப்போது, அவள் கணவன் மாண்டபொழுது, துன்பம் தரும் காலை வேளையில் மட்டும் - ஒருவேளை மட்டும் - அவள் உணவு வைத்து உண்ணும் உண்கலமாகப் பயன்படுகிறது
இந்தக் கொடியிலை இரக்கம் கொள்ளத் தக்கதாக உள்ளது
ஒக்கூர் மாசாத்தனார் பாடுகிறார். 

புறநானூறு Purananuru 247

கணவன் பூத பாண்டியன் இறந்த பின்னர் முரசு முழங்கும் அரண்மனையில் தனியே வாழ அவன் மனைவி பெருங்கோப்பெண்டுக்கு விருப்பம் இல்லை. தன் இளமையைப் பற்றி அவள் எண்ணவில்லை. அவள் உயிர் நடுங்குகிறது. 
நீர் வடியும் கூந்தலோடு வருகிறாள். அவள் கண்களில் கலக்கம் - அஞர். கணவன் உடலை எரிக்கும் பெருங்காடு நோக்கிச்  செல்கிறாள்
புலவர் மேலும் கூற விரும்பவில்லை. அது அவள் முடிந்த ஆனந்தத் துன்பம் 

புறநானூறு Purananuru 246

இறந்த கணவன் எரியும் தீயில் இறங்கி உயிருள்ள மனைவி தன்னை மாய்த்துக்கொள்ளச் செல்லும்போது தடுத்த சான்றோர்களுக்கு அவள் கூறிய பாடல் இது.  
பூத பாண்டியன் - கணவன்பெருங்கோப்பெண்டு - மனைவி 
கைம்மைக் கோல வாழ்க்கையின் கொடுமையை நினைக்கும்போது, எரியும் தீயும், தாமரை பூத்திருக்கும் குளத்து நீரும் தனக்கு ஒன்றுதான் - என்கிறாள். 
செய்தி

புறநானூறு Purananuru 245

"என் மனைவி பெருங்கோப்பெண்டு இறந்த பின்னர் கணவனாகிய நான் உயிர் வாழ்வது என்ன பண்பு என்று சொல்லி மன்னன் மாக்கோதை வருந்தும் பாடல் இது. 
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - என்று இவனை இந்தப் பாடலின் கொளு குறிப்பிடுவதால் இவன் கோட்டம்பலம் என்னுமிடத்தில் தானும் தன் உயிரை மாய்த்துக்கொண்டான் எனத் தெரியவருகிறது. 
செய்தி

புறநானூறு Purananuru 244

சிதைந்த பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது.
பாணர் தலையில் பூ இல்லை
விறலியர் கைகளில் வளையல் இல்லை
இரந்து செல்வோரும் இல்லை
வள்ளல் மாண்டான்

புறநானூறு Purananuru 243

புலவர் தொடித் தலை விழுத்தண்டினார் இளமை நிலைக்காது என்று பாடுகிறார். 
பாவை விளையாடும் மகளிரின் இளமை, அவர்களை மயக்க இளைஞர் செய்யும் துடுக்குத்தன இளமை ஆகியவை  தலை நடுக்கத்துடன் கோல் ஊன்றி நடந்து வாயில் சொல் தடுமாறும் முதுமையில் எங்குச் சென்றதோ என்கிறார். 
செய்தி

புறநானூறு Purananuru 242

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் மாண்டுவிட்டான் என்று அவன் நாட்டில் பூத்துக் கிடந்த முல்லைப் பூவை இளஞ்சிறுவர்கள் அணிவதில்லை. மகளிரோ, பாணனோ, பாடினியோ சூடவில்லை - என்கிறார் குடவாயிற் கீரத்தனார்.


புறநானூறு Purananuru 241

பரிசிலைத் தேரில் ஏற்றி இரவலர்க்குத் தந்த ஆய் விண்ணுலகம் வருகிறான் என்று இந்திரன் அரண்மனையில் ஆயை வரவேற்க முரசு முழங்குகிறது என்கிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 


புறநானூறு Purananuru 240

தன்னைப் பாடிக்கொண்டு வருபவர்களுக்குக் குதிரை யானை தேர் நாடு ஊர் - முதலானவற்றை  வழங்கியவன் அரசன் ஆய். அவன் தன் மனைவியருடன் மேலோர் உலகம் சென்றுவிட்டான். மரப்பொந்தில் இருக்கும் கூகை 'சுட்டுக் குவி' - என்று சொல்லிக் குழறுகிறது.  அவன் உடம்பு சுட்டு எரிக்கப்பட்டது.  புலவர்கள் புரவலனைக் காணாமல் தன் நாட்டுக்குத் திரும்புகின்றனர். - புலவர் குட்டுவன் கீரனார் இதனைச் சொல்லிப் பாடுகிறார்.


புறநானூறு Purananuru 239

நம்பி நெடுஞ்செழியனின் தோற்றம், பண்பு முதலானவற்றைப் பாராட்டிப்  பாடிய புலவர் பேரெயின் முறுவலார் புகழால் உயர்ந்து நிற்கும் இவன் உடம்பை மண்ணில் புதைத்தால்தான் என்ன? தீயில் இட்டுக் கொளுத்தினால்தான் என்ன என்று கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி